புதிய மஹிந்திரா கேயூவி100NXT எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்: விபரம்!

Written By:

வடிவமைப்பில் மாறுதல்கள், கூடுதல் சிறப்பம்சங்களுடன் புதிய மஹிந்திரா கேயூவி100 மினி எஸ்யூவி இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

புதிய மஹிந்திரா கேயூவி100NXT எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்: விபரம்!

புதுப்பொலிவுடன் வந்திருக்கும் புதிய மஹிந்திரா கேயூவி100NXT மினி எஸ்யூவி பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்கள் கே2, கே2 ப்ளஸ், கே4 ப்ளஸ், கே6 ப்ளஸ் மற்றும் கே8 ஆகிய வேரியண்ட்டுகளில் கிடைக்கும். இந்த காரின் தோற்றத்தில் பெரிய அளவிலான மாறுதல்கள் இல்லை.

புதிய மஹிந்திரா கேயூவி100NXT எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்: விபரம்!

முகப்பில் ஹெட்லைட் மற்றும் க்ரில் அமைப்பில் மாறுதல் செய்யப்பட்டுள்ளன. மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவி போன்ற க்ரில் அமைப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஏர் டேம் வடிவமைப்பிலும் மாறுதல் செய்யப்பட்டு இருக்கிறது. ஃபாக்ஸ் ஸ்கிட் பிளேட், புதிய பம்பர் அமைப்பும் வசீகரமாக இருக்கிறது. எல்இடி பகல்நேர விளக்குகளும் உண்டு.

புதிய மஹிந்திரா கேயூவி100NXT எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்: விபரம்!

பக்கவாட்டில் பெரிய மாற்றங்கள் இல்லை. புதிய 15 அங்குல டைமண்ட் கட் அலாய் வீல்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. ரியர் வியூ மிரர்கள் வடிவமைப்பில் லேசான மாற்றம் நிகழ்ந்துள்ளது. பின்புறத்தில் புதிய க்ளியர் லென்ஸ் டெயில் லைட்டுகள் பொருத்தப்பட்டுள்ளன.

புதிய மஹிந்திரா கேயூவி100NXT எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்: விபரம்!

இந்த காரின் இன்டீரியர் கருப்பு வண்ணம் ஆக்கிரமத்துள்ளது. சில்வர் பாகங்கள் அலங்காரம் வசீகரிக்கிறது. ஒட்டுமொத்த இன்டீரியர் வடிவமைப்பில் அதிக மாற்றங்கள் இல்லை. டாப் வேரியண்ட் மாடலில் 7 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டு இருக்கிறது. ஆடியோ மற்றும் நேவிகேஷன் வசதிகளை பெற முடியும்.

புதிய மஹிந்திரா கேயூவி100NXT எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்: விபரம்!

இபிடி.,யுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், டியூவல் ஏர்பேக்குகள், ஐசோஃபிக்ஸ் சீட் மவுண்ட்டுகள் போன்றவை இதன் முக்கிய பாதுகாப்பு அம்சங்களாக இருக்கின்றன.

புதிய மஹிந்திரா கேயூவி100NXT எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்: விபரம்!

எஞ்சினிலும் மாற்றங்கள் இல்லை. இந்த காரில் 82 பிஎச்பி பவரையும், 114 என்எம் டார்க் திறனையும் வழங்கும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 77 பிஎச்பி பவரையும், 190 என்எம் டார்க்கை வழங்கும் 1.2 லிட்டர் டீசல் எஞ்சின் மாடல்களில் கிடைக்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

புதிய மஹிந்திரா கேயூவி100NXT எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்: விபரம்!

சஸ்பென்ஷன் மேம்படுத்தப்பட்டு இருப்பதால், தற்போது இந்த காரின் ஓட்டுதல் தரம் மேம்பட்டிருக்கிறது. அதேபோன்று, தரை இடைவெளி மாற்றமும் மோசமான சாலைகளிலும் சிறப்பாக செல்ல உதவும்.

புதிய மஹிந்திரா கேயூவி100NXT எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்: விபரம்!

ரூ.4.39 லட்சம் முதல் ரூ.7.33 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. இது அறிமுகச் சலுகை விலை. அடுத்த மூன்று மாதங்களில் விலையேற்றம் செய்யப்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

விலை பட்டியல்

விலை பட்டியல்

வேரியணட் பெட்ரோல் டீசல்
K2 ரூ.4.39 லட்சம் ரூ.5.39 லட்சம்
K2+ ரூ.4.79 லட்சம் ரூ.5.63 லட்சம்
K4+ ரூ.5.24 லட்சம் ரூ.6.11 லட்சம்
K6+ ரூ.6.04 லட்சம் ரூ.6.95 லட்சம்
K8 ரூ.6.40 லட்சம் ரூ.7.33 லட்சம்
English summary
Mahindra KUV100 NXT launched in India. Prices for the new Mahindra KUV100 NXT start at Rs 4.39 lakh ex-showroom (Mumbai).

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark