விற்பனைக்கு வரும் முன்பே புக்கிங்குகளை வாரி குவிக்கும் புதிய ஜீப் காம்பஸ்!

Written By:

எதிர்பார்த்தபடியே, புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவிக்கு மிகப்பெரிய வரவேற்பு இருக்கும் என்பதை, அதற்கு கிடைத்து வரும் முன்பதிவுகளை வைத்தே கணிக்க முடிகிறது.

விற்பனைக்கு வரும் முன்பே புக்கிங்குகளை வாரி குவிக்கும் புதிய ஜீப் காம்பஸ்!

இந்த ஆண்டின் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய கார் மாடல் ஜீப் காம்பஸ் எஸ்யூவி. அமெரிக்காவின் ஜீப் நிறுவனத்தின் பாம்பரிய டிசைனில் கம்பீரமாக காட்சி தரும் ஜீப் காம்பஸ் எஸ்யூவியை எதிர்பார்த்து ஏராளமான இந்திய வாடிக்கையாளர்கள் காத்து கிடக்கின்றனர்.

விற்பனைக்கு வரும் முன்பே புக்கிங்குகளை வாரி குவிக்கும் புதிய ஜீப் காம்பஸ்!

இந்த நிலையில், வரும் 31ந் தேதி இந்த புதிய எஸ்யூவி மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. அதற்கு முன்னதாக இந்த எஸ்யூவிக்கு நாடு முழுவதும் உள்ள ஜீப் ஷோரூம்களில் முன்பதிவும் பெறப்பட்டு வருகிறது.

விற்பனைக்கு வரும் முன்பே புக்கிங்குகளை வாரி குவிக்கும் புதிய ஜீப் காம்பஸ்!

தற்போது ஆட்டோகார் இந்தியா வெளியிட்டிருக்கும் தகவல்களின்படி, புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவிக்கு இதுவரை 4,000 பேர் முன்பதிவு செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது. விலை அறிவிப்புக்கு முன்னரே இந்த அளவுக்கு முன்பதிவு பெற்றிருப்பது ஜீப் நிறுவனத்துக்கு பெரும் உற்சாகம் தரும் விஷயமே.

Recommended Video - Watch Now!
Jeep Compass Full Details In Tamil - DriveSpark தமிழ்
விற்பனைக்கு வரும் முன்பே புக்கிங்குகளை வாரி குவிக்கும் புதிய ஜீப் காம்பஸ்!

புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் டீசல் மாடலின் அதிகபட்ச வசதிகள் கொண்ட விலை உயர்ந்த மாடலுக்குத்தான் 60 சதவீத வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

விற்பனைக்கு வரும் முன்பே புக்கிங்குகளை வாரி குவிக்கும் புதிய ஜீப் காம்பஸ்!

புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவியில் 162 பிஎஸ் பவரையும், 250என்எம் டார்க் திறனையும் வழங்கும் 1.4 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் எஞ்சின் மற்றும் 173 பிஎஸ் பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்ல 2.0 லிட்டர் மல்டிஜெட்-II டீசல் எஞ்சின் பொருத்தப்பட்ட ஆப்ஷன்களில் வருகிறது.

விற்பனைக்கு வரும் முன்பே புக்கிங்குகளை வாரி குவிக்கும் புதிய ஜீப் காம்பஸ்!

பெட்ரோல் மாடல் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 7 ஸ்பீடு டியூவல் க்ளட்ச் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களிலும், டீசல் மாடல் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனிலும் வர இருக்கிறது. டீசல் மாடலில் மட்டுமே ஜீப் ஆக்டிவ் ஃபோர் வீல் டிரைவ் சிஸ்டம் கிடைக்கும். டீசல் மாடலில் 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட மாடல் வரும் ஜனவரியில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது.

விற்பனைக்கு வரும் முன்பே புக்கிங்குகளை வாரி குவிக்கும் புதிய ஜீப் காம்பஸ்!

புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவி ஸ்போர்ட், லான்ஜிடியூட் மற்றும் லிமிடேட் ஆகிய மூன்று வேரியண்ட்டுகளில் கிடைக்கும். ஜீப் நிறுவனத்தின் பாரம்பரிய செவன் ஸ்லாட் க்ரில் அமைப்பு, எச்ஐடி ஹெட்லைட்டுகள், 17 இன்ச் அலாய் வீல்கள், எல்இடி டெயில் லைட்டுகள், கருப்பு வண்ண கூரை போன்றவை வெளிப்புறத்தில் முக்கிய அம்சங்கள்.

விற்பனைக்கு வரும் முன்பே புக்கிங்குகளை வாரி குவிக்கும் புதிய ஜீப் காம்பஸ்!

ஜீப் காம்பஸ் எஸ்யூவியில் 7.0 இன்ச் திரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இடம்பெறுகிறது. இந்த சிஸ்டமானது, ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே சாஃப்ட்வேர்களை சப்போர்ட் செய்யும். ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல், ரியர் பார்க்கிங் சென்சார்கள், ரியர் கேமரா, எலக்ட்ரிக் பார்க்கிங் பிரேக் மற்றும் பல சிறப்பு வசதிகளுடன் வருகிறது.

விற்பனைக்கு வரும் முன்பே புக்கிங்குகளை வாரி குவிக்கும் புதிய ஜீப் காம்பஸ்!

வரும் 31ந் தேதி புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டாலும், அக்டோபர் மாதத்தில்தான் டெலிவிரி துவங்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முதல்கட்டமாக டீசல் மாடல் டெலிவிரி துவங்கப்பட உள்ளதாம். பெட்ரோல் மாடலுக்கு வாடிக்கையாளர்கள் சற்று காத்திருக்க வேண்டியிருக்குமாம்.

விற்பனைக்கு வரும் முன்பே புக்கிங்குகளை வாரி குவிக்கும் புதிய ஜீப் காம்பஸ்!

ரூ. 18 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரையிலான விலையில் இந்த புதிய ஜீப் காம்பஸ் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹூண்டாய் டூஸான் எஸ்யூவிக்கு புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவி நேர் போட்டியாக இருக்கும்.

மேலும்... #ஜீப் #jeep
English summary
Jeep Compass Gets 4,000 Bookings In India.

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark