ரூ.20 லட்சம் வரை விலை குறைந்த ஜாகுவார் எஃப்-ஃபேஸ் எஸ்யூவி கார்... காரணம் இதுதான்..!!

Written By:

டாடா மோட்டார்ஸ் நிர்வகித்து வரும் ஜாகுவார் நிறுவனம் தனது எஃப்-ஃபேஸ் காரின் உற்பத்தியை இந்தியாவில் தொடங்கியுள்ளது.

இதனால் எஃப்-ஃபேஸ் கார் இந்தியாவில் ரூ.20 லட்சம் குறைந்து, ரூ. 60.02 லட்சம் விலையில் விற்பனைக்கு அறிமுகமாகிறது.

To Follow DriveSpark On Facebook, Click The Like Button
இந்தியாவில் ஜாகுவார் எஃப்-ஃபேஸ் கார்களின் விலை குறைந்தது..!!

ஜாகுவார் லேண்டுரோவர் நிறுவனத்தின் தயாரிப்பு ஆலை மஹாராஷ்டிரா மாநிலம் பூனேயில் செயல்பட்டு வருகிறது.

அங்குதான் ஜாகுவாரின் வரவேற்பு பெற்ற எஃப்-ஃபேஸ் எஸ்யூவி கார் முழுக்க முழுக்க உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஜாகுவார் எஃப்-ஃபேஸ் கார்களின் விலை குறைந்தது..!!

இந்தியாவில் கிடைக்கப்பெற்ற பாகங்களை ஒன்றிணைத்து தயாரிக்கப்பட்டுள்ள எஃப்-ஃபேஸ் காரில், 20டி பிரஸ்டீஜ் வேரியன்ட்

மட்டுமே விற்பனைக்கு வருகிறது.

இந்தியாவில் ஜாகுவார் எஃப்-ஃபேஸ் கார்களின் விலை குறைந்தது..!!

எஃப்-ஃபேஸ் மாடலில் அதிக செயல்திறன் கூடிய 30டி காரின் தயாரிப்பு பணிகள் தற்போதைக்கு கைவிடப்பட்டுள்ளது.

எனினும் இதற்கான தயாரிப்பு பணிகள் எதிர்காலத்தில் தொடங்கி 30டி கார் விற்பனைக்கு வரலாம் என்று தெரிகிறது.

Recommended Video
[Tamil] 2017 Skoda Octavia RS Launched In India - DriveSpark
இந்தியாவில் ஜாகுவார் எஃப்-ஃபேஸ் கார்களின் விலை குறைந்தது..!!

காரின் நான்கு சக்கரங்களுக்கும் ஆற்றலை கடத்தும் வகையில் எஃப்-ஃபேஸ் 20டி காரில் 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸை ஜாகுவார் பொருத்தியுள்ளது.

இந்தியாவில் ஜாகுவார் எஃப்-ஃபேஸ் கார்களின் விலை குறைந்தது..!!

எஃப்-ஃபேஸ் 20டி காரில் ஜாகுவார் டிரைவ் கண்ட்ரோல், எல்.இ.டி கண்ட்ரோல், டெயில் விளக்குகள், 380வி மெரிடியன் சவுண்டு சிஸ்டம், 12.3 இன்ஸ்ட்ரூமென்ட் டிஸ்பிளே, வை-ஃபை ஹாட்ஸ்பாட், ஆக்ட்டிவிட்டி கீ மற்றும் 10.2 இஞ்ச் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகியவை உள்ளது.

Trending on Drivespark:

மிரட்டும் புதிய எஸ்யூவி காரில் சென்று ரசிகர்களை சந்தித்த 'லேடி சூப்பர் ஸ்டார்' நயன்தாரா..!!

இந்த விலையில் இவ்வளவு வசதிகளா.... திக்குமுக்காட வைக்கும் ரெனோ கேப்டூர்!

டிரக் ஓட்டுநரின் அசரடிக்கும் டிரைவிங் திறனால் நூலிழையில் உயிர் தப்பிய சிறுவன்..!! (வீடியோ)

இந்தியாவில் ஜாகுவார் எஃப்-ஃபேஸ் கார்களின் விலை குறைந்தது..!!

இந்தியாவில் தயாராகியுள்ள புதிய எஃப்-ஃபேஸ் காரில் 6வது மாடலாக 20டி வெளிவந்துள்ளது. 2.0 டீசல் 20டி பிரஸ்டீஜ் காரை www.findmeacar.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் புக்கிங் செய்யலாம்.

இந்தியாவில் ஜாகுவார் எஃப்-ஃபேஸ் கார்களின் விலை குறைந்தது..!!

ஜாகுவார் லேண்டுரோவர் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் & தலைவரான ரோஹித் சூரி பேசும்போது,

"எஃப்-ஃபேஸ் கார் வெளியான நாளிலேயே பல ஜாகுவார் ரசிகர்களின் நெஞ்சத்தை கொள்ளைக்கொண்டுள்ளது".

இந்தியாவில் ஜாகுவார் எஃப்-ஃபேஸ் கார்களின் விலை குறைந்தது..!!

"இந்த காரை இந்தியாவில் முழுமையாக தயாராகியிருப்பது மேக் இன் இந்தியா திட்டத்திற்கு புதிய மகுடமாக மாறியுள்ளது" என்று கூறினார்.

இந்தியாவில் ஜாகுவார் எஃப்-ஃபேஸ் கார்களின் விலை குறைந்தது..!!

ஜாகுவார் காரின் எஃப்-ஃபேஸ் 20டி எஸ்யூவி மாடல் இந்தியாவில் தயாராகி இருப்பது மகிழ்ச்சி தான். இதன் மூலம் விலை குறைந்திருப்பது பெருமகிழ்ச்சி.

இந்தியாவில் ஜாகுவார் எஃப்-ஃபேஸ் கார்களின் விலை குறைந்தது..!!

இந்த வசதிகள் காரணமாக ஜாகுவாரின் பல ஆடம்பர தயாரிப்பு கார்களை வாங்க பல இந்திய வாடிக்கையாளர்கள் நிச்சயம் ஆர்வம் காட்டுவார்கள்.

மேலும்... #ஜாகுவார் #jaguar
English summary
Read in Tamil: Jaguar F-Pace launched in India, Price Specifications, features and Images. Click for More...
Please Wait while comments are loading...

Latest Photos