ஹோண்டா ஜாஸ் காரின் ஸ்பெஷல் எடிசன் மாடல் அறிமுகம்- முழு விபரம்!

Written By:

பண்டிகை காலத்தில் வாடிக்கையாளர்களை கவரும் விதத்தில், கூடுதல் சிறப்பம்சங்கள் நிறைந்த ஹோண்டா ஜாஸ் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. ஹோண்டா ஜாஸ் பிரிவிலேஜ் எடிசன் என்ற பெயரில் இந்த மாடல் வந்துள்ளது. ஹோண்டா ஜாஸ் காரின் வி வேரியண்ட்டில் கூடுதல் வசதிகள் சேர்க்கப்பட்டு ஸ்பெஷல் மாடலாக அறிமுகமாகி உள்ளது.

ஹோண்டா ஜாஸ் காரின் ஸ்பெஷல் எடிசன் மாடல் அறிமுகம்- முழு விபரம்!

ஹோண்டா ஜாஸ் பிரிவிலேஜ் எடிசன் மாடல் என்பதை காட்டும் விதத்தில் காரின் வெளிப்புறத்தில் பேட்ஜ்கள் பதிக்கப்பட்டு இருக்கின்றன. சாதாரண ஹோண்டா ஜாஸ் காரிலிருந்து இந்த பேட்ஜ்கள்தான் வெளிப்புறத்தை வேறுபடுத்துகின்றன.

ஹோண்டா ஜாஸ் காரின் ஸ்பெஷல் எடிசன் மாடல் அறிமுகம்- முழு விபரம்!

இந்த காரில் 7 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சாதனம் பொருத்தப்பட்டு இருக்கிறது. சாட்டிலைட் நேவிகேஷன் மற்றும் மிரர் லிங்க் வசதிகள் இடம்பெற்றிருக்கின்றன. இந்த இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் 1.5 ஜிபி ஸ்டோரேஜ் வசதியும் உண்டு. புளுடூத், யுஎஸ்பி போர்ட், மைக்ரோஎஸ்டி கார்டுகளை இணைக்கும் வசதிகளும் இருக்கின்றன.

Recommended Video
Tata Tiago XTA AMT Launched In India | In Tamil - DriveSpark தமிழ்
ஹோண்டா ஜாஸ் காரின் ஸ்பெஷல் எடிசன் மாடல் அறிமுகம்- முழு விபரம்!

ஹோண்டா ஜாஸ் பிரிவிலேஜ் எடிசன் மாடலில் ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி வசதி, ரிவர்ஸ் கேமரா, பவர் அட்ஜெஸ்ட் வசதியுடன் வெளிப்புற ரியர் வியூ மிரர்கள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.

ஹோண்டா ஜாஸ் காரின் ஸ்பெஷல் எடிசன் மாடல் அறிமுகம்- முழு விபரம்!

மேலும், இரண்டு ஏர்பேக்குகள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் ஆகியவை நிரந்தர பாதுகாப்பு அம்சங்களாக இடம்பெற்று இருக்கின்றன. பெட்ரோல் எஞ்சின் மாடலின் சிவிடி கியர்பாக்ஸ் பொருத்தப்பட்ட வேரியண்ட்டில் பேடில் ஷிஃப்ட் வசதியும் உள்ளது.

ஹோண்டா ஜாஸ் காரின் ஸ்பெஷல் எடிசன் மாடல் அறிமுகம்- முழு விபரம்!

ஹோண்டா ஜாஸ் பிரிவிலேஜ் எடிசன் மாடல் பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கும். இந்த காரில் 89 பிஎச்பி பவரையும், 110 என்எம் டார்க் திறனையும் வழங்கும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. 5 ஸ்பீடு மேனுவல் அல்லது சிவிடி கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கிறது.

ஹோண்டா ஜாஸ் காரின் ஸ்பெஷல் எடிசன் மாடல் அறிமுகம்- முழு விபரம்!

டீசல் மாடலில் 98 பிஎச்பி பவரையும், 200 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்ல 1.5 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டு இறுக்கிறது. இந்த மாடலில் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் கிடைக்கும். டீசல் மாடல் லிட்டருக்கு 27.3 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்படுகிறது. இந்தியாவின் சிறந்த மைலேஜ் தரும் மாடல்களில் ஒன்றாகவும் கூற முடியும்.

ஹோண்டா ஜாஸ் காரின் ஸ்பெஷல் எடிசன் மாடல் அறிமுகம்- முழு விபரம்!

ஹோண்டா ஜாஸ் காரின் பிரிவிலேஜ் எடிசன் மாடல் ரூ.7.36 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. பண்டிகை காலத்தில் கார் வாங்க திட்டமிட்டிருப்பவர்களுக்கு இது சிறந்த தேர்வுகளில் ஒன்றாக இருக்கும்.

English summary
Honda Jazz Privilege Edition launched in India. Prices for the all-new Honda Jazz Privilege Edition start at Rs 7.36 lakh ex-showroom (Delhi).
Story first published: Saturday, August 26, 2017, 9:17 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos