புதிய மஹிந்திரா காம்பேக்ட் எஸ்யூவியின் வருகை குறித்த தகவல்கள்!

Written By:

சாங்யாங் டிவோலி எஸ்யூவியின் பிளாட்ஃபார்மில் தயாரிக்கப்பட்ட புதிய எஸ்யூவி வகை கார் மாடலை மஹிந்திரா நிறுவனம் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த புதிய எஸ்யூவி ஹூண்டாய் க்ரெட்டா மற்றும் ரெனோ டஸ்ட்டர் உள்ளிட்ட எஸ்யூவி மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.

ஹூண்டாய் க்ரெட்டாவுக்கு போட்டியாக வரும் புதிய மஹிந்திரா எஸ்யூவி!!

மஹிந்திரா எஸ்201 என்ற குறியீட்டுப் பெயரில் இந்த புதிய காம்பேக்ட் எஸ்யூவி மாடல் அழைக்கப்படுகிறது. சாங்யாங் டிவோலி எஸ்யூவி உருவாக்கப்பட்ட சாங்யாங் எக்ஸ்100 பிளாட்ஃபார்மில்தான் இந்த புதிய மாடலும் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

ஹூண்டாய் க்ரெட்டாவுக்கு போட்டியாக வரும் புதிய மஹிந்திரா எஸ்யூவி!!

சாங்யாங் டிவோலி உருவாக்கப்பட்ட அதே பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டாலும், தோற்றத்தில் முற்றிலும் மாறுபட்ட மாடலாக இதனை மஹிந்திரா வடிவமைத்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹூண்டாய் க்ரெட்டாவுக்கு போட்டியாக வரும் புதிய மஹிந்திரா எஸ்யூவி!!

மேலும், தனது கீழ் செயல்படும் இத்தாலியை சேர்ந்த பினின்ஃபரீனா கார் வடிவமைப்பு நிறுவனத்திடமிருந்து ஆலோசனைகளை பெற்று இந்த எஸ்யூவியை வடிவமைத்து இருப்பதாகவும் தெரிகிறது. மிக ஸ்டைலாக இருக்கும் என நம்பலாம்.

ஹூண்டாய் க்ரெட்டாவுக்கு போட்டியாக வரும் புதிய மஹிந்திரா எஸ்யூவி!!

புதிய மஹிந்திரா எஸ்201 எஸ்யூவி பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில் வருகிறது. சாங்யாங்- மஹிந்திரா இணைந்து உருவாக்கி உள்ள புதிய 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் இந்த புதிய காரில் இடம்பெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹூண்டாய் க்ரெட்டாவுக்கு போட்டியாக வரும் புதிய மஹிந்திரா எஸ்யூவி!!

மஹிந்திரா நூவோஸ்போர்ட் மற்றும் டியூவி300 எஸ்யூவி மாடல்களில் இடம்பெற்றிருக்கும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் இந்த புதிய மாடலிலும் இடம்பெற இருக்கிறது. 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் எதிர்பார்க்கப்படுகிறது.

ஹூண்டாய் க்ரெட்டாவுக்கு போட்டியாக வரும் புதிய மஹிந்திரா எஸ்யூவி!!

ரூ.9 லட்சம் முதல் ரூ.13 லட்சம் வரையிலான விலைப் பட்டியலில் இந்த புதிய எஸ்யூவி விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த ஆண்டு இறுதியில் அல்லது 2019ம் ஆண்டு துவக்கத்தில் இந்த புதிய எஸ்யூவி மாடலை மஹிந்திரா நிறுவனம் அறிமுகம் செய்யும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பு: மாதிரிக்காக சாங்யாங் டிவோலி எஸ்யூவி படங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

புதிய பிஎம்டபிள்யூ ஜி310ஆர் பைக்கின் படங்கள்!

புதிய பிஎம்டபிள்யூ ஜி310ஆர் பைக்கின் படங்களை கீழே உள்ள கேலரியில் காணலாம்.

மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Read in Tamil: Mahindra S201 sub-compact SUV India launch details.
Story first published: Saturday, March 4, 2017, 13:30 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark