கியா மோட்டார்ஸின் புதிய 2017 பிகாண்டோ கார் பற்றிய தகவல்கள்!

கியா மோட்டார்ஸ் தனது அடுத்த தலைமுறை பிகாண்டோ மாடல் காரினை 2017 ஜெனிவா வாகன கண்காட்சியில் அறிமுகப்படுத்த உள்ளது. அது குறித்த தகவல்களை காணலாம்.

By Arun

தென் கொரிய கார் தயாரிப்பு நிறுவனமான கியா மோட்டார்ஸின் பிகாண்டோ ஹேட்ச்பேக் சர்வதேச சந்தையில் மிகவும் பிரபலமானதாகும். தற்போது அதன் மூன்றாம் தலைமுறை மாடலை ஜெனிவாவில் நடக்க இருக்கும் வாகன கண்காட்சியில் அறிமுகப்படுத்த உள்ளது. 2017 பிகாண்டோவின் சிறப்புகளை கியா மோட்டார்ஸ் வெளியிட்டுள்ளனர்.

கியாவின் புதிய பிகாண்டோ கார் பற்றிய தகவல்கள்!

முற்றிலும் புதிய டிசைனில், 14 இஞ்ச் ஸ்டீல் வீல்களுடன், முன்புறத்தில் புலியின் மூக்கை போன்ற கிரில் அமைப்புடன், ரீடிசைன் செய்யப்பட்ட பம்பர், பகல் நேரத்தில் எரியும் வகையிலான எல்ஈடி விளக்குகளுடன் கூடிய ப்ரொஜெக்டர் ஹெட்லைட் என அட்டகாசமான முகப்பு வடிவம் பெற்றுள்ளது 2017 பிகாண்டோ.

கியாவின் புதிய பிகாண்டோ கார் பற்றிய தகவல்கள்!

இதன் உட்புறத்தில் 7 இஞ்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் (ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் இயங்குதளங்களை சப்போர்ட் செய்யும் வகையிலானது), இது பார்க்கிங் கேமராவையும் சப்போர்ட் செய்யும். புதிய பிகாண்டோவின் டேஷ்போர்ட் உயரம் சற்று அதிகரிக்கப்பட்டுள்ளது, இதனால் உட்புறத்தின் முன்புறத்தில் நல்ல இடவசதி கிடைக்கிறது.

கியாவின் புதிய பிகாண்டோ கார் பற்றிய தகவல்கள்!

வெஹிகிள் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், ஆபத்துக் காலத்தில் இயங்கும் தானியங்கி பிரேக்கிங் சிஸ்டம், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்டோல் என பாதுகாப்பு அம்சங்கள் நிரம்பிய இக்காரில், குறிப்பிடத்தக்க அம்சமாக ஒலி மாசுவை குறைக்கும் வகையில், ஒலியை உறிஞ்சும் ஃபோம் அமைப்பு இதன் உள்ளேயும், ஒலியை குறைக்கும் எஞ்சின் கவரும் உள்ளது. இதனால் பயணிகளுக்கு வெளிப்புற ஒலி மாசு குறைக்கப்பட்டுள்ளது.

கியாவின் புதிய பிகாண்டோ கார் பற்றிய தகவல்கள்!

2017பிகாண்டோவில் புதிய வரவாக, அதிகபட்சமாக 98 பிஹச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 1.0 டி-ஜிடிஐ டர்போ சார்ஜ் எஞ்சின் உள்ளது. இது 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் கொண்டதாகும். பிகாண்டோவில் வேறு 2 எஞ்சின்களும் ஆப்ஷனாக கிடைக்கிறது.

கியாவின் புதிய பிகாண்டோ கார் பற்றிய தகவல்கள்!

அதிகபட்சமாக 66 பிஹச்பி ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய 4 சிலிண்டர்கள் கொண்ட 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின், இது 5 ஸ்பீடு மேனுவல் கியர் சிஸ்டம் கொண்டதாகும், அடுத்ததாக அதிகபட்சமாக 82.8 பிஹச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் திறனுடைய 1.25 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 5 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர் சிஸ்டம் கொண்டது.

கியாவின் புதிய பிகாண்டோ கார் பற்றிய தகவல்கள்!

இந்தியாவில் இக்கார்கள் 2018ஆம் ஆண்டின் இறுதியில் கிடைக்கலாம், கியா நிறுவனம் தனது உற்பத்தி தொழிற்சாலையை அமைப்பதற்காக இந்தியாவில் இடம் பார்த்து வருவது குறிப்பிடத்தக்கது.

கியா ஸ்டிங்கர் காரின் படங்கள்:

Most Read Articles
English summary
The 2017 Kia Picanto is the third-gen model of one of the most popular hatchbacks in the international market.
Story first published: Saturday, February 18, 2017, 17:38 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X