இந்தியாவிலிருந்து விடைபெறும் ஹொண்டா மொபிலியோ கார்!

Written By:

ஹோண்டாவின் மல்டி பர்பஸ் வெஹிகிலான மொபிலியோ கார்களுக்கு இந்தியாவில் போதிய வரவேற்பு கிடைக்காததால் அதன் உற்பத்தியை நிறுத்துவதாக ஹோண்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் கையிருப்பில் இருந்த கார்களையும் விற்றுவிட்டதாக தெரிவித்துள்ளது.

 மொபிலியோ கார் உற்பத்தியை நிறுத்தும் ஹோண்டா!

ஹோண்டா நிறுவனத்தால் கடந்த 2014ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது மொபிலியோ கார்கள். இந்நிலையில், கடந்த மாதத்தில், ஒரு மொபிலியோ காரை கூட இந்தியாவில் விற்கமுடியாமல் திணறியது ஹோண்டா நிறுவனம். இதன் காரணமாகவே உற்பத்தியை நிறுத்தும் முடிவிற்கு ஹோண்டா வந்துள்ளதாக கூறப்படுகிறது.

 மொபிலியோ கார் உற்பத்தியை நிறுத்தும் ஹோண்டா!

இது குறித்து அந்நிறுவனத்தின் தலைவரும் செயல் அதிகாரியுமான யோய்சிரோ உனோ கூறுகையில், "கார் உற்பத்தியில் இந்தாண்டு முதல் சில பாதுகாப்பு விதிமுறைகளை இந்திய அரசு வகுத்துள்ளது, ஆனால் தற்போதுள்ள மொபிலியோ கார்கள் அந்த விதிமுறைகள்படி தயாரிக்கப்படவில்லை" என்றார்.

 மொபிலியோ கார் உற்பத்தியை நிறுத்தும் ஹோண்டா!

மேலும், புதிய விதிமுறைகள்படி மொபிலியோ கார்களை தயாரிக்க அதிகமான முதலீடும், சில மாற்றங்களும் தேவைப்படுகின்றன. ஆயினும் தற்போதுள்ள மொபிலியோ கார்களின் விற்பனை அந்த அளவுக்கு இல்லை என்றார்.

 மொபிலியோ கார் உற்பத்தியை நிறுத்தும் ஹோண்டா!

இதுமட்டுமல்லாமல், புதிய பாதுகாப்பு விதிமுறைகள்படி மொபிலியோ கார்களை தயாரிக்க எந்த அளவிற்கு முதலீடு தேவைப்படும் எனவும் ஹோண்டா நிறுவனம் மதிப்பிட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

 மொபிலியோ கார் உற்பத்தியை நிறுத்தும் ஹோண்டா!

2017ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது முதல் தற்போது வரை 40,789 மொபிலியோ கார்களை இந்தியாவில் விற்பனை செய்துள்ளது ஹோண்டா நிறுவனம். இவை மாருதி எர்டிகா, ரெனால்ட் லாட்ஜி ஆகிய கார்களுடன் போட்டியில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

 மொபிலியோ கார் உற்பத்தியை நிறுத்தும் ஹோண்டா!

இந்தியாவில் மீண்டும் மொபிலியோ கார்களை அறிமுகப்படுத்துவதா வேண்டாமா என்ற முடிவினை அடுத்த இரண்டு மாதங்களில் ஹோண்டா நிறுவனம் ஆலோசனை செய்து அறிவிக்க உள்ளது.

 மொபிலியோ கார் உற்பத்தியை நிறுத்தும் ஹோண்டா!

புதிய மொபிலியோ மாடல் கார்களை இந்தோனேசியாவில் விற்பனை செய்து வருகிறது ஹோண்டா நிறுவனம். இருந்தாலும் விலை அடிப்படையில் அந்த மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்தினால் வரவேற்பு இருக்குமா என்பதனையும் ஹோண்டா கருத்தில் கொள்ளும்.

 மொபிலியோ கார் உற்பத்தியை நிறுத்தும் ஹோண்டா!

ரூ.9.78 லட்சம் முதல் ரூ.12.55 லட்சம் விலையிலான, மொபிலியோ கார்கள் 7 சீட்டர் கொண்டது, இவை பெட்டோல் மற்றும் டீசல் என இரண்டு வேரியண்டுகளில் கிடைத்துவந்தன. 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் கொண்டதாக இவை இருந்தது குறிப்பிடத்தக்கது.

புதிதாக அறிமுகமாகியுள்ள 2017ஹோண்டா சிட்டி காரின் படங்கள்: 

English summary
Honda has ended the production of the Mobilio MPV, owing to weak demand. Now, Honda is looking at alternate steps.
Story first published: Friday, March 3, 2017, 18:49 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark