மொபிலியோ எம்.பி.வி கார்களுக்கு மூடு விழா நடத்திய ஹோண்டா இந்தியா..!!

மொபிலியோ எம்.பி.வி கார்களுக்கு மூடு விழா நடத்திய ஹோண்டா இந்தியா..!!

By Azhagar

ஹோண்டா நிறுவனத்தின் மொபிலியோ எம்.பி.வி ரக காரின் விற்பனை இந்தியாவில் நிறுத்துப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

ஹோண்டா மொபிலியோ கார் விற்பனை நிறுத்தம்..!!

2014ல் டொயோட்டாவின் தயாரிப்பான இன்னோவா காருக்கு போட்டியாக ஹோண்டா அறிமுகப்படுத்திய எம்.பி.வி ரக கார் தான் மொபிலியோ.

ஹோண்டா மொபிலியோ கார் விற்பனை நிறுத்தம்..!!

மேலும் இந்த கார் இன்னோவா மாடலுக்கு மட்டுமில்லாமல், மாருதி சுசுகியின் எர்டிகா காருக்கும் போட்டியாக சந்தையில் களமிறங்கியது.

ஹோண்டா மொபிலியோ கார் விற்பனை நிறுத்தம்..!!

பிரையோ ஹேட்ச்பேக் மாடல் காருக்கான பின்னணியுடன் வெளியான மொபிலியோ எம்.பி.வி பெரியளவில் இந்திய சந்தையை ஆக்கிரமிக்கவில்லை.

ஹோண்டா மொபிலியோ கார் விற்பனை நிறுத்தம்..!!

இதை கவனத்தில் கொண்டு ஆர்.எஸ் வெரியண்டுடன் மொபிலியோ காரை வாடிக்கையாளர்களிடம் பிரபலப்படுத்த ஹோண்டா எண்ணியது,

ஆனாலும் அந்த திட்டமும் பெரியளவில் மொபிலியோ எம்.பி.வி காருக்கான விற்பனை திறனை இந்தியாவில் உருவாக்கவில்லை.

ஹோண்டா மொபிலியோ கார் விற்பனை நிறுத்தம்..!!

தொடர்ந்து நிலவிவந்த மந்தமான விற்பனை காரணமாக மொபிலியா காரின் விற்பனையை இந்தியாவில் தற்காலிகமாக நிறுத்துவதாக ஹோண்டா தற்போது அதிகாரப்பூர்வ தகவலை அறிவித்துள்ளது.

ஹோண்டா மொபிலியோ கார் விற்பனை நிறுத்தம்..!!

இதை அறிவிப்பதற்கு முன்னர் இந்தியாவில் உள்ள அனைத்து டீலர்களும் ஹோண்டா மொபிலியோ காரை விற்பனை செய்து விட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த மாடல் கார் யாரிடத்திலும் ஸ்டாகில்லை.

ஹோண்டா மொபிலியோ கார் விற்பனை நிறுத்தம்..!!

விரைவில் புதிய மேம்படுத்தப்பட்ட மொபிலியோ எம்.பி.வி காரை வெளியிடப்படுகிறது. அதற்காகவே இந்த தற்காலிக நிறுத்தத்தை ஹோண்டா அறிவித்துள்ளது.

ஹோண்டா மொபிலியோ கார் விற்பனை நிறுத்தம்..!!

எனினும் இது உறுதியான தகவல் இல்லை என்றும், எம்.பி.வி ரகத்தில் மேம்படுத்தப்பட்ட மொபிலியோ இல்லாமல் புதியதொரு காரை தயாரிக்க ஹோண்டா திட்டமிட்டு வருவதாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹோண்டா மொபிலியோ கார் விற்பனை நிறுத்தம்..!!

பிரையோ ஹேட்ச்பேக் காரின் நீடிக்கப்பட்ட வடிவில் வெளியான மொபிலியோ எம்.பி.வி, பெட்ரோல் மற்றும் டீசன் என இரு எஞ்சின் மாடல்களிலும் வெளியானது.

ஹோண்டா மொபிலியோ கார் விற்பனை நிறுத்தம்..!!

இந்த ஆண்டு தொடக்கத்தின் போது ப்ரீமியம் ரக மாடல்களுக்கான உற்பத்தியில் ஹோண்டா இனி கவனம் செலுத்தும் என அறிவிக்கப்பட்டது.

ஹோண்டா மொபிலியோ கார் விற்பனை நிறுத்தம்..!!

அப்போதே மொபிலியோ கார் உட்பட சில மாடல்களின் விற்பனை இந்தியாவில் நிறுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

அதனால் தற்போதைய இந்த அறிவிப்பினால் ஆட்டோமொபைல் உலகம் பெரியளவில் ஆச்சர்யம் அடையவில்லை.

Most Read Articles
மேலும்... #ஹோண்டா #honda
English summary
Read in Tamil- The short stint in India, the Mobilio has been officially discontinued. Click for Details...
Story first published: Thursday, July 6, 2017, 9:51 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X