லம்போர்கினி அவென்டேடார் எஸ் சூப்பர் கார் இந்தியாவில் விற்பனைக்கு வந்தது!

Written By:

லம்போர்கினி அவென்டேடார் சூப்பர் காரின் அதிக சக்திவாய்ந்த மாடல் இந்தியாவில் இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. லம்போர்கினி அவென்டேடார் எஸ் என்ற பெயரில் குறிப்பிடப்படும் இந்த காரின் சிறப்பம்சங்கள், விலை விபரத்தை இந்த செய்தியில் காணலாம்.

 லம்போர்கினி அவென்டேடார் எஸ் சூப்பர் கார் இந்தியாவில் விற்பனைக்கு வந்தது!

சாதாரண லம்போர்கினி அவென்டேடார் காரைவிட சிறப்பான ஏரோடைனமிக்ஸ் கொண்டதாக மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. வடிவமைப்பிலும் மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளது. பம்பர் மறுவடிவமைப்பு பெற்றிருக்கிறது. இதனால், மூர்க்கத்தனமான தோற்றத்தை பெற்றிருக்கிறது.

 லம்போர்கினி அவென்டேடார் எஸ் சூப்பர் கார் இந்தியாவில் விற்பனைக்கு வந்தது!

லம்போர்கினி அவென்டேடார் காரில் இருக்கும் அதே 6.5 லிட்டர் வி12 எஞ்சின்தான் இந்த காரிலும் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 730 பிஎச்பி பவரையும், 690 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கிறது. சாதாரண லம்போர்கினி அவென்டேடார் காரைவிட 40 பிஎச்பி கூடுதல் பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வந்துள்ளது.

 லம்போர்கினி அவென்டேடார் எஸ் சூப்பர் கார் இந்தியாவில் விற்பனைக்கு வந்தது!

இந்த காரில் 7 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டு இருக்கிறது. Strada, Sport மற்றும் Corsa என்ற மூன்றுவிதமான நிலைகளில் எஞ்சின் இயக்கத்தை மாற்றிக் கொள்ளும் வசதியும் இருக்கிறது. தவிரவும், ஓட்டுனரின் விருப்பத்தின் அடிப்படையில் எஞ்சின் இயக்கத்தை மாற்றிக் கொள்வதற்கான மற்றொரு டிரைவிங் மோடும் இருக்கிறது.

 லம்போர்கினி அவென்டேடார் எஸ் சூப்பர் கார் இந்தியாவில் விற்பனைக்கு வந்தது!

லம்போர்கினி அவென்டேடார் எஸ் கார் 0-100 கிமீ வேகத்தை வெறும் 2.9 வினாடிகளில் எட்டிவிடும் திறன் வாய்ந்தது. மணிக்கு 350 கிமீ வேகம் வரை செல்லும். அதேபோன்று, 100 கிமீ வேகத்தில் செல்லும் காரை 30 மீட்டருக்குள் நிறுத்திவிடவும் முடியும்.

 லம்போர்கினி அவென்டேடார் எஸ் சூப்பர் கார் இந்தியாவில் விற்பனைக்கு வந்தது!

இந்த கார் மோனோகாக் கார்பன் ஃபைபர் சேஸீ கொண்டது. சேஸீ தவிர்த்து, பாடி பேனல்கள், ஏர் இன்லெட்டுகள், ஸ்பாய்லர், எஞ்சின் பானட் உள்ளிட்டவையும் கார்பன் ஃபைபரால் ஆனது. இதன் பின்புற ஸ்பாய்லரை மூன்றுவித கோணங்களில் மாற்றிக் கொள்ள முடியும்.

 லம்போர்கினி அவென்டேடார் எஸ் சூப்பர் கார் இந்தியாவில் விற்பனைக்கு வந்தது!

ரூ.5.01 கோடி மும்பை எக்ஸ்ஷோரூம் விலையில் புதிய லம்போர்கிினி அவென்டேடார் எஸ் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

 லம்போர்கினி அவென்டேடார் எஸ் சூப்பர் கார் இந்தியாவில் விற்பனைக்கு வந்தது!

கடந்த டிசம்பர் மாதம் சர்வதேச அளவில் அறிமுகம் செய்யப்பட்ட காரை, சில மாதங்களில் இந்திய மண்ணிலும் விற்பனைக்கு இறக்கிவிட்டுள்ளது. அந்த அளவுக்கு இந்திய மார்க்கெட்டை மிக முக்கியமாக கருதுகிறது லம்போர்கினி.

புதிய லம்போர்கினி அவென்டேடார் எஸ் காரின் படங்கள்!

இந்தியாவில் விற்பனைக்கு வந்திருக்கும் புதிய லம்போர்கினி அவென்டேடார் எஸ் சூப்பர் காரின் உயர்தர படங்களை கீழே உள்ள கேலரியில் காணலாம்.

English summary
Read in Tamil: Lamborghini Aventador S launched in India. The Lamborghini Aventador S boasts of a 730bhp V12 engine.
Story first published: Friday, March 3, 2017, 13:22 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark