மஹிந்திரா ஸ்கார்ப்பியோ ஃபேஸ்லிஃப்ட் மாடல் அறிமுக தேதி வெளியானது!

மஹிந்திரா ஸ்கார்ப்பியோ எஸ்யூவியின் மேம்படுத்தப்பட்ட மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கும் தேதி விபரம் வெளியாகி இருக்கிறது.

By Saravana Rajan

புதுப்பொலிவுடன் வரும் புதிய மஹிந்திரா ஸ்கார்ப்பியோ எஸ்யூவியின் அறிமுக தேதி விபரம் வெளியாகி உள்ளது. அதனை இந்த செய்தியில் காணலாம்.

 மஹிந்திரா ஸ்கார்ப்பியோ ஃபேஸ்லிஃப்ட் மாடலின் அறிமுக தேதி!

மஹிந்திரா நிறுவனத்தின் மிகவும் வெற்றிகரமான எஸ்யூவி மாடல் ஸ்கார்ப்பியோ. நீண்ட காலமாக மார்க்கெட்டில் இருந்து வரும் மஹிந்திரா ஸ்கார்ப்பியோவுக்கு தொடர்ந்து சிறந்த வரவேற்பு இருந்து வருகிறது.

 மஹிந்திரா ஸ்கார்ப்பியோ ஃபேஸ்லிஃப்ட் மாடலின் அறிமுக தேதி!

வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் விதத்தில், கூடுதல் சிறப்பம்சங்களுடன் மஹிந்திரா ஸ்கார்ப்பியோவுக்கு புதுப்பொலிவு கொடுக்கப்பட்டு இருக்கிறது. அண்மையில் இந்த புதிய ஸ்கார்ப்பியோ சோதன ஓட்டங்கள் நடத்தப்பட்டபோது எடுக்கப்பட்ட படங்கள் கூட வெளியானது.

 மஹிந்திரா ஸ்கார்ப்பியோ ஃபேஸ்லிஃப்ட் மாடலின் அறிமுக தேதி!

இந்த நிலையில், வரும் 14ந் தேதி புதிய மஹிந்திரா ஸ்கார்ப்பியோ விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. வெளிப்புறத்திலும், உட்புறத்திலும் சிறிய மாறுதல்களுடன் புதிய ஸ்கார்ப்பியோ வர இருக்கிறது.

 மஹிந்திரா ஸ்கார்ப்பியோ ஃபேஸ்லிஃப்ட் மாடலின் அறிமுக தேதி!

முன்புறத்தில் 7 பட்டக அமைப்புடைய புதிய க்ரில் அமைப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது. பெரிய ஏர்டேம் மற்றும் பம்பர் அமைப்பும் கம்பீரத்தை கூட்டுவதாக இருக்கிறது.

 மஹிந்திரா ஸ்கார்ப்பியோ ஃபேஸ்லிஃப்ட் மாடலின் அறிமுக தேதி!

பக்கவாட்டில் அதிக மாற்றங்கள் இள்லை. பிளாஸ்டிக் கிளாடிங்கில் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பதுடன், புதிய டிசைனிலான அலாய் வீல்களுடன் வர இருக்கிறது.

 மஹிந்திரா ஸ்கார்ப்பியோ ஃபேஸ்லிஃப்ட் மாடலின் அறிமுக தேதி!

பின்பறத்தில் கதவு அமைப்பில் மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கின்றன. டெயில் லைட் க்ளஸ்ட்டர் அமைப்பிலும் சிறிய மாற்றங்கள் இருக்கிறது. க்ளியர் லென்ஸ் டெயில் லைட்டுகள் இல்லை.

 மஹிந்திரா ஸ்கார்ப்பியோ ஃபேஸ்லிஃப்ட் மாடலின் அறிமுக தேதி!

புதிய மஹிந்திரா ஸ்கார்ப்பியோ எஸ்யூவியில் 2.2 லிட்டர் எம்ஹாக் டீசல் எஞ்சின்தான் தொடர்ந்து நீடிக்கிறது. ஆனால், அதிகபட்சமாக 138 பிஎச்பி பவரை அளிக்கும் விதத்தில் மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. தற்போது இந்த எஸ்யூவி 120 பிஎச்பி பவரை அளிக்கும் விதத்தில் இருக்கிறது.

 மஹிந்திரா ஸ்கார்ப்பியோ ஃபேஸ்லிஃப்ட் மாடலின் அறிமுக தேதி!

புதிய மஹிந்திரா ஸ்கார்ப்பியோவில் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் தொடர்ந்து கிடைக்கும். புதிய மாடலில் இருக்கும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஜப்பானை சேர்ந்த அசின் செய்கி நிறுவனத்திடமிருந்து சப்ளை பெறப்பட உள்ளது.

 மஹிந்திரா ஸ்கார்ப்பியோ ஃபேஸ்லிஃப்ட் மாடலின் அறிமுக தேதி!

ஹைப்ரிட் கார்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையில், அதிக வரி என்பதால், புதிய மஹிந்திரா ஸ்கார்ப்பியோ எஸ்யூவியில் மைல்டு- ஹைப்ரிட் தொழில்நுட்பம் நீக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 மஹிந்திரா ஸ்கார்ப்பியோ ஃபேஸ்லிஃப்ட் மாடலின் அறிமுக தேதி!

புதிய மஹிந்திரா ஸ்கார்ப்பியோவில் அதிக மாற்றங்கள் இல்லை. எனினும், கூடுதல் சக்திவாய்ந்த எஞ்சினுடன் முகப்பில் மாற்றங்களுடன் வருவது ஸ்கார்ப்பியோ பிரியர்களை கவரும் விஷயமாகவே கருத முடியும்.

Most Read Articles
மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Mahindra & Mahindra is all set to update its popular SUV the Scorpio in India. The automaker has announced that the Scorpio facelift will be launched in the country on November 14, 2017.
Story first published: Friday, November 10, 2017, 10:13 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X