க்ராஷ் டெஸ்ட்டில் அசத்திய புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவி- விபரம்!

Written By:

அண்மையில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவி வாடிக்கையாளர் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றிருக்கிறது. ஜீப் நிறுவனத்தின் பாரம்பரிய வடிவமைப்புடன், மாடர்னான தோற்றத்தை பெற்றிருப்பதால், இந்த எஸ்யூவிக்கு வாடிக்கையாளர்கள் சிறப்பான ஆதரவை தந்துள்ளனர்.

க்ராஷ் டெஸ்ட்டில் அசத்திய புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவி- விபரம்!

இந்தியாவில் இந்த எஸ்யூவிக்கு அறிமுகமானதில் இருந்து இதுவரை 10,000 முன்பதிவுகளையும், 90,000 விசாரணைகளையும் பெற்றிருக்கிறது. இந்த நிலையில், ஜீப் காம்பஸ் எஸ்யூவியை தேர்வு செய்வதற்கு கூடுதல் வலு சேர்க்கும் விதத்தில் க்ராஷ் டெஸ்ட்டிலும் அதிகபட்சமான மதிப்பீட்டை பெற்று அசத்தி இருக்கிறது.

க்ராஷ் டெஸ்ட்டில் அசத்திய புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவி- விபரம்!

இந்த நிலையில், இடதுபக்க ஸ்டீயரிங் வீல் அமைப்பு கொண்ட ஐரோப்பிய மாடல் ஜீப் காம்பஸ் எஸ்யூவி க்ராஷ் டெஸ்ட் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு இருக்கிறது. யூரோ என்சிஏபி அமைப்பு நடத்திய க்ராஷ் டெஸ்ட்டில் ஜீப் காம்பஸ் எஸ்யூவி அதிகபட்சமான 5 நட்சத்திர தர மதிப்பீட்டை பெற்றிருக்கிறது.

க்ராஷ் டெஸ்ட்டில் அசத்திய புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவி- விபரம்!

ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் முன்புற பகுதியை மணிக்கு 64 கிமீ வேகத்தில் செலுத்தி தடுப்பில் மோதி சோதனை செய்யப்பட்டது. அப்போது மிகச் சிறப்பான பாதுகாப்பு தரத்தை பெற்றிருப்பது தெரிய வந்துள்ளது.

க்ராஷ் டெஸ்ட்டில் அசத்திய புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவி- விபரம்!

பெரியவர்களுக்கான பாதுகாப்பு அம்சத்தில் 100க்கு 90 சதவீத அளவிற்கும், சிறியவர்களுக்கான பாதுகாப்பில் 100க்கு 83 சதவீத மதிப்பீட்டையும் பெற்றிருக்கிறது. ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் 4 வீல் டிரைவ் மாடல் பாதசாரிகளுக்கான பாதுகாப்பில் 100க்கு 64 சதவீத மதிப்பீட்டை பெற்றுள்ளது.

க்ராஷ் டெஸ்ட்டில் அசத்திய புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவி- விபரம்!

மேலும், மோதலுக்கு பின்னர் காரின் உட்புற பகுதி ஆய்வு செய்யப்பட்டது. இதில், முன்புற பயணிகள் மட்டுமின்றி, பின்புற பயணிகளின் மூட்டுப் பகுதி, மார்பு பகுதி போன்றவற்றில் மிக குறைவாக இருப்பது தெரிய வந்தது. இதனால், மிகச் சிறந்த கட்டமைப்பை இந்த கார் பெற்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

க்ராஷ் டெஸ்ட்டில் அசத்திய புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவி- விபரம்!

சோதனைக்கு உட்படுத்தப்பட்ட ஜீப் காம்பஸ் எஸ்யூவியில் ஆட்டோமேட்டிக் பிரேக்கிங் சிஸ்டமும் உள்ளதால், கழுத்துப் பகுதியில் ஏற்படும் காயங்களும் தவிர்ப்பதற்கான வாய்ப்பும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அதேநேரத்தில், பக்கவாட்டு மோதல் சோதனையில் சராசரி மதிப்பீட்டை இந்த எஸ்யூவி பெற்றிருக்கிறது.

க்ராஷ் டெஸ்ட்டில் அசத்திய புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவி- விபரம்!

உங்களுக்கு சின்ன சந்தேகம் வரலாம். ஐரோப்பா உள்ளிட்ட வெளிநாடுகளில் விற்பனையாகும் மாடல்களுக்கும், இந்தியாவில் விற்பனையாகும் மாடல்களுக்கும் பாதுகாப்பு தரத்தில் அதிக வித்தியாசம் இருக்கும். பிறகு எப்படி, இந்த க்ராஷ் டெஸ்ட் சோதனையை நம் நாட்டு மாடலுடன் ஒப்பிட்டு கூற முடியும் என்று சந்தேகம் எழலாம்.

க்ராஷ் டெஸ்ட்டில் அசத்திய புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவி- விபரம்!

ஆனால், ஜீப் காம்பஸ் எஸ்யூவி சர்வதேச அளவில் பாதுகாப்பு அம்சத்தில் மிகச் சிறிய வித்தியாசத்தில் மட்டும் விற்பனை செய்யப்படுகிறது. எனவே, இடதுபக்க ஸ்டீயரிங் வீல் அமைப்பு கொண்ட மாடல் க்ராஷ் டெஸ்ட் சோதனைக்கு உட்படுத்தப்பட்டாலும், இந்தியாவில் விற்பனை செய்யப்படும் மாடலுக்கும், இதற்கும் சிறிய அளவிலான வித்தியாசம் மட்டுமே இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

க்ராஷ் டெஸ்ட்டில் அசத்திய புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவி- விபரம்!

ஐரோப்பாவில் விற்பனையாகும் ஜீப் காம்பஸ் மாடலில் 8 ஏர்பேக்குகளும், இந்தியாவில் விற்பனை செய்யப்படும் மாடலில் 6 ஏர்பேக்குகளும் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.

க்ராஷ் டெஸ்ட்டில் அசத்திய புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவி- விபரம்!

அதேநேரத்தில், ஐரோப்பிய மற்றும் இந்தியாவில் விற்பனையாகும் ஜீப் காம்பஸ் மாடல்களின் கட்டமைப்பு தரம் ஒன்றுதான். க்ரம்பிள் ஸோன் மற்றும் பின்புறத்தில் ஐசோஃபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்டுகள் ஒன்று போலத்தான் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. எனவே, ஜீப் காம்பஸ் தற்போது பாதுகாப்பிலும் சிறந்த மாடலாக தன்னை முன்னிறுத்தி இருக்கிறது.

க்ராஷ் டெஸ்ட்டில் அசத்திய புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவி- விபரம்!

ஜீப் எஸ்யூவியின் தோற்றம், வசதிகள், சக்திவாய்ந்த எஞ்சின் ஆப்ஷன்களை தாண்டி இப்போது பாதுகாப்பிலும் சிறந்த கார் என்பது இதன் விற்பனைக்கு கூடுதல் வலு சேர்க்கும் என்று நம்பலாம்.

மேலும்... #ஜீப் #jeep
English summary
Jeep Compass Impresses In Euro NCAP Crash Test.
Story first published: Thursday, September 7, 2017, 16:58 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark