புதிய ஜீப் காம்பாஸ் எஸ்யூவி அறிமுகம் எப்போது? - விபரம்!

Written By:

பிரிமியம் எஸ்யூவி தயாரிப்பில் புகழ்பெற்ற அமெரிக்காவை சேர்ந்த ஜீப் நிறுவனம், கடந்த ஆண்டு செரோக்கீ மற்றும் ரேங்லர் ஆகிய இரண்டு எஸ்யூவி மாடல்களுடன் இந்தியாவில் களமிறங்கியது.

இந்த இரு மாடல்களும் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுவதால் விலை மிக அதிகமாக இருப்பதாக வாடிக்கையாளர்கள் கருதுகின்றனர். இந்த நிலையில், இந்தியாவிலேயே தனது எஸ்யூவி மாடல்களை அசெம்பிள் திட்டத்துடன் அடுத்த கட்ட நடவடிக்கைகளை துவங்கி இருக்கிறது ஜீப் நிறுவனம்.

புதிய ஜீப் காம்பாஸ் எஸ்யூவி அறிமுகம் எப்போது? - விபரம்!

இந்தியர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் விலையில், புத்தம் புதிய எஸ்யூவி மாடல் ஒன்றை ஜீப் நிறுவனம் அறிமுகம் செய்ய இருக்கிறது. ஜீப் காம்பாஸ் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் இந்த புதிய மாடல் தற்போது இந்தியாவில் தீவிர சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

புதிய ஜீப் காம்பாஸ் எஸ்யூவி அறிமுகம் எப்போது? - விபரம்!

இந்தியாவில் ஜீப் நிறுவனத்தின் குறைவான விலை எஸ்யூவி மாடலாக வருவதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. சாலை சோதனையில் இருக்கும் இந்த புதிய எஸ்யூவியின் ஸ்பை படங்களும் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

புதிய ஜீப் காம்பாஸ் எஸ்யூவி அறிமுகம் எப்போது? - விபரம்!

இந்த நிலையில், வரும் ஆகஸ்ட் மாதத்தில் புதிய ஜீப் காம்பாஸ் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. மிக அசத்தலான அம்சங்கள், பிரிமியம் பிராண்டில் வரும் இந்த எஸ்யூவி வாடிக்கையாளர்களை வெகுவாக கவரும்.

புதிய ஜீப் காம்பாஸ் எஸ்யூவி அறிமுகம் எப்போது? - விபரம்!

ஜீப் செரோக்கீ எஸ்யூவியின் சில டிசைன் தாத்பரியங்களும் இந்த புதிய மாடலில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. அதுதவிர, இந்தியாவில் ஜீப் நிறுவனத்தின் குறைவான விலை.மாடல் என்பதால் அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது.

புதிய ஜீப் காம்பாஸ் எஸ்யூவி அறிமுகம் எப்போது? - விபரம்!

இந்தநிலையில், ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் புதிய ஜீப் காம்பாஸ் எஸ்யூவி வரும் ஆகஸ்ட் மாதம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த எஸ்யூவியில் 7 அங்குல திரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இடம்பெற இருக்கிறது. இந்த சாதனமானது, ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ சாஃப்ட்வேர்களை சப்போர்ட் செய்யும்.

புதிய ஜீப் காம்பாஸ் எஸ்யூவி அறிமுகம் எப்போது? - விபரம்!

மூன்று விதமான பெட்ரோல் எஞ்சின்கள் மற்றும் இரண்டு விதமான டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் இந்த புதிய எஸ்யூவி சர்வதேச அளவில் விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவிலும் பெட்ரோல், டீசல் எஞ்சின் ஆப்ஷன்கள் இருக்கும். 7 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்டதாக இருக்கும். மேலும், 2 வீல் டிரைவ் சிஸ்டம் மற்றும் 4 வீல் டிரைவ் சிஸ்டம் மாடல்களிலும் எதிர்பார்க்கலாம்.

புதிய ஜீப் காம்பாஸ் எஸ்யூவி அறிமுகம் எப்போது? - விபரம்!

மஹாராஷ்டிர மாநிலம், ரஞ்சன்கவுனில் உள்ள ஃபியட் க்றைஸ்லர் குழுமத்தின் ஆலையில் இந்த புதிய எஸ்யூவி அசெம்பிள் செய்யப்படும். இந்தியாவிலேயே அசெம்பிள் செய்யப்படுவதால் மிக சரியான விலையில் எதிர்பார்க்கலாம்.

புதிய ஜீப் காம்பாஸ் எஸ்யூவி அறிமுகம் எப்போது? - விபரம்!

ஹூண்டாய் டூஸான் உள்ளிட்ட எஸ்யூவி மாடல்களுடன் போட்டி போடும் என தெரிகிறது. ரூ.19 லட்சம் ஆரம்ப விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விலையில் வரும்போது அது நிச்சயம் குறிப்பிடத்தக்க வரவேற்பை பெறும் வாய்ப்புள்ளது.

புதிய ஜீப் கிராண்ட் செரோக்கீ எஸ்யூவியின் படங்கள்!

புதிய ஜீப் கிராண்ட் செரோக்கீ எஸ்யூவியின் படங்களை கீழே உள்ள கேலரியில் கண்டு ரசிக்கலாம்.

English summary
Jeep India is all geared up for the introduction of its compact SUV, the Compass. The new SUV will be launched in India by August 2017.
Story first published: Saturday, February 4, 2017, 14:24 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark