அடுத்த ஆறு ஆண்டுகளில் கார் விற்பனையில் அதிரடி செய்ய காத்திருக்கும் ஹோண்டா..!!

அடுத்த ஆறு ஆண்டுகளில் கார் விற்பனையில் அதிரடி செய்ய காத்திருக்கும் ஹோண்டா..!!

By Azhagar

இந்தியாவில் கார் விற்பனையில் மிகப்பெரிய சந்தையை பெற்றுள்ள ஹோண்டா கார்ஸ், அடுத்த ஆறு ஆண்டுகளில் மேலும் 6 புதிய கார்களை இந்தியாவில் களமிறக்குகிறது.

கார் விற்பனையில் ஹோண்டாவின் அதிரடி ஆட்டம் ஆரம்பம்..!!

2017 ஏப்ரல் முதல் அக்டோபர் வரையில் 17 சதவீத வளர்ச்சியை ஹோண்டா கார்ஸ் இந்தியாவில் பெற்றுள்ளது.

இதற்கு ஹோண்டாவின் தயாரிப்புகளான சிட்டி மற்றும் டபுள்யூ.ஆர்-வி கார்கள் மிகப்பெரிய பங்காற்றியுள்ளன.

கார் விற்பனையில் ஹோண்டாவின் அதிரடி ஆட்டம் ஆரம்பம்..!!

ஹோண்டா கார்ஸின் தலைமை துணை தலைவரான ஞானேஸ்வர் சென் கூறும்போது, இந்தியாவில் ஹோண்டா கார்ஸ் மிகப்பெரிய வளர்ச்சியை பெற்று வருகிறது.

கார் விற்பனையில் ஹோண்டாவின் அதிரடி ஆட்டம் ஆரம்பம்..!!

குறிப்பாக சிட்டி மற்றும் டபுள்யூ.ஆர்-வி மாடல் கார்கள் நல்ல விற்பனையை பெற்று வருகிறது. இதனால் ஹோண்டாவிற்கான விற்பனை திறன் அடுத்தக்கட்டத்திற்கு சென்றுள்ளது என்று கூறினார்.

கார் விற்பனையில் ஹோண்டாவின் அதிரடி ஆட்டம் ஆரம்பம்..!!

ஹோண்டா கார்ஸ் நிறுவனத்திற்கு இந்தியா மிகப்பெரிய சந்தை. சர்வதேச அளவில் அது மேற்கொண்டு வரும் பல்வேறு கட்ட திட்டங்களை இந்தியாவில் அந்நிறுவனம் செயல்படுத்தவுள்ளது.

கார் விற்பனையில் ஹோண்டாவின் அதிரடி ஆட்டம் ஆரம்பம்..!!

அதில் முதற்கட்டமாகத்தான் ஹோண்டாவின் புதிய ஆறு கார் மாடல்களை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமாகவுள்ளதாக ஞானேஸ்வர் சென் கூறுகிறார்.

கார் விற்பனையில் ஹோண்டாவின் அதிரடி ஆட்டம் ஆரம்பம்..!!

ஏப்ரல் முதல் ஆக்டோபர் வரை மட்டும் சுமார் 1,05,503 கார்களை ஹோண்டா இந்தியாவில் விற்பனை செய்துள்ளது. இது கடந்த ஆண்டில் 90,442 அளவில் மட்டுமே இருந்தது.

கார் விற்பனையில் ஹோண்டாவின் அதிரடி ஆட்டம் ஆரம்பம்..!!

இவற்றில் மற்ற கார் மாடல்களை விட ஹோண்டா சிட்டி செடால் மாடல் காரின் விற்பனை மட்டும் சுமார் 25 சதவீத வளர்ச்சியை அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கார் விற்பனையில் ஹோண்டாவின் அதிரடி ஆட்டம் ஆரம்பம்..!!

மேலும் புதியதாக ஹோண்டா வெளியிட்ட டபுள்யூ.ஆர்-வி இந்தியா உட்பட சில ஆசிய நாடுகளில் பெரிய விற்பனை திறனை அடைந்துள்ளது.

கார் விற்பனையில் ஹோண்டாவின் அதிரடி ஆட்டம் ஆரம்பம்..!!

டபுள்யூ.ஆர்-வி அறிமுகமான நாள் முதல் தற்போது வரை சுமார் 33,000 எண்ணிக்கையில் விற்பனை ஆகியுள்ளதாக ஹோண்டா வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கிறது.

கார் விற்பனையில் ஹோண்டாவின் அதிரடி ஆட்டம் ஆரம்பம்..!!

கூடுதலாக, ஹோண்டா தனது விற்பனை மற்றும் சர்வீஸ் நெட்வொர்கை இந்தியாவில் இரட்டிப்பாக பலப்படுத்தியுள்ளது.

இதன்மூலம் 234 நகரங்களில் இருந்து 348 நகரங்களில் தற்போது ஹோண்டா சர்வீஸ் மையங்கள் செயல்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

கார் விற்பனையில் ஹோண்டாவின் அதிரடி ஆட்டம் ஆரம்பம்..!!

இந்தியாவில் ஹோண்டா கார்களின் விற்பனை திறன் அதிகரித்திருப்பதற்கு காரணம் அதனுடைய பலமான சர்வீஸ் மற்றும் விற்பனை நெட்வொர்க் தான்.

கார் விற்பனையில் ஹோண்டாவின் அதிரடி ஆட்டம் ஆரம்பம்..!!

இன்னும் இரண்டு ஆண்டுகளில் உலகளவில் இந்தியா மிகப்பெரிய ஆட்டோமொபைல் சந்தையாக உருவெடுக்கும். அப்போது, ஹோண்டாவின் வளர்ச்சி இன்றியமையாத தேவையாக மாறும்.

Most Read Articles
மேலும்... #ஹோண்டா #honda
English summary
Read in Tamil: Honda Has An Aggressive Plan For The Next Six Years In India. Click for Details...
Story first published: Thursday, November 23, 2017, 12:24 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X