ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் விலை குறைவான புதிய டீசல் எஞ்சின் மாடல் வருகிறது

Written By:

கடந்த ஜூலை மாத இறுதியில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவி இந்திய வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்துவிட்டது. மிடுக்கான தோற்றம், சிறப்பான எஞ்சின் சாய்ஸ்களுடன் புதிய ஜீப் காம்பஸ் வந்த நிலையில், வாடிக்கையாளர்களுக்கு மேலும் ஒரு இன்ப அதிர்ச்சியை ஜீப் காம்பஸ் தந்துள்ளது.

ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் விலை குறைவான புதிய டீசல் எஞ்சின் மாடல் வருகிறது

தற்போது ஜீப் காம்பஸ் எஸ்யூவி 1.4 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் எஞ்சின் மற்றும் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் மாடல்களில் கிடைக்கிறது. பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 160 பிஎச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லது. டீசல் மாடல் 170 பிஎச்பி பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லதாக இருக்கிறது.

ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் விலை குறைவான புதிய டீசல் எஞ்சின் மாடல் வருகிறது

பெட்ரோல் எஞ்சின் 6 ஸ்பீடு கியர்பாக்ஸுடனும், டீசல் மாடல் 7 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் கிடைக்கிறது. இந்த நிலையில், ஜீப் காம்பஸ் எஸ்யூவியில் புதிய 1.6 லிட்டர் டீசல் எஞ்சினுடன் அறிமுகப்படுத்த இருக்கும் தகவல் வெளியாகி உள்ளது.

ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் விலை குறைவான புதிய டீசல் எஞ்சின் மாடல் வருகிறது

ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் 1.6 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்ட மாடல் இந்தியாவில் சோதனை ஓட்டம் நடத்தப்படுவது குறித்த ஸ்பை படங்கள் டீம் பிஎச்பி தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இந்த புதிய மல்டிஜெட் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 120 பிஎச்பி பவரையும், 320 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்தது.

Recommended Video - Watch Now!
Datsun rediGO Gold 1.0-Litre Launched In India | In Tamil- DriveSpark தமிழ்
ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் விலை குறைவான புதிய டீசல் எஞ்சின் மாடல் வருகிறது

மாருதி எஸ் க்ராஸ் காரில் அறிமுகம் செய்யப்பட்ட அதே ஃபியட் டீசல் எஞ்சின்தான் இது. இந்த புதிய மாடல் நிச்சயம் வாடிக்கையாளர்களை பெரிதும் கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் விலை குறைவான புதிய டீசல் எஞ்சின் மாடல் வருகிறது

இந்த புதிய டீசல் மாடல் தற்போது உள்ள ஜீப் காம்பஸ் டீசல் மாடலைவிட ரூ.70,000 வரை விலை குறைவானதாக இருக்கும் என்பதால், வாடிக்கையாளர்களுக்கு நிச்சயம் சிறந்த சாய்ஸாக மாறும் வாய்ப்புள்ளது.

ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் விலை குறைவான புதிய டீசல் எஞ்சின் மாடல் வருகிறது

இந்த புதிய மாடல் சோதனை ஓட்டம் நடத்தப்படுவது குறித்த தகவல் வெளியாகி இருப்பது, போட்டியாளர்களுக்கு மற்றொரு அதிர்ச்சி செய்தியாகவே அமையும். அதேநேரத்தில், ஜீப் காம்பஸ் எஸ்யூவியை வாங்க விரும்புவோருக்கு நிச்சயம் நல்ல செய்தியாக இருக்கும்.

மேலும்... #ஜீப் #jeep
English summary
Team-BHP has revealed spy pictures of a Jeep Compass with 1.6-litre diesel engine being tested in India. Does that mean Jeep will launch an even more affordable Compass in India?
Story first published: Wednesday, September 27, 2017, 8:17 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark