இதுதான் இந்தியாவில் எதிர்பார்க்கப்படும் முதல் கியா கார்!

Written By:

ரூ.7,000 கோடி முதலீட்டு திட்டத்துடன் இந்தியாவில் களமிறங்கும் திட்டத்தை தென்கொரியாவை சேர்ந்த கியா கார் நிறுவனம் அறிவித்துவிட்டது. ஆண்டுக்கு 3 லட்சம் கார் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட புதிய கார் ஆலையை ஆந்திராவில் அமைப்பதற்கும் கியா மோட்டார்ஸ் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துவிட்டது.

இந்தியாவில் அறிமுகமாகும் முதல் கியா கார் இதுதான்...!!

இந்த நிலையில், இந்தியாவில் அறிமுகமாக இருக்கும் கியா கார்கள் குறித்த ஆர்வமும், ஆவலும் எல்லோருக்கும் ஏற்பட்டு இருக்கிறது. நாட்டின் இரண்டாவது பெரிய கார் நிறுவனமான ஹூண்டாய் நிறுவனத்தின் துணை நிறுவனம் என்ற அடையாளமும் இந்தியர்களை ஆவல் கொள்ள செய்துள்ளது.

இந்தியாவில் அறிமுகமாகும் முதல் கியா கார் இதுதான்...!!

இந்த நிலையில், இந்தியாவில் காம்பேக்ட் செடான் கார் மற்றும் காம்பேக்ட் எஸ்யூவி கார்களுடன் தனது இன்னிங்சை துவங்க இருக்கிறது கியா மோட்டார்ஸ். அதிலும், முதலாவதாக ரியோ செடான் காரை இந்தியாவில் களமிறக்க கியா மோட்டார்ஸ் முடிவு செய்துள்ளது.

இந்தியாவில் அறிமுகமாகும் முதல் கியா கார் இதுதான்...!!

ஹூண்டாய் வெர்னா காரில் இருக்கும் அதே 1.4 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் கியா ரியோ செடான் கார் வருகிறது. இந்த எஞ்சின் 106 பிஎச்பி பவரையும், 135 என்எம் டார்க் திறனையும் அளிக்க வல்லதாக இருக்கும். அதேபோன்று, 1.6 லிட்டர் பெட்ரோல் எஞ்சினும் எதிர்பார்க்கலாம்.

இந்தியாவில் அறிமுகமாகும் முதல் கியா கார் இதுதான்...!!

ஹூண்டாய் வெர்னா காரில் பயன்படுத்தப்படும் 1.4 லிட்டர் டீசல் எஞ்சின் மற்றும் 1.6 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷனிலும் கியா ரியோ வரும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் தேர்வு செய்யும் வாய்ப்பு கிடைக்கும்.

இந்தியாவில் அறிமுகமாகும் முதல் கியா கார் இதுதான்...!!

எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி டெயில் லைட்டுகள், ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ சாஃப்ட்வேர்களை சப்போர்ட் செய்யும் தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளிட்டவை முக்கிய அம்சங்களாக இருக்கும்.

இந்தியாவில் அறிமுகமாகும் முதல் கியா கார் இதுதான்...!!

அமெரிக்காவில் கியா ரியோ கார் ரூ.10 லட்சம் மதிப்பில் விற்பனை செய்யப்படுகிறது. இந்தியா வரும்போது மிட்சைஸ் கார் மார்க்கெட்டில் நிலைநிறுத்தப்படும். மாருதி சியாஸ், ஹோண்டா சிட்டி, ஹூண்டாய் வெர்னா கார்களுடன் போட்டி போடும்.

மேலும்... #கியா #kia
English summary
Kia Motors will launch its Indian operations with the construction of a brand new 300,000 units plant in Andhra Pradesh. The first product to begin its operations is expected to be the Kia Rio.
Story first published: Tuesday, May 2, 2017, 18:21 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark