இந்தியாவில் ரூ.38.25 லட்சம் விலையில் ஜாகுவார் எக்ஸ்.இ டீசல் கார் விற்பனைக்கு அறிமுகமானது

Written By:

ஜாகுவார் லேண்ட்ரோவர் நிறுவனம் இந்தியாவில் புதிய ஜாகுவார் எக்ஸ்.இ டீசல் காரை விற்பனைக்காக அறிமுகம் செய்துள்ளது.

இந்தியாவில் ஜாகுவார் எக்ஸ்.இ டீசல் கார் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த காரில் தற்போது அடிப்படை மாடலை மட்டும் ஜாகுவார் நிறுவனம் ரூ. 38.25 விலையில் அறிமுகம் செய்துள்ளது. இதில் இன்னும் 2 மாடல்கள் அடுத்தடுத்து வெளியிடப்படவுள்ளன.

இந்தியாவில் ஜாகுவார் எக்ஸ்.இ டீசல் கார் விற்பனைக்கு அறிமுகம்!

ஜாகுவார் எக்ஸ்.இ டீசல் மாடலில் 2.0 லிட்டர் இஞ்சீனியம் 4 சிலிண்டர் டர்போசார்ஜிடு எஞ்சின் உள்ளது. இதன்மூலம் 177 பி.எச்.பி பவர் மற்றும் 430 என்.எம் டார்க் திறன் கிடைக்கும்.

மேலும் இதில் துடுப்பு ஷிஃப்டர்கள் கொண்ட8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உள்ளது.

இந்தியாவில் ஜாகுவார் எக்ஸ்.இ டீசல் கார் விற்பனைக்கு அறிமுகம்!

ஜாகுவார் நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்த கார்கள் அனைத்தும் டீசல் மற்றும் பெட்ரோல் என இரண்டு மாடல்களிலும் வெளிவந்துள்ளன.

இந்தியாவில் ஜாகுவார் எக்ஸ்.இ டீசல் கார் விற்பனைக்கு அறிமுகம்!

ஜாகுவார் எக்ஸ்.இ காரில் மட்டும் தான் டீசல் மாடல் இல்லாமல் இருந்தது. இதிலும் டீசல் மாடலை வெளியிட்டு அந்த குறையையும் ஜாகுவார் தீர்த்துவிட்டது.

இந்தியாவில் ஜாகுவார் எக்ஸ்.இ டீசல் கார் விற்பனைக்கு அறிமுகம்!

ஜாகுவார் எக்ஸ்.இ டீசல் மாடலை மெர்சிடிஸ் சி 220டி மற்றும் பி.எம்.டபுள்யூ 32டி மற்றும் ஆடியின் ஏ4 டி.டி.ஐ மாடலுக்கு போட்டியாக வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் ஜாகுவார் எக்ஸ்.இ டீசல் கார் விற்பனைக்கு அறிமுகம்!

செயல்திறனை பொறுத்தளவில் ஜாகுவார் எக்ஸ்.இ மெர்சிடிஸ் சி 220டி காரை விட 10 பி.எச்.பி பவர் கூடுதலாக பெற்றுள்ளது.

மேலும் பி.எம்.டபுள்யூ 32டி மற்றும் ஆடியின் ஏ4 டி.டி.ஐ கார்களை விட 10 பி.எச்.பி பவரை குறைவாக பெற்றுள்ளது.

இந்தியாவில் ஜாகுவார் எக்ஸ்.இ டீசல் கார் விற்பனைக்கு அறிமுகம்!

முற்றிலும் பூனேவில் உள்ள ஜாகுவாரின் தொழிற்சாலையில் இந்த எக்ஸ்.இ டீசல் கார் தயாரிக்கப்பட்டுள்ளது. செயல்திறன் மற்றும் வடிவமைப்பை பொறுத்தளவில் பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களுக்கு இடையே பெரிய வித்தியாசம் இல்லை என்றும் தெரியவருகிறது.

இந்தியாவில் ஜாகுவார் எக்ஸ்.இ டீசல் கார் விற்பனைக்கு அறிமுகம்!

ஜாகுவார் தயாரிப்புகளுக்கே உரித்தான ஜாகுவார் டிரைவ் கண்ட்ரோல் சிஸ்டம் இதில் உள்ளது. இதன்மூலம் நமது மனநிலைக்கு ஏற்றவாறு காரை ஓட்டி செல்லலாம்.

இந்தியாவில் ஜாகுவார் எக்ஸ்.இ டீசல் கார் விற்பனைக்கு அறிமுகம்!

தோற்றம், செயல்திறன் மற்றும் தொழில்நுட்பங்களுக்காகவே ஜாகுவார் எக்ஸ்.இ டீசல் கார் பெரிய எதிர்ப்பார்ப்பை இந்திய வாடிக்கையாளர்களிடம் பெற்றுள்ளது.

இந்தியாவில் ஜாகுவார் எக்ஸ்.இ டீசல் கார் விற்பனைக்கு அறிமுகம்!

மேலும் இந்தியாவில் இதற்கான வரவேற்பு அதிகளவில் இருப்பதை அறிந்த ஜாகுவார் நிறுவனம், கடந்த மாதத்திற்கு முன்பு இதற்கான முன்பதிவை தொடங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும்... #ஜாகுவார் #jaguar
English summary
Jaguar XE diesel launched in India. The Jaguar XE diesel is powered by a 2.0-litre Ingenium turbo four cylinder engine producing 177bhp and 430 Nm of torque.
Story first published: Monday, May 22, 2017, 17:21 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark