ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் பெட்ரோல் மாடல் டெலிவிரி விரைவில் துவங்குகிறது!

ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் பெட்ரோல் மாடலின் டெலிவிரி பணிகள் விரைவில் துவங்கப்பட உள்ளது.

By Saravana Rajan

புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் பெட்ரோல் மாடலுக்கான டெலிவிரி கொடுக்கும் பணிகள் விரைவில் துவங்க இருக்கிறது. அதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

 ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் பெட்ரோல் மாடல் டெலிவிரி விரைவில் துவங்குகிறது!

கடந்த ஜூலை மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற மாடலாக மாறி இருக்கிறது. முதல்கட்டமாக ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் டீசல் மாடலின் டெலிவிரி பணிகள் துவங்கியது.

 ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் பெட்ரோல் மாடல் டெலிவிரி விரைவில் துவங்குகிறது!

இந்த நிலையில், ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் பெட்ரோல் மாடலின் டெலிவிரி பணிகள் விரைவில் துவங்க இருப்பதாக டீம் பிஎச்பி தளத்தில் செய்தி வெளியிடப்பட்டு இருக்கிறது. இந்த மாத இறுதியில் டெலிவிரி கொடுக்கும் பணிகள் துவங்க உள்ளது.

 ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் பெட்ரோல் மாடல் டெலிவிரி விரைவில் துவங்குகிறது!

மேலும், ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் பெட்ரோல் மாடலின் உற்பத்தியும் ரஞ்சன்கவுனில் உள்ள ஃபியட் க்றைஸ்லர் ஆலையில் கடந்த மாதம் துவங்கிய நிலையில், தற்போது டீலர்களுக்கும் வர துவங்கி விட்டது தெரிய வந்துள்ளது.

Recommended Video

[Tamil] Jeep Compass Launched In India - DriveSpark
 ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் பெட்ரோல் மாடல் டெலிவிரி விரைவில் துவங்குகிறது!

ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் பெட்ரோல் மாடலுக்கு ஏற்கனவே ஜீப் டீலர்களில் ரூ.50,000 முன்பணத்துடன் முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது. தற்போதைய நிலவரப்படி, ஜீப் காம்பஸ் பெட்ரோல் மாடலுக்கு 3 மாதங்கள் வரை காத்திருப்பு காலம் இருப்பதாக தெரிகிறது.

 ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் பெட்ரோல் மாடல் டெலிவிரி விரைவில் துவங்குகிறது!

புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் பெட்ரோல் மாடலில் 160 பிஎச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்ல 1.4 லிட்டர் டர்போசார்ஜ்டடு எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. பெட்ரோல் மாடலின் ஸ்போர்ட் என்ற வேரியண்ட் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டதாகவும். லிமிடேட் மற்றும் லிமிடேட் ஆப்ஷனல் மாடல்கள் 7 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனிலும் கிடைக்கும்.

 ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் பெட்ரோல் மாடல் டெலிவிரி விரைவில் துவங்குகிறது!

பெட்ரோல் மாடலில் 4 வீல் டிரைவ் சிஸ்டம் ஆப்ஷன் இல்லை என்பது குறையாக கருதப்படுகிறது. டீசல் மாடல் மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் மட்டும் கிடைக்கிறது. விரைவில் ஆட்டோமேட்டிக் மாடல் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
மேலும்... #ஜீப் #jeep
English summary
Jeep India commenced the production of the petrol variants of the Compass last month. Now, TeamBHP has spotted the new variant of the SUV at a dealership.
Story first published: Monday, October 16, 2017, 10:32 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X