சென்னை ஃபோர்டு தொழிற்சாலையில் வாகனங்கள் தயாரிக்க மகிந்திரா திட்டம்?

ஃபோர்டு நிறுவனத்தின் சென்னை கார் உற்பத்தி தொழிற்சாலையில் மகிந்திரா நிறுவனத்தின் வாகனங்களை தயாரிக்கப் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அது குறித்த தகவல்களை காணலாம்.

By Arun

மகிந்த்திரா நிறுவனத்தின் பயணிகள் வாகனங்களை தயாரிக்க அதன் போட்டி நிறுவனமாக விளங்கி வரும் ஃபோர்டு நிறுவனத்தின் கார் உற்பத்தி தொழிற்சாலையை பயன்படுத்திக்கொள்ள இரண்டு நிறுவனங்கள் இடையே பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஃபோர்டு தொழிற்சாலையை உபயோகப்படுத்த மகிந்திரா திட்டம்

இந்தியாவைச் சேர்ந்த மஹிந்திரா & மகிந்திரா நிறுவனமும், அமெரிக்காவைச் சேர்ந்த ஃபோர்டு நிறுவனமும் இந்தியாவில் போட்டி நிறுவனங்களாக விளங்கி வருகின்றன. இந்த சூழலில் ஃபோர்டு நிறுவனத்தின் கார் உற்பத்தி தொழிற்சாலையை மகிந்திரா நிறுவனத்தின் பயணிகள் வாகனங்களை தயாரிக்க பயன்படுத்த இருகட்ட பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளது.

ஃபோர்டு தொழிற்சாலையை உபயோகப்படுத்த மகிந்திரா திட்டம்

ஃபோர்டு நிறுவனத்திற்கு சென்னை அருகேயுள்ள மறைமலைநகரில் கார் உற்பத்தி தொழிற்சாலை உள்ளது. இது வருடத்திற்கு 2 லட்சம் எண்ணிக்கையிலான கார்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாகும். எனினும் இங்கு தற்போது 1.2 லட்சம் கார்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகின்றன.

ஃபோர்டு தொழிற்சாலையை உபயோகப்படுத்த மகிந்திரா திட்டம்

இதுமட்டுமல்லாமல், ஃபோர்டு நிறுவனத்திற்கு குஜராத் மாநிலத்தின் ‘சனந்' நகரில் மற்றொரு புதிய கார் உற்பத்தி தொழிற்சாலையும் உள்ளது. இது 2.4 லட்சம் கார்கள் தயாரிக்கும் திறன் கொண்டது, தற்போது இங்கும் 60% உற்பத்தி மட்டுமே நடக்கின்றது.

ஃபோர்டு தொழிற்சாலையை உபயோகப்படுத்த மகிந்திரா திட்டம்

இந்த வெற்றிடத்தை தனக்கு சாதகமாக உபயோகப்படுத்த மகிந்திரா நிறுவனம் எண்ணியுள்ளது. இதற்காக ஃபோர்டு நிறுவனத்துடன் அந்நிறுவனம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.

ஃபோர்டு தொழிற்சாலையை உபயோகப்படுத்த மகிந்திரா திட்டம்

இது இரண்டு நிறுவனங்களுக்குமே பலன் கிடைக்கக்கூடிய ஒன்றாகும்.

மஹிந்திரா நிறுவனத்தின் உற்பத்தி தொழிற்சாலைகள் அனைத்துமே வட மாநிலங்களில் அமைந்துள்ளன. தென்னிந்தியாவில் புதிதாக உற்பத்தி தொழிற்சாலை அமைக்க அதிக முதலீடு தேவைப்படும். தற்போது இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் சாதகமான முடிவு கிடைத்தால் மகிந்திராவிற்கு பெரிய அளவில் அது பலனைத் தரும்.

ஃபோர்டு தொழிற்சாலையை உபயோகப்படுத்த மகிந்திரா திட்டம்

அதே போல, ஃபோர்டு நிறுவனமும், அதன் தொழிற்சாலை உற்பத்தியை முழு அளவில் மேற்கொள்ளும். அதன் தொழிலாளர்களுக்கும் அது நன்மையை பயப்பதோடு, நிறுவனத்திற்கும் கனிசமான லாபத்தை கொடுக்கும்.

ஃபோர்டு தொழிற்சாலையை உபயோகப்படுத்த மகிந்திரா திட்டம்

இது தொடர்பாக இரண்டு நிறுவனங்களில் ஒன்றின் தலைமை பொறுப்பில் உள்ள பெயர் சொல்ல விரும்பாத ஒரு அதிகாரி கூறுகையில், "ஃபோர்டு நிறுவனத்தின் சென்னை மறைமலைநகர் தொழிற்சாலையை மகிந்திரா நிறுவனம் , வாகன உற்பத்திக்காக பயன்படுத்த திட்டம் தீட்டியுள்ளது. இது தொடர்பாக பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடந்துள்ளது, தற்போது அதில் நல்ல முன்னேற்றமும் ஏற்பட்டுள்ளது." என்றார்.

ஃபோர்டு தொழிற்சாலையை உபயோகப்படுத்த மகிந்திரா திட்டம்

மகிந்திரா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர், பவன் கோயன்கா இது தொடர்பாக தெரிவித்தபோது, "பல்வேறு உற்பத்தி நிறுவனங்களின் தொழிற்சாலையின் பிளாட்ஃபார்ம்களை உபயோகித்து கொள்வது அல்லது டீலர்களை உபயோகித்துக்கொள்வது என முடிந்த அளவிலான வாய்ப்புகளை உபயோகிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது, ஆனால் ஃபோர்டு நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடக்கிறதா என்பதை உறுதியாக என்னால் கூற இயலாது" என சூசகமாக குறிப்பிட்டார்.

ஃபோர்டு தொழிற்சாலையை உபயோகப்படுத்த மகிந்திரா திட்டம்

மகிந்திரா மற்றும் ஃபோர்டு நிறுவனங்கள் இணைவது இது ஒன்றும் முதல் முறையல்ல, கடந்த 1995ஆம் ஆண்டிலேயே மகிந்திரா ஃபோர்டு இந்தியா லிமிடெட் என்ற பெயரிலான நிறுவனத்தின் கீழ் இவை இரண்டு நிறுவனங்களும் இணைந்து ‘ஃபோர்டு எஸ்கார்ட்' என்ற செடன் காரை 1996 முதல் 2001 ஆம் ஆண்டு வரையிலும் விற்பனை செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.

மகிந்திரா எக்ஸ்யுவி500 காரின் படங்கள்:

Most Read Articles
English summary
Ford India's Chennai plant is widely underutilised, which can produce close to 2 lakh units annually.
Story first published: Monday, March 6, 2017, 11:18 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X