ஜீப் காம்பாஸ் எஸ்யூவி பெங்களூரில் சோதனை ஓட்டம்!!

Written By:

கடந்த ஆண்டு இரண்டு உயர் வகை எஸ்யூவி மாடல்களுடன் இந்திய கார் சந்தையில் கால் பதித்தது அமெரிக்காவை சேர்ந்த ஜீப் எஸ்யூவி நிறுவனம். இந்த இரு மாடல்களும் இறக்குமதி செய்து விற்பனை செய்யப்படுவதால், வரி காரணமாக விலை மிக அதிகமாக உள்ளது.

பெங்களூரில் வாசகர் கேமராவில் சிக்கிய ஜீப் காம்பாஸ் எஸ்யூவி!!

இதனால், ஜீப் எஸ்யூவி கனவு இந்தியர்களுக்கு சிறப்பான தேர்வாக அமையவில்லை. இந்த நிலையில், ஜீப் எஸ்யூவியை சரியான விலையில் வாங்குவதற்கான கனவுடன் காத்திருப்பவர்களுக்காக புத்தம் புதிய மாடலை ஜீப் எஸ்யூவி நிறுவனம் விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கிறது.

பெங்களூரில் வாசகர் கேமராவில் சிக்கிய ஜீப் காம்பாஸ் எஸ்யூவி!!

ஜீப் காம்பாஸ் என்ற பெயரில் வர இருக்கும் இந்த புதிய எஸ்யூவி மாடல் தற்போது மிக தீவிரமான சாலை சோதனை ஓட்டங்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இந்த எஸ்யூவியின் சோதனை ஓட்டத்தின்போது எடுக்கப்பட்ட பல ஸ்பை படங்களை வாசகர்களின் பார்வைக்கு தொடர்ந்து வழங்கி வருகிறோம்.

பெங்களூரில் வாசகர் கேமராவில் சிக்கிய ஜீப் காம்பாஸ் எஸ்யூவி!!

இந்த நிலையில், பெங்களூரில் அடையாளங்கள் மறைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்ட ஜீப் காம்பாஸ் எஸ்யூவியின் சோதனை படங்களை டிரைவ்ஸ்பார்க் வாசகர் அனுப்பியுள்ளார். இது தயாரிப்பு நிலை மாடலாகவே இருப்பதால், விரைவில் உற்பத்திக்கு கொண்டு செல்லப்படும் வாய்ப்புள்ளது.

பெங்களூரில் வாசகர் கேமராவில் சிக்கிய ஜீப் காம்பாஸ் எஸ்யூவி!!

மஹாரஷ்டிர மாநிலம், ரஞ்சன்கவுனில் உள்ள ஃபியட் க்றைஸ்லர் குழுமத்தின் ஆலையில்தான் இந்த புதிய எஸ்யூவி உற்பத்தி செய்யப்பட உள்ளது. உள்நாட்டில் மட்டுமின்றி, இங்கு உற்பத்தி செய்யப்பட உள்ள ஜீப் காம்பாஸ் எஸ்யூவி இங்கிருந்து வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட உள்ளது.

பெங்களூரில் வாசகர் கேமராவில் சிக்கிய ஜீப் காம்பாஸ் எஸ்யூவி!!

ஜீப் ரெனிகேட் எஸ்யூவியின் அடிப்படையில்தான் இந்த புதிய ஜீப் காம்பாஸ் எஸ்யூவி உருவாக்கப்ப்டடுள்ளது. ஜீப் செரோக்கீ எஸ்யூவியின் டிசைன் தாத்பரியங்களும் இந்த புதிய எஸ்யூவியில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனால், மிகச் சிறப்பான டிசைன் கொண்ட எஸ்யூவி மாடலாக வெளிவர இருக்கிறது.

பெங்களூரில் வாசகர் கேமராவில் சிக்கிய ஜீப் காம்பாஸ் எஸ்யூவி!!

ரூ.20 லட்சத்தில் எதிர்பார்க்கப்படுவதால், இந்த எஸ்யூவி மிகப்பெரிய வரவேற்பை பெறுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. ஏனெனில், ஜீப் நிறுவனத்தின் பிராண்டு மதிப்பும், எஸ்யூவியின் ஸ்டைலான தோற்றமும், தொழில்நுட்பமும் வாடிக்கையாளர்களை கவர வாய்ப்பு இருக்கிறது.

புதிய ஹோண்டா சிட்டி காரின் படங்கள்!

புதிய ஹோண்டா சிட்டி காரின் பிரத்யேக படங்களின் தொகுப்பை கீழே உள்ள கேலரியில் காணலாம்.

English summary
A prototype of the upcoming Jeep Compass has been spied testing again. The latest Jeep Compass spy pics were sent in by a DriveSpark reader who spotted the camouflaged SUV as it tried to zip its way out of the infamous traffic snarls of Bangalore.
Story first published: Saturday, February 18, 2017, 11:33 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark