ஜாகுவாரின் ஐ-ஃபேஸ் எலக்ட்ரிக் எஸ்.யூ.வி கார்: சுற்றுச்சுழலுக்கான நண்பன்

ஜாகுவார் கார்களில் எஸ்.யூ.வி மாடலை எதிர்பார்த்திருந்தவர்களுக்கான ஒரு நற்செய்தியை இந்த பக்கத்தில் பார்க்கலாம்.

By Azhagar

கார்களில் தங்களது அந்தஸ்தை காட்ட விரும்புவர்களுக்கு என்றுமே சரியான தேர்வாக இருந்து வருகிறது ஜாகுவார் கார்கள். பிரட்டனை தாய்வீடாக கொண்டுள்ள இந்த கார்கள் இந்தியாவில் மட்டுமல்ல உலகளவிலும் மிகப்பெரிய செல்வாக்கை பெற்றிருகின்றன.

பேட்டரியில் இயங்கும் ஐ-பேஸ் காரை அறிமுகம் செய்த ஜாகுவார்

ஸ்போர்ட்ஸ் மற்றும் சொகுசு கார்களின் உற்பத்தியில் உலகளவில் கவனம் பெற்றிருந்தாலும் எஸ்.யூ.வி மாடல்களை பொருத்தவரை ஜாக்குவாரிடமிருந்து போதிய தயாரிப்புகள் அதிகமாக இல்லை.

இந்த குறையை போக்க அவ்வப்போது ஜாகுவார் பல எஸ்.யூ.விகளை அறிமுகம் செய்துவந்தாலும், அடுத்தாண்டு இந்த நிறுவனம் வெளியிடும் ஜாகுவார் ஐ-பேஸ் எஸ்.யூ.வி கார் மாடல் நிச்சயம் மிகப்பெரிய வரவேற்பு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பேட்டரியில் இயங்கும் ஐ-பேஸ் காரை அறிமுகம் செய்த ஜாகுவார்

லாஸ் ஏஞ்சல்ஸில் கடந்தாண்டு ஜாகுவார் கார்களுக்காக நடைபெற்ற ஆட்டோ ஷோவின் போது ஐ-பேஸ் கார் அறிமுகம் செய்யப்பட்டது. அப்போதிலிருந்த ஆட்டோமொபைல் மார்கெட்டை ஈர்த்து வரும் இந்த புதிய படைப்பு, அடுத்தாண்டு முதல் விற்பனைக்கு வருகிறது.

பேட்டரியில் இயங்கும் ஐ-பேஸ் காரை அறிமுகம் செய்த ஜாகுவார்

400 பி எச்பி பவர் வழங்கும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள ஐ-பேஸ் எஸ்.யூ.வி கார், 6 நொடிகளில் 60mph வேகத்தை அடையும். லித்தியம் அயனால் செய்யப்பட்டு இருக்கும் ஐ பேஸ் காரின் பேட்டரி அதிக பவர் தரும் விதத்தில் உள்ளது.

பேட்டரியில் இயங்கும் ஐ-பேஸ் காரை அறிமுகம் செய்த ஜாகுவார்

பேட்டரியின் அதிகப்பட்ச 90 கிலோ வாட் திறன் மூலம் நாம் 500கிலோ மீட்டர் வரை இந்த காரில் பயணிக்கலாம், மேலும் 80% அளவிலான பேட்டரி பவரை வெறும் 90 நிமிடங்கள் சார்ஜ் செய்வதன் மூலமாக பெறலாம்.

பேட்டரியில் இயங்கும் ஐ-பேஸ் காரை அறிமுகம் செய்த ஜாகுவார்

சுற்றுசுழலுக்கு ஏற்றவாறும், அதிக இடவசதியோடும் ஜாகுவார் தயாரித்துள்ள இந்த புதிய எஸ்.யூ.வி காரின் புகைப்படங்களை வெளியாகியுள்ளன. திறனிலும், பவரிலும் ஏற்கனவே பலரையும் கவர்ந்துவிட்ட இந்த கார், தற்போது தோற்றத்திலும் பேசும்பொருளாக மாறியுள்ளது.

பேட்டரியில் இயங்கும் ஐ-பேஸ் காரை அறிமுகம் செய்த ஜாகுவார்

ஜாகுவார் வெளியிட்டு இருக்கும் ஐ-பேஸ் காரின் புகைப்படங்கள் அனைத்தும் லண்டன் தெருக்களிலிருந்து எடுக்கப்பட்டு உள்ளன. இதற்காக நடைபெற்ற ஃபோட்டோஷூட்டை குறித்து ஐ-பேஸ் காரை வடிவமைத்த இயான் கல்லம் கூறுகையில்,

"கார்களை தெருக்களில் ஓட்டுவது வடிவமைப்பாளரான எங்களுக்கு முக்கியமாக தோன்றுகிறது. கார்களை வெளியே கொண்டு வரும் போது தான் நம்முடைய வேலையே முடிந்தது போல் இருக்கிறது. அவை சாலைகளில் கடக்கும்போதும், சரியான திறனுடன் இயங்கும்போதும் தான் வேலையின் மீது ஒரு திருப்தி ஏற்படுகிறது" என்று கூறினார்.

பேட்டரியில் இயங்கும் ஐ-ஃபேஸ் காரை அறிமுகம் செய்த ஜாகுவார்

புகைப்படங்களில் இடம்பெற்றிருக்கும் காரின் ஃபோட்டான் ரெட் நிறம் பலரையும் கவர்ந்துள்ளது. இணையதளங்களில் தோற்றதை விட காரின் நிறத்திற்கே அதிக கமெண்டுகளும் கிடைக்கின்றன.

பேட்டரியில் இயங்கும் ஐ-பேஸ் காரை அறிமுகம் செய்த ஜாகுவார்

அதனால் ஐ-பேஸ் காரை அதிகமாக ஃபோட்டான் ரெட் நிறத்தில் தயாரிக்க ஜாகுவார் நிறுவனம் முடிவுசெய்திருப்பதாக நமக்கு தகவல்கள் தெரிவிக்கின்றன.

வாசகர்கள் படித்துவரும் மேலும் சில சுவாரஸ்யமான செய்திகள்...

வாசகர்கள் படித்துவரும் மேலும் சில சுவாரஸ்யமான செய்திகள்...
  • பொல்லாதவன் பட பாணியில் கார்களை திருடிய கும்பல்!
    • வாசகர்கள் படித்துவரும் மேலும் சில சுவாரஸ்யமான செய்திகள்...
      • ஆடம்பரம் - அனுபவம் - அதிரடி ; வருகிறது புதிய பி.எம்.டபுள்யூ
      • வாசகர்கள் படித்துவரும் மேலும் சில சுவாரஸ்யமான செய்திகள்...
        • சீற்றத்துடன் சீறிப் பாய்ந்த ரோல்ஸ்-ராய்ஸ் கோஸ்ட்
        • வாசகர்கள் படித்துவரும் மேலும் சில சுவாரஸ்யமான செய்திகள்...
          • ஹார்லி டேவிட்சனின் புதிய ஸ்ட்ரீட் ராட்750 பைக் அறிமுகம்

ஜாக்குவாரின் எஃப்- ஃபேஸ் காரின் புகைப்படங்களை கீழே காணுங்கள்

Most Read Articles
மேலும்... #ஜாகுவார் #jaguar
English summary
The seventh-generation BMW 5 Series is all set to launch in India in 2017; here are the key updates you should know.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X