பேட்டரியில் இயங்கும் மின்சார ஸ்கார்ப்பியோவை களமிறக்கும் மஹிந்திரா!

பேட்டரியில் இயங்கும் மின்சார மஹிந்திரா ஸ்கார்ப்பியோ எஸ்யூவி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

By Saravana Rajan

எஸ்யூவி ரக கார்களில் மஹிந்திரா ஸ்கார்ப்பியோ வாடிக்கையாளர்களின் தேர்வில் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. நீண்ட காலமாக மார்க்கெட்டில் இருந்தாலும், தனது ஸ்டைலான தோற்றத்தால் விற்பனையில் தொடர்ந்து கலக்கி வருகிறது.

2019ல் ரிலீசாகிறது பேட்டரியில் இயங்கும் மஹிந்திரா ஸ்கார்ப்பியோ!

இந்த நிலையில், எதிர்காலத்தில் ஸ்கார்ப்பியோ மார்க்கெட்டை தக்க வகைக்கும் வகையில், பேட்டரியில் இயங்கும் மின்சார ஸ்கார்ப்பியோ எஸ்யூவியை மஹிந்திரா நிறுவனம் அறிமுகம் செய்ய இருக்கிறது.

2019ல் ரிலீசாகிறது பேட்டரியில் இயங்கும் மஹிந்திரா ஸ்கார்ப்பியோ!

மஹிந்திரா ஸ்கார்ப்பியோ எஸ்யூவியின் மின்சார மாடல் தற்போது விற்பனையில் இருக்கும் டீசல் மாடலைவிட 25 முதல் 30 சதவீதம் வரை விலை அதிகம் கொண்டதாக இருக்கும். லித்தியம் அயான் பேட்டரி பொருத்தப்படுவதே, விலை கணிசமாக உயர காரணமாக இருக்கும்.

2019ல் ரிலீசாகிறது பேட்டரியில் இயங்கும் மஹிந்திரா ஸ்கார்ப்பியோ!

ஆனால், காலப் போக்கில் மின்சார வாகன பயன்பாடு முழு வீச்சில் வரும்போது இந்த லித்தியம் அயான் பேட்டரியின் விலை கணிசமாக குறைய வாய்ப்பு இருக்கிறது. புதிய மஹிந்திரா ஸ்கார்ப்பியோ எஸ்யூவி தவிர்த்து, மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியின் மின்சார மாடலும் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

2019ல் ரிலீசாகிறது பேட்டரியில் இயங்கும் மஹிந்திரா ஸ்கார்ப்பியோ!

ஸ்கார்ப்பியோ மற்றும் எக்ஸ்யூவி500 எஸ்யூவிகளின் மின்சார மாடல்கள் ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 150 முதல் 200 கிமீ தூரம் வரை பயணிக்கும் திறனை பெற்றிருக்கும். 30 நிமிடங்களில் 80 சதவீதம் சார்ஜ் செய்யும் திறனை பெற்றிருக்கும்.

Recommended Video

Jeep Dealership Executives In Mumbai Beat Up Man Inside Showroom
2019ல் ரிலீசாகிறது பேட்டரியில் இயங்கும் மஹிந்திரா ஸ்கார்ப்பியோ!

மஹிந்திராவின் கீழ் செயல்படும் ரேவா எலக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனமும், பினின்ஃபரீனா நிறுவனமும் இந்த மின்சார எஸ்யூவி கார்கள் தயாரிப்பில் தங்களது பங்களிப்பை வழங்க இருக்கின்றன.

2019ல் ரிலீசாகிறது பேட்டரியில் இயங்கும் மஹிந்திரா ஸ்கார்ப்பியோ!

பேட்டரியில் இயங்கும் மின்சார மாடல்களை தயாரிப்பதற்காக ரூ.4,000 கோடியை அடுத்த மூன்று ஆண்டுகளில் முதலீடு செய்வதற்கும் மஹிந்திரா திட்டமிட்டுள்ளது. இதுவரை ரூ.500 கோடியை அந்நிறுவனம் முதலீடு செய்துள்ளது.

2019ல் ரிலீசாகிறது பேட்டரியில் இயங்கும் மஹிந்திரா ஸ்கார்ப்பியோ!

மேலும், தனது முதல் மின்சார வாகனமாக கேயூவி100 எஸ்யூவியை களமிறக்கவும் மஹிந்திரா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. டீசல் மஹிந்திரா ஸ்கார்ப்பியோவுக்கு கிட்டத்தட்ட 40 சதவீதத்திற்கும் மேல் வரி விதிக்கப்படும் நிலையில், மின்சார வாகனங்களுக்கு 12 சதவீத ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்படும்.

2019ல் ரிலீசாகிறது பேட்டரியில் இயங்கும் மஹிந்திரா ஸ்கார்ப்பியோ!

எனவே, மின்சார மஹிந்திரா ஸ்கார்ப்பியோ எஸ்யூவி ரூ.12 லட்சம் முதல் ரூ.15 லட்சம் இடையிலான விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட வாய்ப்பு இருக்கிறது. ஆனால், இதனைவிடவும் குறைவான விலையில் வருவதற்கான வாய்ப்பும் உண்டு.

Most Read Articles
மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Mahindra To Launch ‘Electric’ version of Scorpio.
Story first published: Wednesday, November 29, 2017, 17:42 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X