'மேட் இன் இந்தியா' ஜாகுவார் எக்ஸ்எஃப் சொகுசு கார் விற்பனைக்கு அறிமுகம்!!

இந்தியாவிலேயே அசெம்பிள் செய்யப்படும் புதிய ஜாகுவார் எக்ஸ்எஃப் சொகுசு கார் இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

By Saravana Rajan

இந்தியாவிலேயே அசெம்பிள் செய்யப்படும் புதிய ஜாகுவார் எக்ஸ்எஃப் கார் இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவிலேயே அசெம்பிள் செய்யப்படுவதால், விலை குறைந்துள்ளது. அதன் விபரங்களையும், இந்த காரின் சிறப்பம்சங்களையும் தொடர்ந்து காணலாம்.

'மேட் இன் இந்தியா' ஜாகுவார் எக்ஸ்எஃப் சொகுசு கார் விற்பனைக்கு அறிமுகம்!!

ஜாகுவார் எக்ஸ்எஃப் காரின் பெட்ரோல் மாடல் ரூ.52.50 லட்சம் விலையில் இருந்து துவங்குகிறது. இறக்குமதி செய்து விற்பனை செய்யப்பட்டு வந்த மாடலைவிட இது ரூ.3 லட்சம் குறைவாக வந்துள்ளது. டாப் வேரியண்ட் மாடல் ரூ.59.5 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

'மேட் இன் இந்தியா' ஜாகுவார் எக்ஸ்எஃப் சொகுசு கார் விற்பனைக்கு அறிமுகம்!!

டீசல் மாடலின் பேஸ் வேரியண்ட் ரூ.47.5 லட்சம் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இறக்குமதி மாடலைவிட ரூ.2 லட்சம் வரை விலை குறைந்துள்ளது. டீசல் மாடலின் டாப் வேரிண்ட் கார் ரூ.60.5 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

'மேட் இன் இந்தியா' ஜாகுவார் எக்ஸ்எஃப் சொகுசு கார் விற்பனைக்கு அறிமுகம்!!

மேட் இன் இந்தியா ஜாகுவார் எக்ஸ்எஃப் கார் ப்யூர், பிரெஸ்டீஜ் மற்றும் போர்ட்போலியோ ஆகிய மூன்று வேரியண்ட்டுகளில் கிடைக்கும். பெட்ரோல் மாடலில் இருக்கும் 2.0 லிட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 237 பிஎச்பி பவரையும், 340 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.

'மேட் இன் இந்தியா' ஜாகுவார் எக்ஸ்எஃப் சொகுசு கார் விற்பனைக்கு அறிமுகம்!!

டீசல் மாடலில் இருக்கும் 2.0 லிட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 177 பிஎச்பி பவரையும், 430 என்எம் டார்க் திறனையும் வழங்கும். பெட்ரோல், டீசல் என இரண்டு மாடல்களிலுமே 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

'மேட் இன் இந்தியா' ஜாகுவார் எக்ஸ்எஃப் சொகுசு கார் விற்பனைக்கு அறிமுகம்!!

புதிய ஜாகுவார் எக்ஸ்எஃப் கார் அலுமினியம் கட்டமைப்பில் உருவாக்கப்பட்டு இருப்பதால், இலகு கொண்டதாக மாறியிருக்கிறது. முந்தைய தலைமுறை மாடலைவிட 190 கிலோ எடை குறைவானது. மேலும், வீல் பேஸ் 51 மிமீ அதிகரிக்கப்பட்டு இருப்பதால், கேபினில் இடவசதி மேம்பட்டு இருக்கிறது. இதன் எடை விரவும் தன்மை 50:50 என்ற விகிதாச்சாரத்தில் இருப்பதால் மிகச் சிறப்பான கையாளுமையையும், நிலைத்தன்மையும் வழங்கும்.

'மேட் இன் இந்தியா' ஜாகுவார் எக்ஸ்எஃப் சொகுசு கார் விற்பனைக்கு அறிமுகம்!!

புதிய ஜாகுவார் எக்ஸ்எஃப் காரில் 12.3 இன்ச் டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டரும், 10.2 இன்ச் தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சாதனமும் கொடுக்கப்பட்டு இருக்கிறது. மெரிடியன் சவுண்ட் சிஸ்டம் உள்ளது.

'மேட் இன் இந்தியா' ஜாகுவார் எக்ஸ்எஃப் சொகுசு கார் விற்பனைக்கு அறிமுகம்!!

இந்த காரின் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் ஸ்மார்ட்போனை இணைத்துக் கொண்டு காரின் எஞ்சினை ஸ்டார்ட் செய்ய முடியும். ஏசி.,யையும் கட்டுப்படுத்த முடியும். விண்ட் ஸ்கிரீன் கண்ணாடியிலேயே தகவல்களை பெறுவதற்கான, லேசர் ஹெட் அப் டிஸ்ப்ளே வசதியும் உள்ளது.

'மேட் இன் இந்தியா' ஜாகுவார் எக்ஸ்எஃப் சொகுசு கார் விற்பனைக்கு அறிமுகம்!!

நாடு முழுவதும் உள்ள 24 ஜாகுவார் ஷோரூம்களிலும் இந்த புதிய காருக்கான முன்பதிவு துவங்கியிருக்கிறது. ஜாகுவார் இந்தியா இணையதளத்திலும் முன்பதிவு செய்ய முடியும்.

புதிய ஹோண்டா சிவிக் காரின் படங்கள்!

புதிய ஹோண்டா சிவிக் காரின் உயர்தர படங்களை கீழே உள்ள கேலரியில் காணலாம்.

Most Read Articles
English summary
Jaguar Launches Locally Manufactured XF At ₹ 47.50 Lakh.
Story first published: Thursday, February 23, 2017, 15:32 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X