6 பேர் அமர்ந்து செல்லும் வகையில் கேயூவி100 நெக்ஸ்ட் ஹேட்ச்பேக் மாடலை வெளியிடும் மஹிந்திரா..!!

Written By:

எஸ்யூவி கார் விற்பனையில் கொடிகட்டி பறந்து வரும் மஹிந்திரா, தனது முதல் ஹேட்ச்பேக் மாடலின் ஃபேஸ்லிஃப்ட் காரை விரைவில் வெளியிடவுள்ளது.

புதிய தோற்றத்தில் புதிய திறனில் வெளிவரும் கேயூவி100 நெக்ஸ்ட் கார்..!!

கேயூவி100 நெக்ஸ்ட் என்ற பெயரில் இந்தியளவில் வெளிவரும் இந்த கார் பற்றிய அனைத்து தகவல்களையும், டீலர்ஷிப் மூலம் வாடிக்கையாளர்கள் கேட்டு பெறலாம்.

புதிய தோற்றத்தில் புதிய திறனில் வெளிவரும் கேயூவி100 நெக்ஸ்ட் கார்..!!

தற்போது பயன்பாட்டில் இருக்கும் மாடலை விட கேயூவி100 நெக்ஸ்ட் காரில் பல்வேறு புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

காரின் வெளிப்புறத்தில் ஃபாக்ஸ் ஸ்கிட் பிளேட் உடனான புதிய முன்பக்க, பின்பக்க பம்ப்பர்கள் இந்த ஹேட்ச்பேக் காருக்கு எஸ்யூவி போன்ற தோற்றத்தை தருகிறது.

Recommended Video - Watch Now!
Datsun rediGO Gold 1.0-Litre Launched In India | In Tamil- DriveSpark தமிழ்
புதிய தோற்றத்தில் புதிய திறனில் வெளிவரும் கேயூவி100 நெக்ஸ்ட் கார்..!!

இதன்காரணமாக 2016 கேயூவி 100 காரை விட, 2017 கேயூவி 100 நெக்ஸ்ட் காரின் நீளம் 25மிமீ அதிகரித்திருக்கிறது.

இவற்றுடன் காரின் கதவுகள் மற்றும் டெயில் வடிவமைப்பிலும் பல மாற்றங்கள் தென்படுகின்றன.

புதிய தோற்றத்தில் புதிய திறனில் வெளிவரும் கேயூவி100 நெக்ஸ்ட் கார்..!!

முன்பக்க முகப்பு விளக்குகள் மற்றும் பின்பக்க விளக்குகள் ஆகியவை கிரோம் க்ரில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளன. இது மிகவும் கட்டுமஸ்தான உருவத்தை காருக்கு அளிக்கின்றன.

புதிய தோற்றத்தில் புதிய திறனில் வெளிவரும் கேயூவி100 நெக்ஸ்ட் கார்..!!

15 இஞ்ச் டைமன்டு கட் அலாய் சக்கரங்கள், ரூஃப் ரெயில், பின்பக்க ஸ்பாய்லர் இருப்பது இந்த காருக்கான முக்கிய சிறப்பம்சங்களாக உள்ளன.

புதிய தோற்றத்தில் புதிய திறனில் வெளிவரும் கேயூவி100 நெக்ஸ்ட் கார்..!!

2016ல் மூன்று டூயல் டோன் நிற தேர்வுகளுடன் கேயூவி 100 கார் வெளியானது. அதே தேவையுடன் தான் இந்த ஃபேஸ்லிப்ட் மாடலும் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய தோற்றத்தில் புதிய திறனில் வெளிவரும் கேயூவி100 நெக்ஸ்ட் கார்..!!

கேயூவி 100 கார் வெளியான போது சுமார் 24 வேரியண்டுகளில் விற்பனை செய்யப்பட்டது. அதில் தற்போது கே2+, கே4+, கே8, கே8+ ஆகியவற்றில் பெட்ரோல் / டீசல் தேர்வுகளில் 10 வேரியண்டுகளில் மட்டுமே கேயூவி 100 நெக்ஸ்ட் கார் விற்பனைக்கு வருகிறது.

புதிய தோற்றத்தில் புதிய திறனில் வெளிவரும் கேயூவி100 நெக்ஸ்ட் கார்..!!

கேயூவி 100 ஹேட்ச்பேக் மாடல் காரை 6 இருக்கைகள் கொண்டு வடிவமைத்திருக்கிறது மஹிந்திரா. ஆனால் 5 இருக்கைகள் மட்டுமே வேண்டும் என்பவர்களுக்கு அதற்கு ஏற்றவாறு கட்டமைத்து தரப்படும்.

புதிய தோற்றத்தில் புதிய திறனில் வெளிவரும் கேயூவி100 நெக்ஸ்ட் கார்..!!

கேயூவி 100 காரில் தொடுதிரை வசதி இல்லை என்ற குறையை இந்த ஃபேஸ்லிஃப்ட் மாடலில் நிவர்த்தி செய்திருக்கிறது மஹிந்திரா.

புதிய தோற்றத்தில் புதிய திறனில் வெளிவரும் கேயூவி100 நெக்ஸ்ட் கார்..!!

மேலும் இந்த காரின் ஆரம்ப வேரியண்டுகளில் சாம்பல் நிற கேபினையும், டாப் வேரியண்டுகளில் கருப்பு நிற கேபினையும் கேயூவி 100 நெக்ஸ்ட் கார் கொண்டிருக்கிறது.

புதிய தோற்றத்தில் புதிய திறனில் வெளிவரும் கேயூவி100 நெக்ஸ்ட் கார்..!!

மஹிந்திராவின் இந்த ஹேட்ச்பேக் ஃபேஸ்லிப்ஃட் மாடலில் புதிய 7 இஞ்ச் தொடுதிரை பெற்ற இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் உள்ளது.

பல்வேறு செயல்பாடுகளுடன் மேப்மைஇந்தியா மூலம் இயக்கப்பட்டும் ஜிபிஎஸ் நேவிகேஷன் வசதி உள்ளது.

புதிய தோற்றத்தில் புதிய திறனில் வெளிவரும் கேயூவி100 நெக்ஸ்ட் கார்..!!

கூடுதலாக லாக்/அன்லாக் செய்யக்கூடிய டெயில்கேட், ரியர் வியூ கண்ணாடிகளை மின்சாரம் மூலம் இயக்கக்கூடிய வசதி,

ரியர் பார்க்கிங் சென்சார், கியர் இன்டிகேட்டர்-மைலேஜ்-டிரைவிக் மோடுகளை காட்டும் எம்.ஐ.டி சிஸ்டம் ஆகிய வசதிகளுடன்,

புதிய தோற்றத்தில் புதிய திறனில் வெளிவரும் கேயூவி100 நெக்ஸ்ட் கார்..!!

ஓட்டுநர் இருக்கையை மாற்றியமைக்கும் திரன், கூல்டு க்ளோவ் பாக்ஸ், 2 ஏர்பேகுகள், ஏபிஎஸ், இபிடி, கார்னர் பிரேக்கிங் கன்ட்ரோல் போன்ற பாதுகாப்பு அம்சங்களும் இந்த காரில் உள்ளன.

புதிய தோற்றத்தில் புதிய திறனில் வெளிவரும் கேயூவி100 நெக்ஸ்ட் கார்..!!

தற்போது பயன்பாட்டில் உள்ள கேயூவி100 காரில் இருக்கும் அதே 1.2 லிட்டர் திறன் பெற்ற 3 சிலிண்டர் எஞ்சின் தான் கேயூவி 100 நெக்ஸ்ட் காரிலும் மஹிந்திரா பொருத்தியுள்ளது.

புதிய தோற்றத்தில் புதிய திறனில் வெளிவரும் கேயூவி100 நெக்ஸ்ட் கார்..!!

பெட்ரோல், டீசல் என இருவேறு தேர்வுகளிலும் வெளிவரும் இந்த புதிய ஃபேஸ்லிஃப்ட் கார் டீசல் மூலம் 82 பிஎச்ப் பவர் மற்றும் பெட்ரோல் மூலம் 76 பிஎச்பி பவரை வழங்கும்.

புதிய தோற்றத்தில் புதிய திறனில் வெளிவரும் கேயூவி100 நெக்ஸ்ட் கார்..!!

பழைய மாடலை விட இந்த புதிய கார் மைலேஜை அதிகமாக வழங்கும் வகையில் இலகுவான டிரைவிங்கை மனதில்வைத்து ரீ-ட்யூன் செய்யப்பட்டுள்ளது.

கார் ஓட்டும் போது அதை மேம்படுத்திக்காட்ட, முன்பக்க மற்றும் பின்பக்க சஸ்பென்ஷனின் பயணம் மதிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

புதிய தோற்றத்தில் புதிய திறனில் வெளிவரும் கேயூவி100 நெக்ஸ்ட் கார்..!!

இவற்றுடன் கிரவுண்டு கிளயரன்ஸ் உட்பட பல்வேறு அம்சங்களும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற குறிப்பிடத்தக்க மாற்றங்கள் இருப்பதால் கேயூவி 100 நெக்ஸ்ட் கார் அதிக விலையில் வெளிவருவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன.

மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Read in Tamil: Mahindra Launches All new KUV 100 NXT Hatchback Car. Click for Details...

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark