ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் 7 முக்கிய அம்சங்கள் !!

Written By:

வரும் ஆகஸ்ட் மாதம் ஜீப் காம்பஸ் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. வாடிக்கையாளர்களிடத்தில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்த அமெரிக்க பிராண்டு எஸ்யூவி வெறும் மூன்று நாட்களில் 1,000 முன்பதிவுகளை பெற்றிருக்கிறது. இந்த எஸ்யூவி குறித்த சில முக்கிய விஷயங்களை இந்த செய்தியில் பகிர்ந்து கொள்கிறோம்.

டிசைன்

டிசைன்

ஜீப் நிறுவனத்தின் ரெனிகேட் எஸ்யூவியின் பிளாட்ஃபார்மில்தான் காம்பஸ் எஸ்யூவியும் உருவாக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்தியாவில் விற்பனையில் இருக்கும் ஜீப் செரோக்கீ எஸ்யூவியின் டிசைன் தாத்பரியங்கள் இந்த புதிய காம்பஸ் எஸ்யூவியில் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.

ஜீப் நிறுவனத்தின் பாரம்பரியமான முகப்பு க்ரில் அமைப்பு, சதுர வடிவிலான வீல் ஆர்ச்சுகள் ஆகியவை ஜீப் பாரம்பரியத்தை பரைசாற்றும் டிசைன் அம்சங்கள்.

 சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

எச்ஐடி ஹெட்லைட்டுகள், கம்பீரமான தோற்றத்தை தரும் பெரிய அளவிலான அலாய் வீல்கள், அதிக தரை இடைவெளி உள்ளிட்ட சிறப்பம்சங்களை பெற்றிருக்கிறது. ரெனிகேட் எஸ்யூவியின் பிளாட்ஃபார்மில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த எஸ்யூவியின் கேபின் இடவசதி சிறப்பாக மேம்படுத்தப்பட்டிருப்பது இதன் முக்கிய சிறப்பு.

 வசதிகள்

வசதிகள்

இந்த எஸ்யூவியின் பேஸ் மாடல்களில் 5.0 இன்ச் திரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டமும், டாப் வேரியண்ட்டில் 7.0 இன்ச் திரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டமும் பொருத்தப்பட்டு இருக்கிறது. டியூவல் ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி சிஸ்டம் பொருத்தப்பட்டு இருக்கிறது. டாப் வேரியண்ட்டில் லெதர் இருக்கைகளும் கொடுக்கப்பட்டு இருக்கும்.

 புதிய டீசல் எஞ்சின்

புதிய டீசல் எஞ்சின்

ஜீப் காம்பஸ் எஸ்யூவியில் 164 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்ட 1.4 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 174 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்ட 2.0 லிட்டர் மல்டிஜெட் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கும். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 7 ஸ்பீடு டியூவல் க்ளட்ச் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டு இருக்கும்.

ஆஃப்ரோடு வல்லமை

ஆஃப்ரோடு வல்லமை

புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவியில் செலக்ட் டெர்ரெய்ன் தொழில்நுட்ப வசதியுடன் கூடிய 4 வீல் டிரைவ் சிஸ்டம் வசதியும் இடம்பெற்றிருக்கும். இது ஆஃப்ரோடு சாகசம் செய்ய விரும்புவோருக்கு ஏற்றதாக இருக்கும். பனித்தரை, மணல், சேறு மற்றும் மலைப்பாங்கான பகுதிகளில் பயன்படுத்துவதற்கு ஏற்ற சிறப்பம்சங்களை இந்த எஸ்யூவி பெற்றிருக்கும்.

மேட் இன் இந்தியா

மேட் இன் இந்தியா

இந்த புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவி புனே அருகில் உள்ள ரஞ்சன்கவுனில் உள்ள ஃபியட் க்றைஸ்லர் குழுமத்தின் ஆலையில் அசெம்பிள் செய்யப்பட உள்ளது. இந்த எஸ்யூவிக்கான 80 சதவீத உதிரிபாகங்கள் இந்தியாவிலேயே பெறப்பட உள்ளன.

விலை

விலை

இந்த புதிய எஸ்யூவி ரூ.15 லட்சம் ஆரம்ப விலையில் வர இருப்பதாக பரபரப்பு தகவல் தெரிவிக்கிறது. ஆனால், ரூ.18 லட்சம் முதல் ரூ.25 லட்சம் இடையிலான விலை பட்டியலில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்

டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்

புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவியை அண்மையில் கோவாவில் வைத்து டெஸ்ட் டிரைவ் செய்தோம். அந்த விபரங்களை விரைவில் பகிர்ந்து கொள்கிறோம்.

மேலும்... #ஜீப் #jeep
English summary
Jeep Compass: Jeep Compass: 7 things to know
Story first published: Thursday, June 29, 2017, 17:36 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos