ஓட்டுநர் இல்லாமல் இயங்கும் டிராக்டரை அறிமுகம் செய்த மஹிந்திரா... சபாஷ்..!!

Written By:

ஓட்டுநரில்லாமல் இயங்கும் புதிய தொழில்நுட்பம் கொண்ட டிராக்டரை மஹிந்திரா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

இதற்கான தயாரிப்பு பணிகள் அனைத்தும் சென்னையில் உள்ள மஹிந்திராவின் ஆலையில் நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தானாக இயங்கும் டிராக்டர்: மஹிந்திராவின் அடுத்த முயற்சி..!!

விவசாயிகள் எவ்வித சிரமுமின்றி இந்த டிராக்டரை ரிமோட் கண்ட்ரோல் கொண்டு இயங்கும் வகையில் மஹிந்திரா வடிவமைத்துள்ளது.

தானாக இயங்கும் டிராக்டர்: மஹிந்திராவின் அடுத்த முயற்சி..!!

இன்றைய ஆட்டோமொபைல் துறையில் தலைப்புச்செய்தியாக மாறியுள்ள மஹிந்திராவின் இந்த ஓட்டுநரில்லா டிராக்டர், 2018ம் ஆண்டு முதல் விற்பனைக்கு வருகிறது.

தானாக இயங்கும் டிராக்டர்: மஹிந்திராவின் அடுத்த முயற்சி..!!

இதுகுறித்து பேசிய மஹிந்திரா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பவன் கோயென்கா, ”டிராக்டர் வடிவமைக்க ஆய்வு செய்து வரும் குழுவினர், சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளனர்”.

தானாக இயங்கும் டிராக்டர்: மஹிந்திராவின் அடுத்த முயற்சி..!!

விவசாயிகளுக்கு அனைத்து விதத்திலும் பயனளிக்கும் வகையில் இந்த ஓட்டுநரில்லாமல் இயங்கும் டிராக்டர், மஹிந்திராவின் பெருமை என்று அவர் கூடுதலாக தெரிவித்தார்.

தானாக இயங்கும் டிராக்டர்: மஹிந்திராவின் அடுத்த முயற்சி..!!

இந்த டிராக்டர் உலகளவில் விவசாய சமூகத்திற்கான மேம்படுத்தப்பட்ட கண்டுபிடிப்பாக இருக்கும் எனவும், ஃபார்மிங் 3.0 என்ற பிரிவில் இதை முன்மொழிவதாக மஹிந்திராவின் நிர்வாக இயக்குநர் பவன் கோயென்கா கூறியுள்ளார்.

தானாக இயங்கும் டிராக்டர்: மஹிந்திராவின் அடுத்த முயற்சி..!!

தானியங்கி திறன் பெற்ற இந்த டிராக்டரின் பயன்பாடுகளை குறித்து ஒவ்வொன்றாக பார்க்கலாம்.

தானாக இயங்கும் ஸ்டீயர்: ஒரே நேர்கோட்டில் இயங்குவதற்காக இந்த டிராக்டரில் ஜிபிஎஸ் தொழில்நுட்பம் இடம்பெற்றுள்ளது.

தானாக இயங்கும் டிராக்டர்: மஹிந்திராவின் அடுத்த முயற்சி..!!

தானாக இயங்கும் முகப்பு விளக்குகள்: ஸ்டீயரிங்கின் தேவை இல்லாமல், தொடர்ச்சியான செயல்பாட்டை தரும் வகையில் இதன் முகப்பு விளக்குகளின் இயக்கம் இருக்கும்.

தானாக இயங்கும் டிராக்டர்: மஹிந்திராவின் அடுத்த முயற்சி..!!

தானாக செயல்படும் லிஃப்ட்:டிராக்டரின் செயல்பாட்டிற்காக தேவைப்படும் கருவிகள் இதில் தானாக மேல் எழும்பும். பிறகு பணி நிறைவடைந்த உடன் அது உடனே கீழே இறங்கிவிடும்.

தானாக இயங்கும் டிராக்டர்: மஹிந்திராவின் அடுத்த முயற்சி..!!

ஸ்கிம் பாஸிங்: இந்த தொழில்நுட்பம் டிராக்டர் ஒரு வரிசையில் வேலையை முடித்த உடன், அது தானாகவே அடுத்த இடத்திற்கு மாற உதவும்.

தானாக இயங்கும் டிராக்டர்: மஹிந்திராவின் அடுத்த முயற்சி..!!

இவற்றுடன், மஹிந்திராவின் தானியங்கி டிராக்டரில் பல தனித்துவமான பாதுகாப்பு அம்சங்களும் உள்ளன.

புவியியல் பூட்டு: விவசாயம் செய்யும் நிலத்தை விட்டு டிராக்டர் வெளியே நகராமல் இருக்க இந்த தொழில்நுட்பம் வழிவகை செய்யும்.

தானாக இயங்கும் டிராக்டர்: மஹிந்திராவின் அடுத்த முயற்சி..!!

டேப்ளெட் இன்டர்ஃபேஸ் இயக்கம்: இதை பயன்படுத்தி ஒரு விவசாயி தனக்கு தேவையான விதத்தில் டிராக்டரின் செயல்பாட்டை மாற்றி அமைக்க முடியும். மேலும் இதன் மூலம் டிராக்டரை, ரிமோட் அல்லது டேப்ளெட் கொண்டு இயக்கலாம்.

தானாக இயங்கும் டிராக்டர்: மஹிந்திராவின் அடுத்த முயற்சி..!!

ரிமோட் மூலம் இயங்கும் எஞ்சின்: எஞ்சினை நிறுத்துவதற்கான திறன் மற்றும் அவசரகாலத்தில் தேவைப்பட்டால் டிராக்டரை முழுமையாக நிறுத்தவும் இந்த தொழில்நுட்பம் வழிவகுக்கும்.

தானாக இயங்கும் டிராக்டர்: மஹிந்திராவின் அடுத்த முயற்சி..!!

இன்றைய காலகட்டத்தில் விவசாய தேவைகளுக்காக பல புதிய, நவீன தொழில்நுட்பங்கள் அதிகம் தேவைப்படுகின்றன.

இதில் வேலைக்கு ஆட்கள் கிடைக்காதது, தயாரிப்பில் தேக்கம், விவசாய நிலம் குறுகி வருவது என பல்வேறு சிக்கல்கள் விவசாயத்துறை சந்திக்கிறது.

தானாக இயங்கும் டிராக்டர்: மஹிந்திராவின் அடுத்த முயற்சி..!!

தற்போது மஹிந்திரா கொண்டு வரும் இந்த புதிய தொழில்நுட்பம் 'டிஜிசென்ஸ்' மூலம் இயங்கும் திறன் பெற்றது. இதன்மூலம் சிறந்த தானியங்கி திறனை இது பெறும்.

தானாக இயங்கும் டிராக்டர்: மஹிந்திராவின் அடுத்த முயற்சி..!!

ஏற்கனவே இந்தியாவில் தானியங்கி திறன் கொண்ட வாகனங்களுக்கான சந்தை விரிவடையும் நிலையில் உள்ளது. தற்போது மஹிந்திராவின் இந்த புதிய வரவு மேலும் அந்த சந்தைக்கு வலு சேர்க்கும் விதத்தில் அமைந்துள்ளது.

மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Read in Tamil: Mahindra's First-Ever Driverless Tractor Showcased In India. Click for Details...

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark