மஹிந்திரா கேயூவி100 மினி எஸ்யூவியின் மின்சார மாடல் வருகிறது!

Written By:

ஹேட்ச்பேக் கார்களுக்கு மிக சவாலான விலையில் புதிய மஹிந்திரா கேயூவி100 மினி எஸ்யூவி நேற்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில், மஹிந்திரா கேயூவி100 மினி எஸ்யூவியை வைத்து பெரும் திட்டத்துடன் காய்களை நகர்த்தி வருகிறது மஹிந்திரா நிறுவனம்.

மஹிந்திரா கேயூவி100 மினி எஸ்யூவியின் மின்சார மாடல் வருகிறது!

ஆம். அடுத்த ஆண்டு துவக்கத்தில் மஹிந்திரா கேயூவி100 மினி எஸ்யூவியின் பெட்ரோல், டீசல் மாடல்களில் ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடல்களை அறிமுகம் செய்ய இருப்பதாக மஹிந்திரா தெரிவித்துள்ளது. இதுதவிர, மற்றொரு மகிழ்ச்சியான செய்தியையும் மஹிந்திரா நேற்று பகிர்ந்து கொண்டுள்ளது.

மஹிந்திரா கேயூவி100 மினி எஸ்யூவியின் மின்சார மாடல் வருகிறது!

இந்த நிலையில், மஹிந்திரா கேயூவி100 மினி எஸ்யூவியின் மின்சார மாடலையும் அறிமுகம் செய்ய இருப்பதாக மஹிந்திரா நிறுவனம் கூறி இருக்கிறது.

மஹிந்திரா கேயூவி100 மினி எஸ்யூவியின் மின்சார மாடல் வருகிறது!

அடுத்த ஆண்டு இறுதியில் அல்லது 2019ம் ஆண்டு துவக்கத்தில் கேயூவி100 எஸ்யூவியின் மின்சார மாடல் அறிமுகம் செய்யப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

மஹிந்திரா கேயூவி100 மினி எஸ்யூவியின் மின்சார மாடல் வருகிறது!

தற்போது மஹிந்திரா நிறுவனம் இ2ஓ ப்ளஸ் மற்றும் இ-வெரிட்டோ ஆகிய மின்சார கார் மாடல்களை தயாரித்து வருகிறது. இலகு ரக வர்த்தக வாகன பிரிவில் இ- சுப்ரோ மாடலையும் தயாரித்து வருகிறது.

Recommended Video - Watch Now!
Datsun rediGO Gold 1.0-Litre Launched In India | In Tamil- DriveSpark தமிழ்
மஹிந்திரா கேயூவி100 மினி எஸ்யூவியின் மின்சார மாடல் வருகிறது!

இந்த நிலையில், 2030ம் ஆண்டிற்குள் மின்சார கார்களை முழுமையாக பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான திட்டத்தில் மத்திய அரசு இருப்பதால், அதற்கு தக்கவாறு மின்சார மாடல்களை அதிக அளவில் களமிறக்க மஹிந்திரா திட்டமிட்டுள்ளது.

மஹிந்திரா கேயூவி100 மினி எஸ்யூவியின் மின்சார மாடல் வருகிறது!

மஹிந்திரா இ2ஓ எலக்ட்ரிக் காரில் பயன்படுத்தப்படும் மின்மோட்டார் மற்றும் ட்ரான்மிஷன் புதிய மஹிந்திரா கேயூவி100 மினி எஸ்யூவியில் பயன்படுத்தப்படாது. புத்தம் புதிய மின் மோட்டார் மற்றும் ட்ரான்ஸ்மிஷன் பயன்படுத்தப்படும் என்றும் மஹிந்திரா நிறுவனம் தெரிவித்துள்ளது.

மஹிந்திரா கேயூவி100 மினி எஸ்யூவியின் மின்சார மாடல் வருகிறது!

ஏற்கனவே, மஹிந்திரா கேயூவி100 மினி எஸ்யூவி மிக சவாலான விலையிலும், அட்டகாசமான எஸ்யூவி தோற்றத்துடன் வாடிக்கையாளர்களை வசீகரித்து வருகிறது. இந்த நிலையில், அதன் மின்சார மாடல் நிச்சயம் எதிர்காலத்தில் நல்ல வரவேற்பை பெறும் வாய்ப்பு இருக்கிறது.

மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Mahindra & Mahindra launched the facelifted version of the KUV100 at an attractive price in India. At the launch event, the home-grown utility vehicle manufacturer revealed that the electric KUV100 would be launched in India by late 2018 or early 2019.

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark