ஹோண்டா ஜாஸ் காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் அறிமுகம்!

Written By:

புதுப்பொலிவு பெற்ற ஹோண்டா ஜாஸ் கார் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

To Follow DriveSpark On Facebook, Click The Like Button
ஹோண்டா ஜாஸ் காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் அறிமுகம்!

பிரிமியம் ஹேட்ச்பேக் கார் செக்மென்ட்டில் மிகச் சிறந்த தேர்வுகளில் ஒன்றாக ஹோண்டா ஜாஸ் கார் விளங்குகிறது. இந்த நிலையில், சந்தைப் போட்டியை சமாளிக்கும் விதத்தில், புதிய ஹோண்டா ஜாஸ் கார் மாடலை ஹோண்டா கார் நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது.

ஹோண்டா ஜாஸ் காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் அறிமுகம்!

அடுத்த மாதம் பிராங்க்ஃபர்ட் மோட்டார் ஷோவில் சர்வதேச அளவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் நிலையில், இந்த காரின் படங்கள் மற்றும் விபரங்கள் இப்போது வெளியிடப்பட்டுள்ளன.

ஹோண்டா ஜாஸ் காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் அறிமுகம்!

புதிய ஹோண்டா ஜாஸ் காரின் முகப்பு க்ரில் அமைப்புடன் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதேபோன்று, பின்புறத்தில் பம்பர் மாற்றம் கண்டுள்ளது.

ஹோண்டா ஜாஸ் காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் அறிமுகம்!

இந்த காரில் டைனமிக் என்ற புதிய வேரியண்ட்டும் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. ஸ்போர்ட் வேரியண்ட்டில் முன்புறத்தில் ஸ்பிளிட்டர்கள், பின்புறத்தில் டிஃபியூசர்கள் ஆகியவை கொடுக்கப்பட்டு இருப்பதுடன், பம்பரில் சிவப்பு வண்ண கோடு கொடுக்கப்பட்டு இருப்பதும் கவர்ச்சியை அதிகரித்து காட்டுகிறது.

ஹோண்டா ஜாஸ் காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் அறிமுகம்!

இந்த காரில் புதிய எல்இடி ஹெட்லைட்டுகள், சைடு ஸ்கர்ட்டுகள், ரூஃப் ஸ்பாய்லர் மற்றும் 16 இன்ச் அலாய் வீல்கள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.

ஹோண்டா ஜாஸ் காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் அறிமுகம்!

ஹோண்டா ஜாஸ் காரின் டைனமிக் வேரிண்ட்டில் உட்புறத்தில் இருக்கைகளில் ஆரஞ்ச் வண்ண அலங்கார தையல் வேலைப்பாடுகள் கவர்வதாக இருக்கின்றன. ஸ்டீயரிங் வீல் மற்றும் கியர் லிவரில் லெதர் கவர் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.

ஹோண்டா ஜாஸ் காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் அறிமுகம்!

இந்த கார் புதிய 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷனிலும் வெளியிடப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 128 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கும். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது சிவிடி கியர்பாக்ஸ் ஆப்ஷனில் கிடைக்கும்.

ஹோண்டா ஜாஸ் காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் அறிமுகம்!

சர்வதேச அளவில் 1.3 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷனில் கிடைக்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டு இருக்கும். அடுத்த மாதம் முறைப்படி அறிமுகம் செய்யப்பட இருக்கும் இந்த கார் வெளிநாடுகளில் வரும் ஜனவரி மாதம் முதல் டெலிவிரி கொடுக்கப்பட இருககிறது.

English summary
Japanese carmaker Honda has unveiled the facelifted Jazz hatchback ahead of its debut at the 2017 Frankfurt Auto Show in September 2017
Story first published: Monday, August 14, 2017, 19:11 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos