மின்சாரத்தால் இயங்கும் அர்பன் இ.வி காரை பிராங்க்ஃபர்ட் ஷோவில் வெளியிட்ட ஹோண்டா..!!

Written By:

ஹோண்டா நிறுவனம் அர்பன் இ.வி கான்செப்ட் காரை 2017 பிராங்க்ஃபர்ட் கண்காட்சியில் அறிமுகப்படுத்தியுள்ளது.

ஹோண்டாவின் அர்பன் இ.வி மின்சார கான்செப்ட் கார் வெளியீடு..!

மின்சார ஆற்றல் கொண்டு இயங்கும் இந்த காருக்கான உற்பத்தியை 2019ம் ஆண்டில் தொடங்குவதாக ஹோண்டா அறிவித்துள்ளது.

ஹோண்டாவின் அர்பன் இ.வி மின்சார கான்செப்ட் கார் வெளியீடு..!

மின்சார காருக்கு என்று ஹோண்டா தனியாக உருவாக்கியுள்ள ”தொழில்நுட்பம் மற்றும் வடிவமைப்பிற்கான புதிய அணுகுமுறை" என்ற பிளாட்ஃபாரமின் கீழ் அர்பன் இ.வி கார் தயாரிக்கப்பட்டுள்ளது.

ஹோண்டாவின் அர்பன் இ.வி மின்சார கான்செப்ட் கார் வெளியீடு..!

ஜாஸ் ப்ரீமியம் ஹேட்ச்பேக் காரை விட 100மிமீ உயரம் குறைவான இந்த கார், போதுமான இடவசதி உடன் 3895 மிமீ நீளம் கொண்டது.

ஹோண்டாவின் அர்பன் இ.வி மின்சார கான்செப்ட் கார் வெளியீடு..!

இந்த காரில் ஹோண்டாவின் முத்திரை நீல நிறத்தில் ஒளிர்கிறது. இது ஒரு புதிய ஸ்டைலிங்காக அர்பன் இ.வி காருக்காக அமைக்கப்பட்டுள்ளது.

ஹோண்டாவின் அர்பன் இ.வி மின்சார கான்செப்ட் கார் வெளியீடு..!

காரின் முகப்பில் வணக்கம், வாழ்த்துகள் போன்றவை தோன்றும் விதமாக நவீன தொழில்நுட்பம் இடம்பெற்றுள்ளது.

ஹோண்டாவின் அர்பன் இ.வி மின்சார கான்செப்ட் கார் வெளியீடு..!

மேலும் இதில் மற்ற ஓட்டுநர்களுக்கு அறிவுரை மற்றும் ஸ்டேட்ஸ் அப்டேட்ஸ் போன்றவை டிஸ்பிளே ஆவதும் இதிலுள்ள தனிச்சிறப்பு.

ஹோண்டாவின் அர்பன் இ.வி மின்சார கான்செப்ட் கார் வெளியீடு..!

காரினுள் ஓட்டுநருக்கு இடைஞ்சல் ஏற்படுத்தாத வகையில், கேபின் வசதி ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது. 5 இருக்கைகள் கொண்ட இந்த கார் ரெட்ரோ டிசைன் கான்செப்டில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஹோண்டாவின் அர்பன் இ.வி மின்சார கான்செப்ட் கார் வெளியீடு..!

கான்செப்டின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மிக நேர்த்தியான அகலமான தொடுதிரை வசதி இந்த காரின் உள்கட்டமைப்பில் உள்ளது.

ஹோண்டாவின் அர்பன் இ.வி மின்சார கான்செப்ட் கார் வெளியீடு..!

நவீன அம்சங்களுடன் கூடிய மின்சார காராக அர்பன் காரை தயாரித்துள்ள ஹோண்டா, தற்போது இதை 4 இருக்கைகள் கொண்ட காராகத்தான் தயாரித்துள்ளது.

ஹோண்டாவின் அர்பன் இ.வி மின்சார கான்செப்ட் கார் வெளியீடு..!

ஆனால் இது தயாரிப்பு நிலையை அடையும்போது, 5 பேர் அமரக்கூடிய வகையில் இதன் கட்டமைப்புகள் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹோண்டாவின் அர்பன் இ.வி மின்சார கான்செப்ட் கார் வெளியீடு..!

பார்க்க மிகவும் அசத்தலான தோற்றத்தில் உள்ள இந்த காரின் செயல்திறன் குறித்து ஹோண்டா தற்போது வரை எதையும் வெளியிடவில்லை.

ஹோண்டாவின் அர்பன் இ.வி மின்சார கான்செப்ட் கார் வெளியீடு..!

இருப்பினும் அர்பன் இ.வி காருக்கு அதிக திறன் வழங்கக்கூடிய இலகுவான எடைக்கொண்ட பேட்டரி பேக், ஒருங்கிணைந்த வெப்ப மேலாண்மை.

ஹோண்டாவின் அர்பன் இ.வி மின்சார கான்செப்ட் கார் வெளியீடு..!

இவற்றுடன் வாகனத்தில் இருந்து ஆற்றல் செயல்படுவதற்கான பரிமாற்றம் போன்ற தொழில்நுட்ப அம்சங்கள் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

ஹோண்டாவின் அர்பன் இ.வி மின்சார கான்செப்ட் கார் வெளியீடு..!

ஹோண்டாவின் அர்பன் இ.வி கார் பழைய தோற்றம் கொண்ட கார் போல இருந்தாலும், அதனுடைய டாஷ்ஃபோர்டு மற்றும் விங் மிரர் ஆகியவை எதிர்காலத்திற்கான வடிவமைப்பாக உள்ளது.

ஹோண்டாவின் அர்பன் இ.வி மின்சார கான்செப்ட் கார் வெளியீடு..!

எது இருந்தாலும், காருக்கான ஆற்றலை வாடிக்கையாளர்கள் தெரிந்துக்கொள்வது தான் மிக முக்கியம்.

ஆனால் அதுகுறித்த தகவல் வெளிவர நாம் இன்னும் கொஞ்ச காலம் காத்திருக்கவேண்டும். பிறகு அர்பன் இ.வி பற்றி நமக்கும் நிறைய தெரியவரும்

மேலும்... #ஹோண்டா #honda
English summary
Read in Tamil: Honda Urban EV Concept unveiled at the 2017 Frankfurt Motor Show. Click for Details...

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark