ஜீப் காம்பஸ் எஸ்யூவிக்கு அமோக வரவேற்பு... ஃபியட் க்றைஸலர் குழுமம் ஹேப்பி அண்ணாச்சி...!!

விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவிக்கு சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளது.

By Saravana Rajan

விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் ஜீப் காம்பஸ் எஸ்யூவி இந்தியர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில், மூன்று நாட்களுக்கு முன் இந்த எஸ்யூவிக்கு அதிகாரப்பூர்வமாக முன்பதிவு துவங்கப்பட்டது.

ஜீப் காம்பஸ் எஸ்யூவிக்கு அமோக வரவேற்பு...

ரூ.50,000 முன்பணம் செலுத்தி ஆன்லைனிலும், டீலர்களிலும் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று ஜீப் நிறுவனம் அறிவித்தது. இந்த நிலையில், இந்த எஸ்யூவிக்கு நல்ல எண்ணிக்கையில் முன்பதிவு கிடைத்துள்ளது. மூன்று நாட்களில் மட்டும் 1,000க்கும் மேற்பட்ட முன்பதிவுகளை இந்த எஸ்யூவி குவித்துள்ளது.

ஜீப் காம்பஸ் எஸ்யூவிக்கு அமோக வரவேற்பு...

இந்த வரவேற்பு ஜீப் நிறுவனத்திற்கு புதிய உத்வேகத்தை அளித்துள்ளது. மேலும், சோர்ந்து போய் கிடந்த ஜீப் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஃபியட் க்றைஸ்லர் நிறுவனத்திற்கும் இந்த முன்பதிவு எண்ணிக்கை புதிய தெம்பை அளித்துள்ளது.

ஜீப் காம்பஸ் எஸ்யூவிக்கு அமோக வரவேற்பு...

ஏற்கனவே விற்பனையில் இருக்கும் ஜீப் நிறுவனத்தின் செரோக்கீ மற்றும் ரேங்லர் மாடல்கள் போனியாகாத நிலையில், ஜீப் காம்பஸ் சிறப்பான வரவேற்பை பெறும் என்று தெரிகிறது. மஹாராஷ்டிர மாநிலம், ரஞ்சன்கவுனில் உள்ள ஃபியட் க்றைஸ்லர் குழுமத்தின் ஆலையில்தான் இந்த எஸ்யூவி உற்பத்தி செய்யப்படுகிறது.

ஜீப் காம்பஸ் எஸ்யூவிக்கு அமோக வரவேற்பு...

இந்தியாவிலேயே 80 சதவீத அளவு உதிரிபாகங்கள் பெற்று அசெம்பிள் செய்யப்படுவதால் மிக சவாலான விலையில் வரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ரூ.15 லட்சம் முதல் ரூ.18 லட்சத்திற்கு இடையில் இந்த எஸ்யூவிக்கு விலை நிர்ணயம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜீப் காம்பஸ் எஸ்யூவிக்கு அமோக வரவேற்பு...

ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் வசீகரமான தோற்றம், நிறுவனத்தின் பாரம்பரியம் போன்றவை இந்த எஸ்யூவிக்கு அதிக வரவேற்பை பெற்றுத் தரும் வாய்ப்புள்ளது. மேலும், வரும் ஆகஸ்ட் மாதத்தில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது.

ஜீப் காம்பஸ் எஸ்யூவிக்கு அமோக வரவேற்பு...

விலை அறிவிக்கப்பட்டுவிட்டால், இந்த முன்பதிவு எண்ணிக்கை மேலும் உயரும் என நம்பலாம். ஏனெனில், ரூ.15 லட்சம் விலையில் வந்தால் அது நிச்சயம் மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவிக்கும், ஹூண்டாய் டூஸான் எஸ்யூவிக்கும் கடும் நெருக்கடியை ஏற்படுத்தும்.

ஜீப் காம்பஸ் எஸ்யூவிக்கு அமோக வரவேற்பு...

ஜீப் காம்பஸ் எஸ்யூவி 1.4 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் எஞ்சின் மற்றும் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் மாடல்களில் வர இருக்கிறது. பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 160 பிஎச்பி பவரையும், 260 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 170 பிஎச்பி பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லதாக இருக்கும்.

Most Read Articles
மேலும்... #ஜீப் #jeep
English summary
Jeep began bookings for the Compass SUV earlier this week with a token amount of Rs 50,000 through its website. And the response is quite impressive.
Story first published: Saturday, June 24, 2017, 16:24 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X