மிக சவாலான விலையில் வரும் புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவி... நடுக்கத்தில் போட்டியாளர்கள்!

Written By:

மிக சவாலான விலையில் புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவி விற்பனைக்கு வர இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

சவாலான விலையில் வருகிறது புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவி?

தற்போது எஸ்யூவி பிரியர்களின் மத்தியில் பேராவலை ஏற்படுத்தி இருக்கும் மாடல் ஜீப் காம்பஸ். அண்மையில் இந்த புதிய எஸ்யூவிக்கு நாடுமுழுவதும் உள்ள ஜீப் நிறுவனத்தின் டீலர்களில் முன்பதிவு துவங்கப்பட்டது. ரூ.1 லட்சம் முன்பணத்துடன் முன்பதிவு நடக்கிறது.

சவாலான விலையில் வருகிறது புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவி?

அண்மையில் ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் வேரியண்ட் விபரங்கள் வெளியானது. இதன்மூலமாக, இந்த எஸ்யூவியை வாங்க காத்திருப்பவர்களுக்கு ஓரளவு ஐடியா கிடைத்தது.

சவாலான விலையில் வருகிறது புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவி?

இந்தியாவிலேயே அசெம்பிள் செய்யப்படும் முதல் ஜீப் நிறுவனத்தின் எஸ்யூவி மாடல் இது. மேலும், பெரும்பாலான உதிரிபாகங்கள் இந்திய சப்ளையர்களிடமிருந்து பெறப்படுகிறது. எனவே, மிக சவாலான விலையில் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

சவாலான விலையில் வருகிறது புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவி?

இந்த நிலையில், தற்போது ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் ஆரம்ப விலை குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, ரூ.18 லட்சம் விலையில் இந்த புதிய எஸ்யூவி விற்பனைக்கு வர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. News18 தளம் இந்த தகவலை வெளியிட்டு இருக்கிறது.

சவாலான விலையில் வருகிறது புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவி?

இதனால், பிரிமியம் ரக எஸ்யூவி மாடலை வாங்க இருப்பவர்களை ஜீப் காம்பஸ் வெகுவாக கவர்ந்து இழுக்கும் என்று தெரிகிறது. மேலும், ஹூண்டாய் டூஸான் உள்ளிட்ட எஸ்யூவி மாடல்களுக்கும் பெரும் சவாலாக மாறும் என தெரிகிறது.

சவாலான விலையில் வருகிறது புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவி?

அத்துடன் இதே பட்ஜெட்டில் இருக்கும் 7 சீட்டர் மாடல்களாக இருக்கும் மஹிந்திரா எக்ஸ்யூவி 500, டாடா ஹெக்ஸா உள்ளிட்ட கார்களுக்கும் போட்டியை தரும். அதேநேரத்தில், ஜீப் காம்பஸ் பிரிமியம் பிராண்டாக இருப்பதால் கூடுதல் மதிப்பை பெறும்.

சவாலான விலையில் வருகிறது புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவி?

ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் பிராண்டு மதிப்பு மட்டுமின்றி, ஜீப் நிறுவனத்தின் பாரம்பரிய டிசைன், கம்பீரம், நாகரீகமான டிசைன் அம்சங்கள் வாடிக்கையாளர்களை வெகுவாக கவரும் வாய்ப்புள்ளது.

சவாலான விலையில் வருகிறது புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவி?

இந்த எஸ்யூவியின் பேஸ் மாடலில் 16 இன்ச் ஸ்டீல் வீல் ஹாலஜன் ஹெட்லைட்டுகள், கருப்பு வண்ண இன்டீரியர், எலக்ட்ரிக் பார்க்கிங் பிரேக், 5.0 இன்ச் திரையுடன் கூடிய டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் போன்றவை இடம்பெற்றிருக்கும்.

சவாலான விலையில் வருகிறது புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவி?

டாப் வேரியண்ட்டுகளில் எச்ஐடி ஹெட்லைட்டுகள், 17 இன்ச் அலாய் வீல்கள், சாம்பல் வண்ண இன்டீரியர், லெதர் இருக்கைகள் மற்றும் கருப்பு வண்ணம் தீட்டப்பட்ட கூரை போன்ற சிறப்பம்சங்களுடன் கிடைக்கும்.

சவாலான விலையில் வருகிறது புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவி?

ஜீப் காம்பஸ் எஸ்யூவி 1.4 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 2.0 லிட்டர் டீசல் எஞ்சினுடன் வர இருக்கிறது. முதலில் மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டதாகவும், பின்னர் டீசல் மாடலில் 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் மாடல் அறிமுகம் செய்யப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆகஸ்ட்டில் இந்த கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சவாலான விலையில் வருகிறது புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவி?

ஏற்கனவே இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட ஜீப் செரோக்கீ மற்றும் ரேங்லர் எஸ்யூவி மாடல்கள் இறக்குமதி விற்பனை செய்யப்படுகின்றன. இதனால், விலை மிக அதிகமாக நிர்ணயிக்கப்பட்டதால் பெரும் வரவேற்பு இல்லை. இந்த நிலையில், ஜீப் காம்பஸ் மூலமாக இந்திய மார்க்கெட்டில் வலுவாக காலூன்ற ஜீப் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்கு அடித்தளமாக ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் விலையை மிக சவாலாக நிர்ணயிக்கும் என்று நம்பலாம்.

ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் டெஸ்ட் டிரைவ்

அண்மையில் ஜீப் காம்பஸ் எஸ்யூவியை கோவாவில் வைத்து டெஸ்ட் டிரைவ் செய்திருக்கிறோம். அதன் விசேஷ செய்தித் தொகுப்பை விரைவில் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் படிக்கலாம்.

மேலும்... #ஜீப் #jeep
English summary
Jeep Compass Starting Price Details Revealed.
Story first published: Saturday, June 17, 2017, 12:26 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark