புதிய லம்போர்கினி உரஸ் எஸ்யூவி அறிமுகம்: படங்களுடன் தகவல்கள்!

Written By:

எஸ்யூவி கார்களுக்கான மவுசு வெகுவாக கூடியிருக்கும் நிலையில், சூப்பர் கார் தயாரிப்பில் உலக புகழ்பெற்ற லம்போர்கினி நிறுவனம் புதிய எஸ்யூவி மாடலை அறிமுகம் செய்துள்ளது. 

 புதிய லம்போர்கினி உரஸ் எஸ்யூவி அறிமுகம்: படங்களுடன் தகவல்கள்!

லம்போர்கினி நிறுவனத்தின் முதல் எஸ்யூவி மாடல் எல்எம்002 என்ற பெயரில் தயாரிக்கப்பட்டது. அதன் உற்பத்தி நிறுத்தப்பட்டு 25 ஆண்டுகளுக்கு பின்னர் உரஸ் என்ற இந்த இரண்டாவது புதிய எஸ்யூவி மாடலை லம்போர்கினி களமிறக்க உள்ளது.

 புதிய லம்போர்கினி உரஸ் எஸ்யூவி அறிமுகம்: படங்களுடன் தகவல்கள்!

லம்போர்கினி உரஸ் எஸ்யூவி உலகிலேயே மிக அதிவேக செயல்திறன் கொண்ட மாடலாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. டர்போசார்ஜர் பொருத்தப்பட்ட எஞ்சினுடன் வரும் முதல் லம்போர்கினி கார் மாடல் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 புதிய லம்போர்கினி உரஸ் எஸ்யூவி அறிமுகம்: படங்களுடன் தகவல்கள்!

இந்த எஸ்யூவியில் இருக்கும் 4.0 லிட்டர் வி8 எஞ்சின் அதிகபட்சமாக 641 பிஎச்பி பவரையும், 850 என்எம் டார்க் திறனையும் வாரி வழங்கும். 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டு இருக்கிறது.

 புதிய லம்போர்கினி உரஸ் எஸ்யூவி அறிமுகம்: படங்களுடன் தகவல்கள்!

லம்போர்கினி உரஸ் எஸ்யூவி 0 - 100 கிமீ வேகத்தை வெறும் 3.6 வினாடிகளில் எட்டிவிடும். அதிகபட்சமாக மணிக்கு 306 கிமீ வேகம் வரை தொடும் வல்லமை கொண்டது. இந்த எஸ்யூவியில் 6 நிலைகளில் இயங்கும் டிரைவிங் மோடுகள் உள்ளன. இதில், மணல், கிராவல், பனித் தரைகளுக்கான 3 பிரத்யேகமான ஆஃப்ரோடு டிரைவிங் மோடுகள் உள்ளன.

 புதிய லம்போர்கினி உரஸ் எஸ்யூவி அறிமுகம்: படங்களுடன் தகவல்கள்!

ஆடி க்யூ7, போர்ஷே கேயேன் ஆகிய எஸ்யூவி மாடல்கள் உருவாக்கப்பட்ட ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் எம்எல்பி எவோ பிளாட்ஃபார்மில்தான் இந்த புதிய லம்போர்கினி உரஸ் எஸ்யூவியும் உருவாக்கப்பட்டு இருக்கிறது. மேலும், ஆடி க்யூ7 எஸ்யூவியின் எஞ்சின்தான் இதிலும் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.

 புதிய லம்போர்கினி உரஸ் எஸ்யூவி அறிமுகம்: படங்களுடன் தகவல்கள்!

இந்த புதிய எஸ்யூவி மாடல் 5,112மிமீ நீளமும், 2,016மிமீ அகலமும், 1,638மிமீ உயரமும், 3,003மிமீ வீல்பேஸ் கொண்டதாக இருக்கிறது. இந்த எஸ்யூவியில் 4 வீல் ஸ்டீயரிங் சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதனால், இந்த எஸ்யூவியை மிக குறுகலான இடத்திலும் எளிதாக திருப்ப முடியும்.

 புதிய லம்போர்கினி உரஸ் எஸ்யூவி அறிமுகம்: படங்களுடன் தகவல்கள்!

மோசமான சாலைகளையும் எளிதாக அட்ஜெஸ்ட் செய்து கடக்கும் அடாப்டிவ் ஏர் சஸ்பென்ஷன், கார் அதிக நிலைத்தன்மையுடன் செல்வதற்கான ஆக்டிவ் ரோல் ஸ்டெபிளைசேஷன், கார் துவக்க நிலையில் வழுக்கிச் செல்லாமலும், அதிக தரைப்பிடிப்புடன் செல்வதற்கான டார்க் வெக்டரிங் ஆகிய நவீன தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன.

Recommended Video - Watch Now!
[Tamil] 2017 Skoda Octavia RS Launched In India - DriveSpark
 புதிய லம்போர்கினி உரஸ் எஸ்யூவி அறிமுகம்: படங்களுடன் தகவல்கள்!

2012ம் ஆண்டு காட்சிக்கு வந்த லம்போர்கினி கான்செப்ட் எஸ்யூவியின் அடிப்படையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. அதேநேரத்தில், கான்செப்ட் நிலையிலிருந்து பல மாறுதல்களை செய்துள்ளனர். மிரட்டலான க்ரில் அமைப்பு, பெரிய ஏர் இன்டேக்குகள் கொடுக்கப்பட்டு இருப்பதுடன், மிகச் சிறப்பான ஏரோடைனமிக்ஸ் தத்துவத்தில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

 புதிய லம்போர்கினி உரஸ் எஸ்யூவி அறிமுகம்: படங்களுடன் தகவல்கள்!

லம்போர்கினி உரஸ் எஸ்யூவியில் எல்இடி ஹெட்லைட்டுகள் உள்ளன. இந்த எஸ்யூவியில் 21 அங்குல அளவுடைய பிரம்மாண்டமான சக்கரங்கள் உள்ளன. மேலும், 22 அங்குலம் மற்றும் 23 அங்குலங்களிலும் அலாய் வீல்களை தேர்வு செய்து பெற முடியும்.

 புதிய லம்போர்கினி உரஸ் எஸ்யூவி அறிமுகம்: படங்களுடன் தகவல்கள்!

அடுத்த ஆண்டு இந்த புதிய எஸ்யூவி மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்தியாவிலும் விற்பனைக்கு வர இருக்கும் புதிய எஸ்யூவி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. ரூ.3.5 கோடி எக்ஸ்ஷோரூம் விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. இறக்குமதி செய்து விற்பனை செய்யப்படும் என்பதால், ஆன்ரோடு விலை ரூ.5 கோடியை தாண்டும் வாய்ப்புள்ளது.

English summary
Italian supercar marque Lamborghini has revealed the Urus Super Sport Utililty Vehicle in Bologna, Italy.
Story first published: Tuesday, December 5, 2017, 10:05 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark