மஹிந்திராவின் புதிய இ2ஓ பிளஸ் மின்சார கார் ரூ.7.46 லட்சம் தொடக்க விலையில் விற்பனைக்கு அறிமுகம்..!!

Written By:

மஹிந்திராவின் மின்சார ஆற்றலில் இயங்கும் இ2ஓ பிளஸ் சிட்டி ஸ்மார்ட் கார் அதிக எதிர்பார்பிற்கிடையில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமாகி உள்ளது.

மஹிந்திரா இ2ஓ பிளஸ் மின்சார கார் விற்பனைக்கு அறிமுகம்..!!

எக்ஸ்-ஷோரூம் ஹரியானா மதிப்பில் ரூ. 7.46 லட்சம் தொடக்க விலையில் விற்பனைக்கு வந்துள்ள இந்த கார் புதிய டிரைவ்ட்ரேயன் தொழில்நுட்பத்தில் தயாராகியுள்ளது.

மஹிந்திரா இ2ஓ பிளஸ் மின்சார கார் விற்பனைக்கு அறிமுகம்..!!

மஹிந்திரா இ2ஓ பிளஸ் சிட்டி ஸ்மார்ட் காரை முழுவதுமாக சார்ஜ் செய்தால், அதன்மூலம் அதிகப்பட்சமாக 140 கி.மீ வரை செல்ல முடியும்.

மஹிந்திரா இ2ஓ பிளஸ் மின்சார கார் விற்பனைக்கு அறிமுகம்..!!

மஹிந்திரா எலெக்ட்ரிக்கின் பிரத்யேகமாக தயாரிப்பாக வெளிவந்துள்ள இந்த கார் அதிகப்பட்சமாக மணிக்கு 85 கி.மீ வேகத்தில் செல்லும்.

Recommended Video - Watch Now!
Tata Tiago XTA AMT Launched In India | In Tamil - DriveSpark தமிழ்
மஹிந்திரா இ2ஓ பிளஸ் மின்சார கார் விற்பனைக்கு அறிமுகம்..!!

வாடிக்கையாளர்களின் தேவைக்காக பி2, பி4, பி6, பி8 என நான்கு வேரியண்டுகளில் இந்த கார் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் பி2, பி4 மற்றும் பி6 வேரியண்டுகள் 48 வோல்ட் பேட்டரி திறனை பெற்றுள்ளது.

மஹிந்திரா இ2ஓ பிளஸ் மின்சார கார் விற்பனைக்கு அறிமுகம்..!!

மேலும் 72 வோல்ட் திறனில், மஹிந்திரா இ2ஓ பிளஸ் சிட்டி ஸ்மார்ட் காரின் கூடுதல் வேரியண்டான பி8 கார் மாடல் தயாரிக்கப்பட்டுள்ளது.

மஹிந்திரா இ2ஓ பிளஸ் மின்சார கார் விற்பனைக்கு அறிமுகம்..!!

48 வோல்ட் திறன் பெற்ற கார் மாடல்களில் இருக்கும் 3 ஃபேஸ் ஏசி இன்டக்‌ஷன் மோட்டார்கள், சுமார் 25.5 பிஎச்பி பவர் மற்றும் 70 என்.எம் டார்க் திறனை வழங்கும்.

மஹிந்திரா இ2ஓ பிளஸ் மின்சார கார் விற்பனைக்கு அறிமுகம்..!!

மேலும் 72 வோல்ட் திறன் பெற்ற வேரியண்டில், அதே மோட்டார் திறன் தான் உள்ளது. இதன்மூலம் 40 பிஎச்பி பவர் மற்றும் 91 என்.எம் டார்க் திறனை வழங்கும்.

மஹிந்திரா இ2ஓ பிளஸ் மின்சார கார் விற்பனைக்கு அறிமுகம்..!!

புதிய இ2ஓ பிளஸ் சிட்டிஸ்மார்ட் காரில் பல மேம்படுத்தப்பட்ட அம்சங்கள் உள்ளன:

  • டெலிமாடிக்ஸ் மூலம் தொலைவை கண்டறிதல்கள்
  • ஸ்மார்ட்ஃபோன் செயலி உடன் இணைக்கும் தொழில்நுட்பம்
  • புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம்
  • மீளுருவாக்கம் செய்யும் பிரேக்கிங் அமைப்பு
  • மலைப்பகுதிகளில் எளிதாக ஓட்டுவதற்கு ஹில் ஹோல்டு கட்டுப்பாட்டு அம்சம்
  • கார் பற்றி தானியங்கி தகவல்கள் வழங்கும் முறை
மஹிந்திரா இ2ஓ பிளஸ் மின்சார கார் விற்பனைக்கு அறிமுகம்..!!

மஹிந்திரா எலெக்ட்ரிக் துறை தயாரித்துள்ள இந்த கார் பெரியளவில் செலவு ஏற்படுத்தாத வகையில் அதனுடைய செயல்பாடுகள் இருக்கும்.

மஹிந்திரா இ2ஓ பிளஸ் மின்சார கார் விற்பனைக்கு அறிமுகம்..!!

கூடுதலாக மணிக்கு 70 கிமீ வேகத்தை தருவதால், இ2ஓ பிளஸ் கார் அனைத்து விதமான மின்சார திறன் பெற்ற மற்ற கார் மாடல்களை பின்னுக்கு தள்ளியுள்ளது.

மஹிந்திரா இ2ஓ பிளஸ் மின்சார கார் விற்பனைக்கு அறிமுகம்..!!

இதுபற்றி மஹிந்திரா எலெக்ட்ரிக் துறைக்கான நிர்வாக செயல் அதிகாரி மகேஷ் பாபு பேசும்போது,

"இந்தியாவில் மின்சார வாகன சந்தைக்கு முன்னோடி மஹிந்திரா தான். இ2ஓ பிளஸ் மாடல் கார் நிச்சயம் இந்தியாவின் வாகன நவீன துறைக்கு ஏற்ற தயாரிப்பாக இருக்கும்" என்று கூறினார்.

மஹிந்திரா இ2ஓ பிளஸ் மின்சார கார் விற்பனைக்கு அறிமுகம்..!!

மின்சார வாகன சந்தைக்காக இந்தியாவில் புதிய பாதையை மஹிந்திரா அமைத்துக்கொடுத்துள்ளது. இ2ஓ காருக்கு பிறகு தொடர்ந்து பல மாடல் கார்கள் இந்தியாவில் களமிறங்கும்.

மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Read in Tamil: Mahindra e2o Plus CitySmart Electric Car Launched In India. Click for Details...
Story first published: Monday, September 25, 2017, 13:14 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark