மின்சார ஆற்றலுக்கு போட்டியாக அடுத்து களமிறங்கும் மரக்கார்கள்... ஆராய்ச்சியில் ஜப்பான் விஞ்ஞானிகள்..!

Written By:

முழுவதும் மரத்திலான கார்களை பயன்பாட்டிற்கு கொண்டு வரும் ஆராய்ச்சியில் ஜப்பான் நாட்டை சேர்ந்த விஞ்ஞானிகள் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றனர்.

மரக்கூழினால் தயாரிக்கப்படும் கார்கள் & உதிரிபாகங்கள்...!!

தற்போது பயன்பாட்டில் உள்ள கார்களுக்கு கட்டமைப்பு மற்றும் அதற்கு தேவையான உதிரிபாகங்களுக்கு எஃகு தான் முக்கிய உலோகமாக இருந்து வருகிறது.

மரக்கூழினால் தயாரிக்கப்படும் கார்கள் & உதிரிபாகங்கள்...!!

எஃகு உலோக பயன்பாட்டால், கார்களுக்கு அதிகளவில் எரிவாயு தேவை ஏற்படுகிறது. இதுவே மரத்தினால் உருவாக்கப்பட்டால், எரிவாயு தேவை குறையும் என கூறப்படுகிறது.

Recommended Video - Watch Now!
Jeep Compass Launched In India | In Tamil - DriveSpark தமிழ்
மரக்கூழினால் தயாரிக்கப்படும் கார்கள் & உதிரிபாகங்கள்...!!

அதிக மாசுபாட்டை உருவாக்கக்கூடிய எஸ்யூவி, கனரக வாகனங்களின் எடையை கூடுமான வரையில் குறைக்கு வேண்டிய அவசியம் உள்ளது என்று வாகன கூறுகள் ஆய்வு நிறுவனம் ஒன்று கருத்து கூறியுள்ளது.

மரக்கூழினால் தயாரிக்கப்படும் கார்கள் & உதிரிபாகங்கள்...!!

அமெரிக்காவை சேர்ந்த எரிசக்தி துறை சார்ந்த அதிகாரிகள் வாகனத்தின் எடை 10% குறைந்தால், எரிபொருள் தேவையில் அது 8% குறையும் என்று கூறுகின்றனர்.

மரக்கூழினால் தயாரிக்கப்படும் கார்கள் & உதிரிபாகங்கள்...!!

மரத்தினால் செய்யப்படும் கார்கள், மின்சார கார்களின் பயன்பாட்டை போல திறன்பெற்றவை தான். ஆனால் எரிபொருள் தேவையுடன் மரத்திலான கார்கள் இயங்கும் என்பதே இங்குள்ள வேறுபாடு.

மரக்கூழினால் தயாரிக்கப்படும் கார்கள் & உதிரிபாகங்கள்...!!

வாகன துறையில் மரத்தின் பயன்பாடு உள்ளே வருவது இதுதான் முதல்முறை. ஏற்கனவே வீடுகள், கப்பல், பாலங்கள் போன்ற உறுதித்தன்மை கொண்ட கட்டுமானங்களை கட்டமைக்க மரத்தின் தேவை பயன்படுத்தப்படுகிறது.

மரக்கூழினால் தயாரிக்கப்படும் கார்கள் & உதிரிபாகங்கள்...!!

மரத்தினால் ஆன கார்களை தயாரிக்கும் முடிவில், அதற்கான மரக்கூழ் ஒன்றை ஜப்பானின் கியோட்டா பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

மரக்கூழினால் தயாரிக்கப்படும் கார்கள் & உதிரிபாகங்கள்...!!

இந்த மரக்கூழ் என்பது எஃகு உலோகத்தின் உறுதிப்பாடு மற்றும் பயன்பாட்டை வாகனங்களுக்கு ஏற்றவகையில் தர வல்லது என அவர்கள் தெரிவிக்கின்றனர்.

மரக்கூழினால் தயாரிக்கப்படும் கார்கள் & உதிரிபாகங்கள்...!!

வெளிப்புற காட்சிக்கு உருவாக்கப்படும் டிஸ்பிளேக்குள் முதல் பேனா மை வரை செல்லுலோஸ், நானோ நாரிழைகள் போன்றவை பயன்படுத்தப்படுகிறது.

மரக்கூழினால் தயாரிக்கப்படும் கார்கள் & உதிரிபாகங்கள்...!!

இதுபோன்ற தனிமங்களை கொண்டு வாகனங்கள் மற்றும் அதற்கான உதிரிபாகங்களை கட்டுமானப்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மரக்கூழினால் தயாரிக்கப்படும் கார்கள் & உதிரிபாகங்கள்...!!

இப்படி தயாரிக்கப்படும் மரக்கூழ் கொண்டு காரினுடைய கதவுகள், மோதலை தவிர்க்கும் அமைப்பு, காரின் மேற்கூரை போன்ற பகுதிகள் உருவாக்கப்படும்.

மரக்கூழினால் தயாரிக்கப்படும் கார்கள் & உதிரிபாகங்கள்...!!

இவற்றை தவிர ஜப்பான் பல்கலைக்கழகத்தை சார்ந்த பேராசிரியர் டாட்சுனோ கனெகோ, உயர் ரக பிளாஸ்டிக்கால் வாகனங்களுக்கான எஞ்சினை உருவாக்கும் முனைப்பில் இருக்கிறார்.

மரக்கூழினால் தயாரிக்கப்படும் கார்கள் & உதிரிபாகங்கள்...!!

அதிக நிலை வெப்பத்தை தாங்கக்கூடிய அளவில் வாகன எஞ்சின்களை உருவாக்க பேராசிரியர் கனெகோ, கார் பகுதி மற்றும் மின்னணு பாகங்களை உற்பத்தி செய்யும் வெளிநாட்டு நிறுவனங்களுடன் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார்.

மரக்கூழினால் தயாரிக்கப்படும் கார்கள் & உதிரிபாகங்கள்...!!

ஜப்பான் விஞ்ஞானிகள் இந்த முயற்சிக்கு உலக ஆட்டோமொபைல் தயாரிப்பு நிறுவனங்கள் பெரியளவில் ஆதரவு தரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

மரக்கூழினால் தயாரிக்கப்படும் கார்கள் & உதிரிபாகங்கள்...!!

சீனா, 2025ம் ஆண்டிற்குள் குறைந்தபட்சம் ஐந்தில் ஒரு பங்கு வாகன விற்பனையை மின்சார ஆற்றலுக்கு மாற்றி முயற்சித்து வருகிறது.

மரக்கூழினால் தயாரிக்கப்படும் கார்கள் & உதிரிபாகங்கள்...!!

பிஎம்டபுள்யூ ,கார்பன் ஃபைபரை தேர்ந்தெடுத்து, அதன் மூலம் பிளாஸ்டிக் கூரைக்கொண்ட ஒரு புதிய மெலிதான எம்5 செடான் காரை கடந்த மாதம் அறிமுகம் செய்தது.

மரக்கூழினால் தயாரிக்கப்படும் கார்கள் & உதிரிபாகங்கள்...!!

மேலும் டொயோட்டா நிறுவனமும் அதிக விற்பனை திறனை பெற்ற சில மாடல்களில் பிஎம்டபுள்யூ கார்பன் ஃபைபரை முக்கிய உலோகமாக பயன்படுத்தியது.

மரக்கூழினால் தயாரிக்கப்படும் கார்கள் & உதிரிபாகங்கள்...!!

தொடர்ந்து சீனா மற்றும் பல வாகன தயாரிப்பு நிறுவனங்கள் எரிபொருள் பயன்பாட்டை குறைக்கும் நோக்கில் ஈடுபட்டு வர, மரக்கூழினால் தயாரிக்கப்படும் கார்களுக்கு பெரிய சந்தை விரைவிலேயே உருவாகலாம் என்ற நிலை தற்போது எழுந்துள்ளது.

English summary
Read in Tamil: Japan Researchers Developing Wood Pulp to Replace Steel Parts in Vehicles. Click for Details...
Story first published: Tuesday, October 3, 2017, 16:50 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark