புதிய ஜீப் ரெனகேட் காரின் இந்திய அறிமுகம், விலை மற்றும் விவரங்கள்..!

Written By:

அமெரிக்காவைச் சேர்ந்த ஜீப் நிறுவனம், இந்தியாவில் அதன் தொடக்க நிலை விலைகொண்ட எஸ்யூவியான காம்பஸ் காரை விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது. இதனைத் தொடர்ந்து புதிய 'ஜீப் ரெனகேட்' காரையும் இந்தியாவில் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது இந்நிறுவனம்.

புதிய ஜீப் ரெனகேட் எஸ்யூவி அறிமுகம் எப்போது? - விவரம்

ஏறக்குறைய ரெனால்ட் டஸ்டர் காரின் நீள, அகலத்தை ஒத்து ஒருக்கும் ஜீப் ரெனகேட், சர்வதேச சந்தைகளில் அதிகம் கவரப்பட்ட ஒரு மாடலாகும். இதன் இந்திய அறிமுகம் தொடர்பான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

புதிய ஜீப் ரெனகேட் எஸ்யூவி அறிமுகம் எப்போது? - விவரம்

4.2 மீட்டர் நீளம் கொண்ட ஜீப் ரெனகேட் கவர்ச்சிகரமான தோற்றம் கொண்டது. சிறப்பான ஆஃப் ரோடிங் அனுபவத்தை வழங்கவல்ல ரெனகேட் 4*2 மற்றும் 4*4 என இரண்டு செட்டப்களிலும் கிடைக்கும்.

புதிய ஜீப் ரெனகேட் எஸ்யூவி அறிமுகம் எப்போது? - விவரம்

சர்வதேச சந்தைகளில் ஜீப் ரெனகேட் 4 வேரியண்ட்களில் கிடைத்துவருகிறது. அவை கிழே உள்ள பட்டியலில் காணுங்கள்..

  • ஸ்போர்ட்
  • லேடிட்யூட்
  • ஆல்ட்டிட்யூட்
  • ட்ரெயில்ஹாக்
புதிய ஜீப் ரெனகேட் எஸ்யூவி அறிமுகம் எப்போது? - விவரம்

முதல் 3 வேரியண்ட்களில் 1.4 லிட்டர் மல்டிஏர் டர்போசார்ஜூடு பெட்ரோல் இஞ்சின் தரப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 158 பிஹச்பி ஆற்றலையும், 250 என்எம் டார்க்கையும் வழங்கவல்லது. இதில் 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் உள்ளது.

புதிய ஜீப் ரெனகேட் எஸ்யூவி அறிமுகம் எப்போது? - விவரம்

டாப் மாடலான ரெனகேட் ட்ரெயில்ஹாக் வேரியண்டில் 2.4 லிட்டர் மல்டிஏர் டர்போசார்ஜூடு பெட்ரோல் இஞ்சின் தரப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 178 பிஹச்பி ஆற்றலையும், 237 என்எம் டார்க்கையும் வழங்கவல்லது. இதில் 9 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர் பாக்ஸ் உள்ளது.

புதிய ஜீப் ரெனகேட் எஸ்யூவி அறிமுகம் எப்போது? - விவரம்

ஜீப் ரெனகேட் 4,232மிமீ நீளமும், 2,022 மிமீ அகலமும் கொண்டது. இது ஹூண்டாய் கிரெட்டா காரைவிட 242 மிமீ அகலமாகவும், 40மிமீ உயரம் குறைவாகவும் உள்ளது.

புதிய ஜீப் ரெனகேட் எஸ்யூவி அறிமுகம் எப்போது? - விவரம்

பாதுகாப்பை உறுதிசெய்யும் விதமாக ஸ்டேண்டர்ட் எலக்ட்ரானிக் கன்ட்ரோல்டு (EBD) ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ஹில்ஸ்டார்ட் அஸிஸ்ட் உதவி, கார்னர் விளக்குகள், ரோல் ஓவர் மிட்டிகேஷன் சிஸ்டம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட அம்சங்கள் இதில் கொடுக்கப்பட்டுள்ளது.

புதிய ஜீப் ரெனகேட் எஸ்யூவி அறிமுகம் எப்போது? - விவரம்

அகலமான முகப்பு, ஜீப்பின் பிரத்யேக கிரில் அமைப்பு, பகல் நேரத்தில் எரியும் வகையிலான எல்ஈடி விளக்குகளுடன் கூடிய முகப்பு விளக்கு என அமர்களப்படுத்தும் இந்த காரில் கருப்பு வண்ண ரூஃப் ஆப்ஷனலாகவும் கிடைக்கிறது.

புதிய ஜீப் ரெனகேட் எஸ்யூவி அறிமுகம் எப்போது? - விவரம்

ஜீப் நிறுவனத்தின் தொடக்க விலை மாடலாக காம்பஸ் எஸ்யூவி இருக்கும், ஆனால் புதிய ரெனகேட் கார் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் இதுவே தொடக்க நிலை ஜீப் மாடலாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

புதிய ஜீப் ரெனகேட் எஸ்யூவி அறிமுகம் எப்போது? - விவரம்

இந்தியாவில் ஜீப் நிறுவனம் தற்போது ரேங்லர் மற்றும் கிரேண்ட் செரோகி கார்களை விற்பனை செய்து வருகிறது. ரேங்லர் ஜீப்பின் விலை ரூ. 56 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது. கிரேண்ட் செரோகியின் விலை ரூ.93 லட்சத்தில் தொடங்கி 1 கோடி ரூபாய்க்கும் மேல் செல்கிறது.

புதிய ஜீப் ரெனகேட் எஸ்யூவி அறிமுகம் எப்போது? - விவரம்

புதிய ரெனகேட் காரின் விலை ரூ.20 லட்சம் முதல் ரூ.30 லட்சத்திற்குள் நிர்னயிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் புதிய காரை 2018ஆம் ஆண்டின் இறுதியில் அல்லது 2019ன் தொடக்கத்தில் அறிமுகப்படுத்த ஜீப் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

புதிய ஜீப் ரெனகேட் எஸ்யூவி அறிமுகம் எப்போது? - விவரம்

மேலும் இந்த புதிய காரை மகராஷ்டிர மாநிலம் புனே அருகில் அமைந்துள்ள ஜீப் நிறுவனத்தின் ரஜ்ஜன்கோன் தொழிற்சாலையிலேயே தயாரிக்கவும் முடிவு செய்துள்ளது இந்நிறுவனம். இங்கு தான் காம்பஸ் எஸ்யூவி கார்கள் தயாரிக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Read in Tamil about jeep renagade launch date in india. price, specs, mileage and more.
Story first published: Saturday, April 15, 2017, 11:23 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark