இந்தியாவில் கால் பதிப்பதற்கான பணிகளில் கியா கார் நிறுவனம் விறுவிறு!

கியா கார் நிறுவனம் இந்தியாவில் கால் பதிப்பதற்கான பணிகளில் மிக தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

By Saravana Rajan

தென்கொரியாவை சேர்ந்த கியா கார் நிறுவனம் இந்திய கார் சந்தையில் கால் பதிப்பதற்கான பணிகளில் விறுவிறுப்பாக ஈடுபட்டுள்ளது.

இந்தியாவில் கால் பதிப்பதற்கான பணிகளில் கியா கார் நிறுவனம் விறுவிறு!

ஹூண்டாய் கார் நிறுவனத்தின் துணை நிறுவனம்தான் கியா மோட்டார்ஸ். கடந்த ஏப்ரல் மாதம் புதிய கார் ஆலை அமைப்பதற்காக ஆந்திர அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தது. ரூ.6,500 கோடி முதலீட்டில், ஆண்டுக்கு 3 லட்சம் கார்களை உற்பத்தி செய்யும் திறனுடன் இந்த புதிய ஆலை அமைக்கப்பட இருக்கிறது.

இந்தியாவில் கால் பதிப்பதற்கான பணிகளில் கியா கார் நிறுவனம் விறுவிறு!

இந்தநிலையில், அடுத்த கட்ட பணிகளிலும் கியா கார் நிறுவனம் விறுவிறுப்பாக ஈடுபட்டுள்ளது. கடந்த 26ந் தேதி இந்தியாவுக்காக பிரத்யேக இணையதளத்தை கியா கார் நிறுவனம் அறிமுகம் செய்தது.

Recommended Video

2017 Triumph Tiger Explorer XCx Launched In India | In Tamil - DriveSpark தமிழ்
இந்தியாவில் கால் பதிப்பதற்கான பணிகளில் கியா கார் நிறுவனம் விறுவிறு!

இதைத்தொடர்ந்து, தகுதிவாய்ந்த டீலர்களை நியமிப்பதற்கான பணிகளையும் துவங்கி இருக்கிறது. விரைவில் டீலர்களை நியமிப்பதற்காக, சிறப்பு சந்திப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது.

இந்தியாவில் கால் பதிப்பதற்கான பணிகளில் கியா கார் நிறுவனம் விறுவிறு!

இதுதவிரவும், நாட்டின் முக்கிய நகரங்களில் கியா கார்களை பிரபலப்படுத்துவதற்கான நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்துள்ளது. அடுத்த மாதம் 8 மற்றும் 9 தேதிகளில் டெல்லியில் உள்ள ஜேடபிள்யூ மேரியாட் ஏரோசிட்டி ஓட்டலில் டீலர் ரோடுஷோ என்ற பெயரில் தங்களது கார் பிராண்டின் விற்பனை கொள்கைகள் குறித்த நிகழ்ச்சிகளை நடத்த இருக்கிறது.

இந்தியாவில் கால் பதிப்பதற்கான பணிகளில் கியா கார் நிறுவனம் விறுவிறு!

ஆகஸ்ட் 16 மற்றும் 17 தேதிகளில் மும்பை ஐடிசி மராத்தா ஓட்டலிலும், ஆகஸ்ட் 23 மற்றும் 24 தேதிகளில் பெங்களூரில் உளள தாஜ் வெஸ்ட்எண்ட் ஓட்டலிலும், செப்டம்பர் 1ந் தேதி கொல்கத்தாவில் உள்ள தாஜ் பெங்கால் ஓட்டலிலும் இந்த டீலர் ரோடு ஷோ நிகழ்ச்சி நடைபெற இருக்கின்றன.

இந்தியாவில் கால் பதிப்பதற்கான பணிகளில் கியா கார் நிறுவனம் விறுவிறு!

கியா கார் நிறுவனத்தின் இந்திய இணையதளத்தில் டீலராக விரும்புபவர்கள் பதிவு செய்துகொள்வதற்கான வாய்ப்பும் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

இந்தியாவில் கால் பதிப்பதற்கான பணிகளில் கியா கார் நிறுவனம் விறுவிறு!

இந்தியாவில் புதிய ஹேட்ச்பேக் கார் மாடல், காம்பேக்ட் செடான் மற்றும் காம்பேக்ட் எஸ்யூவி மாடல்களை கியா மோட்டார்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில், காம்பேக்ட் செடான் மற்றும் காம்பேக்ட் எஸ்யூவி வகை கார்கள் இந்திய மார்க்கெட்டிற்காக பிரத்யேகமாக உருவாக்கி அறிமுகம் செய்யவும் அந்த நிறுவனம் திட்டம் வைத்துள்ளது.

இந்தியாவில் கால் பதிப்பதற்கான பணிகளில் கியா கார் நிறுவனம் விறுவிறு!

வரும் 2019ம் ஆண்டில் புதிய கார்களை இந்தியாவில் கியா கார் நிறுவனம் அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2020ம் ஆண்டில் இருந்து முழு வீச்சிலான வர்த்தகத்திலும் ஈடுபடுவதற்கு அந்த நிறுவனம் விரிவானத் திட்டத்தை தயாரித்துள்ளது.

Most Read Articles
மேலும்... #கியா
English summary
Kia Motors, a subsidiary of Hyundai Motors, will host a series of roadshows in India to meet prospective dealers through August and September 2017.
Story first published: Friday, July 28, 2017, 19:19 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X