சென்னை அருகே புதிய இசூஸு எம்யு-எக்ஸ் கார் உற்பத்தி விரைவில் துவக்கம்!

Written By:

உலக அளவில் டீசல் இன்ஜின் தயாரிப்பில் சிறந்து விளங்கும் ஜப்பானைச் சேர்ந்த இசூஸு மோட்டார்ஸ் நிறிவனம், இந்தியாவில் தனது செயல்பாட்டை 2012ஆம் ஆண்டு துவங்கியது. சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் இசூஸு இந்தியா அதன் புதிய எம்யு-எக்ஸ் எஸ்யூவி மாடல் காரை சென்னை அருகேயுள்ள அதன் தொழிற்சாலையில் தயாரிக்க உள்ளது.

சென்னை அருகேயுள்ள இசூஸு தொழிற்சாலையில் தயாரிக்கப்படவுள்ள புதிய எம்யு-எக்ஸ் கார்!

சென்னைக்கு அருகே கும்மிடிப்பூண்டியை அடுத்துள்ள ஸ்ரீசிட்டியில் தனது உற்பத்தி தொழிற்சாலையை கடந்த ஆண்டு இசூஸு நிறுவனம் நிறுவியது. இதனை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு திறந்து வைத்தார். தற்போது இத்தொழிற்சாலையில் டி-மேக்ஸ் வி-கிராஸ் பிக் அப் டிரக்குகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

சென்னை அருகேயுள்ள இசூஸு தொழிற்சாலையில் தயாரிக்கப்படவுள்ள புதிய எம்யு-எக்ஸ் கார்!

ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனத்துடன் புரிந்துணர்வு அடிப்படையில் கூட்டு சேர்ந்துள்ள இசூஸு, ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் தொழிற்சாலையில் தற்போது இசூஸுவின் எம்யு-7 எஸ்யூவிக்கள் தயாரிக்கப்படுகின்றன. இதற்கு பதிலாக இசூஸுவின் தொழிற்சாலையிலேயே எம்யு-எக்ஸ் எஸ்யூவி காரை தயாரித்து அறிமுகப்படுத்த உள்ளது இசூஸு.

சென்னை அருகேயுள்ள இசூஸு தொழிற்சாலையில் தயாரிக்கப்படவுள்ள புதிய எம்யு-எக்ஸ் கார்!

டொயோட்டாவின் ஃபார்ச்சூனரைப் போல் எம்யு-எக்ஸ் கார் பெரிய எஸ்யூவி ரகத்திலானது. இது டி-மேக்ஸ் வி-கிராஸ் பிக் அப் டிரக்கின் அமைப்பையும் ஸ்டைலிங்கையும் ஒத்ததாக இருக்கும்.

சென்னை அருகேயுள்ள இசூஸு தொழிற்சாலையில் தயாரிக்கப்படவுள்ள புதிய எம்யு-எக்ஸ் கார்!

வி-கிராஸ் பிக் அப் டிரக்கின் முகப்பை தழுவி இருக்கும் எம்யு-எக்ஸ் எஸ்யூவியில் அகலமான பம்பர்கள் மற்றும் 3வது வரிசை சீட் கொடுக்கப்பட்டுள்ளது. இதே போன்று தான் செவர்லேயின் டிரையல்பிளேசர் காரிலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரித்து விற்பனைக்கு அறிமுகப்படுத்த உள்ளதால் போட்டியாளர்களுக்கு ஈடுகொடுக்கும் விலையை இசூஸு நிர்னயிக்கும் என நம்பலாம்.

சென்னை அருகேயுள்ள இசூஸு தொழிற்சாலையில் தயாரிக்கப்படவுள்ள புதிய எம்யு-எக்ஸ் கார்!

புதிய இசூஸு எம்யு-எக்ஸ் காரை வரும் மே மாதம் 11 ஆம் தேதி அறிமுகப்படுத்த உள்ளது இசூஸு நிறுவனம். இந்த கார் ஃபோர்டு எண்டேவர், டொயோட்டா ஃபார்ச்சூனர் மற்றும் மிட்சுஃபிஷி பஜிரோ ஸ்போர்ட் மாடல்களுக்கு போட்டியாக விளங்கும்.

English summary
Isuzu MU-X To Be Manufactured In plant near chennai

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark