Subscribe to DriveSpark

அம்பாஸிடர் காரின் இடத்தை நிரப்ப வரும் புதிய கார் பற்றிய தகவல்கள்!

Written By:

இப்போது எத்தனையோ வெளிநாட்டு கார்கள் பல வண்ணங்களில் பள பள வென ஜொலிப்புடன் ஓடுகின்றன. ஆனாலும் அக்காலத்தில் அம்பாஸிடர் கார்கள் தான் அந்தஸ்தின் அடையாளமாக திகந்தன. தாசில்தார் முதல் பிரதமர், ஜனாதிபதி வரை பயணித்த பெருமை கொண்ட விஐபி காராக மிடுக்குடன் வலம் வந்தது அம்பாஸிடர் மட்டுமே.

To Follow DriveSpark On Facebook, Click The Like Button
அம்பாஸிடர் காரின் இடத்தை நிரப்புமா இந்த புதிய கார்?

புகழின் உச்சியில் இருந்த அம்பாஸிடர் கார்களை எம்ஜிஆர், சிவாஜி முதலான நம் தமிழ் மண்ணைச்சேர்ந்த பிரபலங்களும் விரும்பி உபயோகித்தனர். எனினும், தொழில்நுட்ப மாறுதல்களை அம்பாஸிடர் கார்கள் பெற்றிருக்கவில்லை. மேலும் காலமாற்றத்தின் காரணமாக இத்தலைமுறையினரிடம் போதிய வரவேற்பை பெறத் தவறியதால் இவற்றின் புகழ் மங்கத் துவங்கியது.

அம்பாஸிடர் காரின் இடத்தை நிரப்புமா இந்த புதிய கார்?

ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பான அப்பாஸிடர் கார்கள் 1958 முதல் 2014ஆம் ஆண்டு வரை இந்தியாவில் விற்பனையில் இருந்தன. இந்திய ஆட்டோமொபைல் சரித்திரத்தில் அம்பாஸிடர் காரின் பெயர் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்டவை என்றால் மிகையாகாது.

அம்பாஸிடர் காரின் இடத்தை நிரப்புமா இந்த புதிய கார்?

சொந்த கார் வைத்திருப்பவர்கள் அபூர்வமான ஒன்றாக இருந்த அக்காலத்தில் பெரும்பாலும் வாடகை கார்கள் தான் தனிப்பட்டவர்களின் போக்குவரத்து சாதனமாக திகழ்ந்தது. அம்பாஸிடர் கார்கள் வலிமையான கட்டமைப்பு பெற்றதால் விபத்தினால் கூட அதிகம் பாதிக்கப்படாதவையாகவே திகழ்ந்தது.

அம்பாஸிடர் காரின் இடத்தை நிரப்புமா இந்த புதிய கார்?

ஒட்டுமொத்த இந்தியாவில் செல்ல வாகனமாக திகழ்ந்த அம்பாஸிடர் விட்டுச் சென்ற இடத்தை நிரப்ப மஹிந்திரா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்காக வாடகை கார் ஓட்டுநர்களின் விரும்பத்தக்க மாடலாக இருக்கும் வெரிடோவின் மேம்பட்ட மாடல் காரை அறிமுகப்படுத்த உள்ளது மஹிந்திரா நிறுவனம்.

அம்பாஸிடர் காரின் இடத்தை நிரப்புமா இந்த புதிய கார்?

மஹிந்திரா - ரெனால்ட் நிறுவனங்கள் கூட்டு சேர்ந்து தயாரித்த லோகன் காரின் வழித்தோன்றலாகவே வெரிட்டோ கார் வெளிவந்தது. இந்திய சந்தையில் வெரிட்டோ கார் குறிப்பிடத்தக்க வெற்றியை பெறவில்லை. இதர போட்டியாளர்களின் விலையை விடவும் லோகனின் விலை சற்று அதிகமாக இருந்ததும் ஒரு முக்கிய காரணமாக இருந்தது.

அம்பாஸிடர் காரின் இடத்தை நிரப்புமா இந்த புதிய கார்?

மஹிந்திரா நிறுவனம் அம்பாஸிடர் காரின் சிறப்பம்சங்களான வலிமை, சொகுசு, இடவசதி ஆகியவற்ற கருத்தில் கொண்டு அனைவரும் வாங்கும் விலையில் ஒரு புதிய வாகனத்தை உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது.

அம்பாஸிடர் காரின் இடத்தை நிரப்புமா இந்த புதிய கார்?

இது தொடர்பாக மஹிந்திரா நிர்வாக இயக்குனர் பவன் கோயன்காவிடம் கேட்டபோது, டேக்ஸி செக்மெண்டை கருத்தில் கொண்டு கேஸ், பெட்ரோல், டீசல் மாடல்களில் புதிய வெரிடோ-வை உருவாக்கி வருவதாகவும், அம்பாஸிடர் விட்டுச்சென்ற இடத்தை புதிய வெரிட்டோ நிச்சயம் பிடிக்கும் என்று உறுதிபட தெரிவித்தார்.

அம்பாஸிடர் காரின் இடத்தை நிரப்புமா இந்த புதிய கார்?

வரும் 2020ஆம் ஆண்டிற்குள் இந்தியாவில் ஓடும் பயணிகள் கார்களில் 17 சதவீத பங்களிப்பை வாடகை கார்கள் அளிக்கும் என்று ‘இந்திய தொழில் முதலீட்டு அமைப்பு' கணித்துள்ளது.

அம்பாஸிடர் காரின் இடத்தை நிரப்புமா இந்த புதிய கார்?

எனவே வாடகை கார் செக்மெண்ட்டில் சிறந்து விளங்கும் வகையிலும், நடுத்தர மக்கள் வாங்கும் வகையிலான விலையில் புதிய வெரிடோ கார்களை மஹிந்திரா நிறுவனம் உருவாக்கி வருகிறது. இது அம்பாஸிடர் காரின் இடத்தை பிடிக்குமா என்பதனை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

அம்பாஸிடர் காரின் இடத்தை நிரப்புமா இந்த புதிய கார்?

தற்போது வெரிடோ டீசல் மற்றும் எலெக்ட்ரிக் மாடல்களில் கிடைக்கிறது. 4 சிலிண்டர்கள் கொண்ட 1.5 லிட்டர் டீசல் இஞ்சின், அதிகபட்சமாக 65 பிஹச்பி ஆற்றலை வெளிப்படுட்தும் திறன் கொண்டது. இதில் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் உள்ளது. ஆட்டோமேடிக் கார் அதிகபட்சமாக 41 பிஹச்பி ஆற்றலையும் 91 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இதில் ஆட்டோமேடிக் கியர் பாக்ஸ் உள்ளது.

வாசகர்கள் படித்துவரும் மேலும் சில சுவாரஸ்யமான செய்திகள்...

புதிய பஜாஜ் டோமினார்400 பைக்கின் படங்களை காணலாம்.

விரைவில் விற்பனைக்கு வரும் புதிய டாடா டிகோர் காரின் பிரத்யேகமான படங்களின் தொகுப்பை இந்த கேலரியில் காணலாம்.

புதிய மாருதி ஸ்விஃப்ட் காரின் படங்களை கேலரியில் காணலாம்.

டாடா ஹெக்ஸா காரின் படங்களை இந்த கேலரியில் காணலாம்.

English summary
Mahindra Verito is an updated version of the Logan which was launched as a joint venture with Renault.
Please Wait while comments are loading...

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark