புதிய ஹோண்டா டபிள்யூஆர்வி கார் மார்ச்சில் அறிமுகமாகிறது!

Written By:

புதிய ஹோண்டா டபிள்யூஆர்வி கார் மார்ச்சில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அதன் விபரங்களை தொடர்ந்து காணலாம்.

அடுத்த மாதம் விற்பனைக்கு வருகிறது ஹோண்டா டபிள்யூஆர்வி எஸ்யூவி!

ஹோண்டா ஜாஸ் காரின் அடிப்படையில் எஸ்யூவி காருக்குரிய டிசைன் அம்சங்கள் சேர்க்கப்பட்ட க்ராஸ்ஓவர் ரக மாடலாக ஹோண்டா டபிள்யூஆர்வி கார் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

அடுத்த மாதம் விற்பனைக்கு வருகிறது ஹோண்டா டபிள்யூஆர்வி எஸ்யூவி!

ஹோண்டா ஜாஸ் காரிலிருந்து வேறுபடுத்தும் விதத்தில் முன்புற வடிவமைப்பில் சில மாற்றங்களும், கூடுதல் ஆக்சஸெரீகளும் இடம்பெற்று இருக்கின்றன பெரிய க்ரில் அமைப்பு, வலிமையான க்ரோம் பட்டை, ஸ்கிட் ப்ளேட் கொடுக்கப்பட்டு எஸ்யூவி மாடலாக மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. பாடி கிளாடிங், அதிக தரை இடைவெளி உள்ளிட்டவை இந்த காருக்கு முக்கிய அம்சமாக இருக்கிறது.

அடுத்த மாதம் விற்பனைக்கு வருகிறது ஹோண்டா டபிள்யூஆர்வி எஸ்யூவி!

இந்த காரில் புதிய டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் சேர்க்கப்பட்டு இருக்கும். ஸ்டீயரிங் வீலில் கன்ட்ரோல் சுவிட்சுகள் கொடுக்கப்பட்டு இருக்கும். டிஜிட்டல் மல்டி இன்ஃபர்மேஷன் திரையும் தகவல்களை பெற உதவும். ஜாஸ் காரைவிட கூடுதல் பிரிமியமாக இருக்கிறது இதன் இன்டீரியர்.

அடுத்த மாதம் விற்பனைக்கு வருகிறது ஹோண்டா டபிள்யூஆர்வி எஸ்யூவி!

இந்த காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. பெட்ரோல் மாடல் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டதாகவும், டீசல் மாடல் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டதாகவும் வருகிறது. டீசல் மாடலில் சிவிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்டதாகவும் வருகிறது.

அடுத்த மாதம் விற்பனைக்கு வருகிறது ஹோண்டா டபிள்யூஆர்வி எஸ்யூவி!

புதிய ஹோண்டா டபிள்யூஆர்வி காரின் உற்பத்தி ராஜஸ்தான் மாநிலம், தபுகெராவில் உள்ள ஹோண்டா ஆலையில் ஏற்கனவே துவங்கப்பட்டு விட்டது. எனவே, அடுத்த மாதத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்தவுடனே டெலிவிரியும் துவங்கும் வாய்ப்புள்ளது.

அடுத்த மாதம் விற்பனைக்கு வருகிறது ஹோண்டா டபிள்யூஆர்வி எஸ்யூவி!

ரூ.6.5 லட்சம் விலையில் இருந்து ரூ.9.5 லட்சம் வரையிலான விலைப்பட்டியலில் இந்த கார் எதிர்பார்க்கப்படுகிறது. ஃபியட் அவென்ச்சுரா, டொயோட்டா எட்டியோஸ் க்ராஸ் உள்ளிட்ட நேரடி போட்டியாளர்கள் மற்றும் மாருதி விட்டாரா பிரெஸ்ஸா, ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் போன்ற காம்பேக்ட் எஸ்யூவி ரக கார்களுடன் போட்டி போடும்.

புதிய ஹோண்டா சிட்டி காரின் படங்கள்!

புதிய ஹோண்டா சிட்டி காரின் படங்களின் தொகுப்பை கீழே உள்ள கேலரியில் காணலாம்.

English summary
According to emerging reports, the Honda WR-V is expected to be launched in the Indian market by March 2017.
Story first published: Monday, February 20, 2017, 11:13 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark