மஹிந்திரா தயாரித்து வரும் மின்சார கார் கேயூவி 100 மாடல் தான்... அடித்து சொல்லும் ஸ்பை படம்..!!

Written By:

மஹிந்திரா நிறுவனம் மின்சார ஆற்றல் பெற்ற காரை தயாரித்து வருவது குறித்து அனைவரும் அறிவோம். இந்நிலையில் அதன் சோதனை தற்போது இந்தியாவில் நடந்து வருவதாக தகவல் வெளிவந்துள்ளது.

மஹிந்திரா கேயூவி 100 மின்சார கார் இந்தியாவில் சோதனையா..??

இந்தியாவில் மின்சார கார்களை விற்பனை செய்யும் மஹிந்திரா, தனது பிரபலமான கார் மாடல் ஒன்றிலிருந்து புதிய மின்சார காரை தயாரித்து வருகிறது.

மஹிந்திரா கேயூவி 100 மின்சார கார் இந்தியாவில் சோதனையா..??

மிகவும் சஸ்பென்ஸாக தயாராகி வரும் இந்த மின்சார கார் கேயூவி 100 மாடலாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இதற்கிடையில் இதற்கான சோதனை பணிகள் இந்தியாவில் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

மஹிந்திரா கேயூவி 100 மின்சார கார் இந்தியாவில் சோதனையா..??

அதை உறுதிப்படுத்தும் விதமாக, மஹிந்திரா கேயூவி 100 மின்சார கார் சோதனை செய்யப்பட்டு வரும் புகைப்படம் ஒன்று இணையத்தில் கசிந்துள்ளது.

மஹிந்திரா கேயூவி 100 மின்சார கார் இந்தியாவில் சோதனையா..??

2019ல் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படும் இந்த கார், வரக்கூடிய 2018 ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்படலாம் என்று தெரிகிறது.

மஹிந்திரா கேயூவி 100 மின்சார கார் இந்தியாவில் சோதனையா..??

இந்தியாவில் பல்வேறு வாகன தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது மின்சார கார் மாடல்களை 2018 மற்றும் 2019ம் ஆண்டுகளில் அறிமுகம் செய்கின்றன.

அவற்றில் மஹிந்திரா கேயூவி 100 இந்தியாவில் அறிமுகமாகும் முதல் மின்சார காராக இருக்கலாம் என்று தெரிகிறது.

மஹிந்திரா கேயூவி 100 மின்சார கார் இந்தியாவில் சோதனையா..??

தற்போது சோதனையில் இருக்கும் கேயூவி 100 காரில், புகைப்போக்கி குழாய் இல்லை. இதனாலேயே அது மின்சார திறன் பெற்ற மஹிந்திராவின் மாடலாக கருதப்படுகிறது.

மஹிந்திரா கேயூவி 100 மின்சார கார் இந்தியாவில் சோதனையா..??

மின்சார ஆற்றலை தவிர மஹிந்திரா கேயூவி 100 வெளித்தோற்றம் மற்றும் உள்தோற்றத்தில் பெரியளவில் வித்தியாசம் இருக்காது.

இருந்தாலும் இதனுடைய செயல்திறன் குறித்த எந்த தகவல்களையும் மஹிந்திரா வெளியிடவில்லை.

மஹிந்திரா கேயூவி 100 மின்சார கார் இந்தியாவில் சோதனையா..??

தற்போது அந்நிறுவனம் உற்பத்தி செய்து வரும் ஈ2ஓ மற்றும் இவெரிடோ மாடல்களில் லித்தியம் அயன் பேட்டரி மூலம் கார்களுக்கு சக்தியூட்டப்படுகிறது.

மஹிந்திரா கேயூவி 100 மின்சார கார் இந்தியாவில் சோதனையா..??

அதனால் இதே போன்ற பேட்டரி தேவைகளை தான் மஹிந்திராவின் இந்த புதிய மின்சார கார் பெற்றிருக்கும் என சொல்லப்படுகிறது.

மஹிந்திரா கேயூவி 100 மின்சார கார் இந்தியாவில் சோதனையா..??

மின்சார மைக்ரோ கிராஸோவர் மாடல்கள், பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின்களை விட அதிக விலை பெறக்கூடியாதாக உள்ளது.

இதனால் மஹிந்திரா கேயூவி 100 மின்சார காருக்கு ரூ.11 லட்சத்திற்கு மேல் விலை நிர்ணயம் செய்யப்படலாம் என தெரிகிறது.

மஹிந்திரா கேயூவி 100 மின்சார கார் இந்தியாவில் சோதனையா..??

இ2ஓ மற்றும் இவெரிட்டோ மாடல்களில் இருக்கும் சிவிடி கியர்பாக்ஸ் தேவையைத்தான் புதிய கேயூவி 100 மின்சார கார் பெற்றிருக்கும் என்று கூறப்படுகிறது.

மஹிந்திரா கேயூவி 100 மின்சார கார் இந்தியாவில் சோதனையா..??

இந்த காரின் பேட்டரியை ஒருமுறை 100 சதவீதம் சார்ஜ் செய்தால்,140கி.மீ வரை செல்லும். இதன்காரணமாக இது நகர பயணங்களுக்கு ஏற்ற காராக இருக்கும்.

மஹிந்திரா கேயூவி 100 மின்சார கார் இந்தியாவில் சோதனையா..??

மஹிந்திரா மிக கவனத்துடன் தயாரித்து வரும் இந்த மின்சார கார் மணிக்கு 200 முதல் 250 கி.மீ வரை வேகத்துடன் செல்லும் வகையில் இருக்கும்.

தற்போது விற்பனை இருக்கும் மஹிந்திரா கேயூவி 100 கார் 3 சிலிண்டர் பெட்ரோல் மற்றும் டர்போசார்ஜிடு டீசல் என இரு தேர்வுகளிலும் கிடைக்கிறது.

மஹிந்திரா கேயூவி 100 மின்சார கார் இந்தியாவில் சோதனையா..??

5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேவையை தற்சமயம் பெற்றுள்ள இந்த மாடல்களும் விரைவில் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேவையில் வெளிவரும் என மஹிந்திரா தெரிவித்து வருகிறது.

மஹிந்திரா கேயூவி 100 மின்சார கார் இந்தியாவில் சோதனையா..??

மஹிந்திர கேயூவி 100 மின்சார கார் 2018ல் அறிமுகமாகும் என தகவல் தெரிவிக்கும் நிலையில், இதனுடைய ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடலும் அடுத்த அண்டு வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Read in Tamil: Mahindra KUV 100 Electric Car Spied Testing In India. Click for Details...
Story first published: Saturday, December 2, 2017, 11:20 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark