புதிய லம்போர்கினி கார் இந்தியாவில் அறிமுகம்..200 கிமீ வேகம் 6 வினாடிகளில்..

Written By:

சூப்பர் ஸ்போர்ட்ஸ் கார் தயாரிப்பு நிறுவனமான லம்போர்கினி நிறுவனம் புதிய லம்போர்கினி 'ஹுரேகன் பெர்ஃபார்மண்டே' என்ற சொகுசுக்காரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

புதிய லம்போர்கினி ஸ்போர்ட்ஸ் கார் இந்தியாவில் அறிமுகம்!

கடந்த மாதம் நடைபெற்ற ஜெனிவா மோட்டார் கண்காட்சியில் முதல்முறையாக காட்சிப்படுத்தப்பட்ட இந்த கார் தற்போது இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. காட்சிப்படுத்தப்பட்ட ஒரே மாதத்தில் அறிமுகம் செய்திருப்பதன் மூலம் லம்போர்கினி கார்களுக்கு இந்தியாவில் ஏற்பட்டுள்ள வரவேற்ப்பை தெரிந்துகொள்ளலாம்.

புதிய லம்போர்கினி ஸ்போர்ட்ஸ் கார் இந்தியாவில் அறிமுகம்!

லம்போர்கினி ஹுரேகன் காரின் வழித்தோன்றலாக வெளிவந்துள்ள ஹுரேகன் பெர்ஃபார்மண்டே கார் உலகின் தலைசிறந்த சூப்பர் ஸ்போர்ட்ஸ் கார்களில் ஒன்றாகும்.

புதிய லம்போர்கினி ஸ்போர்ட்ஸ் கார் இந்தியாவில் அறிமுகம்!

ஜெர்மனியில் உள்ள உலகப் புகழ்பெற்ற நர்பர்கிரிங் கார் பந்தய மைதான தடத்தை அதிவேகமாக வலம் வந்த சாதனையை, லம்போர்கினி ஹுரேகன் பெர்ஃபார்மண்டே கார் தன்வசப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

புதிய லம்போர்கினி ஸ்போர்ட்ஸ் கார் இந்தியாவில் அறிமுகம்!

2.6 கிலோமீட்டர் நீளமுள்ள நர்பர்கிரிங் கார் பந்தய தடத்தை 6.52.01 வினாடிகளில் கடந்து ஃபோர்சே 918 கார் படைத்திருந்த முந்தைய சாதனையை முறியடித்துள்ளது ஹுரேகன் பெர்ஃபார்மண்டே கார்.

புதிய லம்போர்கினி ஸ்போர்ட்ஸ் கார் இந்தியாவில் அறிமுகம்!

புதிய லம்போர்கினி ஹுரேகன் பெர்ஃபார்மண்டே காரில் 5.2 லிட்டர் வி10 இஞ்சின் உள்ளது. இது அதிகபட்சமாக 637 பிஹச்பி ஆற்றலையும், 600 என்எம் டார்க்கையும் வழங்குகிறது. இஞ்சினின் ஆற்றலை 7 ஸ்பீடு டூயல் ஆட்டோமேடிக் கியர் பாக்ஸ் இதன் 4 வீல்களுக்கும் அளிக்கிறது.

புதிய லம்போர்கினி ஸ்போர்ட்ஸ் கார் இந்தியாவில் அறிமுகம்!

0-100 கிமீ வேகத்தை 2.9 வினாடிகளில் எட்டிப்பிடித்துவிடும் லம்போர்கினி ஹுரேகன் பெர்ஃபார்மண்டே கார் 200 கிமீ வேகத்தை 6 வினாடிகளில் அடைகிறது. இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 325 கிமீ ஆகும்.

புதிய லம்போர்கினி ஸ்போர்ட்ஸ் கார் இந்தியாவில் அறிமுகம்!

அதிவேகத்தில் சென்றாலும் சொகுசான பயணம் செய்ய வசதியாக இதில் உயர்ரக சஸ்பென்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது. முந்தைய ஹுரேகன் மாடலைக் காட்டிலும் அதிவேகத்தில் செல்ல எளிதாக இதன் எடை 40 கிலோ குறைக்கப்பட்டுள்ளது. கார்பன் ஃபைபர் கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ளதால் எடை குறைப்பு சாத்தியமாகியுள்ளது.

புதிய லம்போர்கினி ஸ்போர்ட்ஸ் கார் இந்தியாவில் அறிமுகம்!

மிகச்சிறந்த ஏரோடைனமிக்ஸ் வடிவமைப்பு காரணமாகவே இந்த காரை உலகின் சிறந்த சூப்பர் ஸ்போர்ட்ஸ் கார் என முன்னிலைப்பட வைக்கிறது. இதன் விலை 3.97 கோடி ரூபாய் ஆகும். (டெல்லி, எக்ஸ்-ஷோரூம் விலை)

English summary
Read in Tamil about new lamborghini huracan performante launch in india. price, mileage, specs and more details.
Story first published: Friday, April 7, 2017, 17:42 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark