4 மீட்டருக்கும் குறைவான நீளத்தில் புதிய எஸ்யூவியை களமிறக்கும் ஜீப் நிறுவனம்!

4 மீட்டர் நீளத்திற்கும் குறைவான புதிய எஸ்யூவி மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக ஜீப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

By Saravana Rajan

காம்பஸ் எஸ்யூவி மூலமாக இந்தியாவில் மிக வேகமாக பிரபலமடைந்து வரும் அமெரிக்காவை சேர்ந்த ஜீப் நிறுவனம், அடுத்து 10 லட்ச ரூபாய் மார்க்கெட்டில் புதிய எஸ்யூவி மாடலை இந்தியாவில் களமிறக்க உள்ளது.

4 மீட்டர் நீளத்திற்கும் குறைவான புதிய எஸ்யூவியை களமிறக்கும் ஜீப்!

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்து வரும் சர்வதேச ஆட்டோமொபைல் கண்காட்சியில், ஆட்டோகார் இந்தியா தளத்திடம் பேசிய ஜீப் நிறுவனத்தின் தலைவர் மைக் மேன்லி இந்த திட்டத்தை உறுதிப்படுத்தி இருக்கிறார்.

4 மீட்டர் நீளத்திற்கும் குறைவான புதிய எஸ்யூவியை களமிறக்கும் ஜீப்!

இந்தியாவிற்காக 4 மீட்டர் நீளத்திற்கும் குறைவான புதிய எஸ்யூவி மாடலை உருவாக்கி வருவதாக மைக்கேல் மேன்லி கூறி இருக்கிறார். இது இந்திய ஜீப் பிரியர்கள் மத்தியில் பெரும் ஆவலை கிளறி இருக்கிறது.

4 மீட்டர் நீளத்திற்கும் குறைவான புதிய எஸ்யூவியை களமிறக்கும் ஜீப்!

தற்போது ஜீப் நிறுவனத்திடம் 4 மீட்டர் நீளத்திற்கும் குறைவான மாடல் இல்லை. எனினும், அந்த நிறுவனத்தின் ரெனிகேட் எஸ்யூவியை கத்தரி போட்டு இந்தியாவில் அறிமுகம் செய்ய ஜீப் திட்டமிட்டு பணியாற்றி வருவதாக தெரிகிறது.

4 மீட்டர் நீளத்திற்கும் குறைவான புதிய எஸ்யூவியை களமிறக்கும் ஜீப்!

வெளிநாடுகளில் விற்பனையில் இருக்கும் ஜீப் ரெனிகேட் எஸ்யூவி 4.3 மீட்டர் நீளம் கொண்டதாக இருக்கிறது. இதனை 4 மீட்டருக்குள்ளாக சுருக்கி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட வாய்ப்பு இருக்கிறது. ஏனெனில், ஜீப் ரெனிகேட் எஸ்யூவி பலமுறை இந்தியாவில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு இருக்கிறது.

4 மீட்டர் நீளத்திற்கும் குறைவான புதிய எஸ்யூவியை களமிறக்கும் ஜீப்!

ஜீப் ரெனிகேட் எஸ்யூவியின் நீளம் குறைக்கப்பட்டாலும், டிசைன் மற்றும் வசதிகளில் மிகச் சிறப்பான மாடலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில், சில பிரிமியம் வசதிகள் குறைக்கப்பட்டு விலையை கட்டுக்குள் கொண்டு வரவும் ஜீப் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

4 மீட்டர் நீளத்திற்கும் குறைவான புதிய எஸ்யூவியை களமிறக்கும் ஜீப்!

அண்மையில் வந்த ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் பிளாட்ஃபார்மில்தான் இந்த புதிய ஜீப் ரெனிகேட் எஸ்யூவியும் உருவாக்கப்பட்டு இருக்கிறது. ஏற்கனவே, மஹாராஷ்டிர மாநிலம் ரஞ்சன்கவுனில் உள்ள ஃபியட் க்றைஸ்லர் கார் ஆலையில், புதிய காம்பஸ் எஸ்யூவியின் உற்பத்தி நடந்து வருவதால், ரெனிகேட் எஸ்யூவியை உற்பத்தி செய்வதில், ஜீப் நிறுவனத்திற்கு பிரச்னை இருக்காது.

4 மீட்டர் நீளத்திற்கும் குறைவான புதிய எஸ்யூவியை களமிறக்கும் ஜீப்!

மேலும், வலதுபக்க டிரைவிங் சிஸ்டம் கொண்ட நாடுகளுக்கு ஜீப் ரெனிகேட் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யவும் திட்டமிடப்பட்டு இருக்கிறது. ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் எஞ்சின்கள்தான் ஜீப் ரெனிகேட் எஸ்யூவியில் பயன்படுத்தப்படும்.

4 மீட்டர் நீளத்திற்கும் குறைவான புதிய எஸ்யூவியை களமிறக்கும் ஜீப்!

ரூ.10 லட்சம் ஆரம்ப விலையில் புதிய ஜீப் ரெனிகேட் எஸ்யூவி விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த ஆண்டு இறுதியில் அல்லது 2019ம் ஆண்டு துவக்கத்தில் புதிய ஜீப் ரெனிகேட் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகமாகும் வாய்ப்புகள் உள்ளன.

4 மீட்டர் நீளத்திற்கும் குறைவான புதிய எஸ்யூவியை களமிறக்கும் ஜீப்!

புதிய எஸ்யூவியானது ஜீப் நிறுவனத்தின் மிக குறைவான விலை கொண்ட மாடலாக இருக்கும். மாருதி விட்டாரா பிரெஸ்ஸா, ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் மற்றும் டாடா நெக்ஸான் எஸ்யூவி மாடல்களுடன் போட்டி போடும்.

Most Read Articles
மேலும்... #ஜீப் #jeep
English summary
Speaking to Autocar India at the Los Angeles Auto Show, Jeep's global head, Mike Manley said that the company is currently working on a sub-4 metre SUV for the Indian market.
Story first published: Saturday, December 2, 2017, 12:48 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X