இந்தியாவில் 2017 மஹிந்திரா ஸ்கார்பியோ ஃபேஸ்லிஃப்ட் மாடல் விற்பனைக்கு அறிமுகம்..!!

Written By:

2017 மஹிந்திரா ஸ்கோர்பியோ ஃபேஸ்லிஃப்ட் மாடல் கார் இந்தியாவில் ரூ.9.97 லட்சம் (டெல்லி-எக்ஸ்ஷோரூம்) ஆரம்ப விலையில் விற்பனைக்கு வந்துள்ளது.

புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ கார் விற்பனைக்கு வந்தது..!!

புதிய ஸ்கார்பியோ ஃபேஸ்லிப்ஃட் கார் குறிப்பிடத்தகுந்த புதிய தோற்றப்பொலிவுகளை பெற்றுள்ளது. குறிப்பாக இதனுடைய கேபின் பல முக்கிய மாற்றங்களுடன் தயாராகியுள்ளது.

புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ கார் விற்பனைக்கு வந்தது..!!

எஞ்சினுக்காக செயல்திறனும் இதில் கூட்டப்பட்டுள்ளது. 20 பிஎச்பி பவர் தரும் ஸ்கோர்பியோ ஃபேஸ்லிஃப்ட் மாடலின் எஞ்சின் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.

புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ கார் விற்பனைக்கு வந்தது..!!

மேலும் புதிய ஸ்கார்பியோ காருக்கான வேரியண்டுகள் பெயர்களையும் மஹிந்திரா மாற்றியுள்ளது.

அதன்படி இனி இந்த எஸ்யூவி எஸ்3, எஸ்5, எஸ்7 மற்றும் எஸ்11 என நான்கு வேரியண்டுகளில் அடையாளப்படுத்தப்படும்.

2017 மஹிந்திரா ஸ்கார்பியோ ஃபேஸ்லிஃப்ட் காரின் விலைகள்:

2017 மஹிந்திரா ஸ்கார்பியோ ஃபேஸ்லிஃப்ட் காரின் விலைகள்:

மஹிந்திரா ஸ்கார்பியோ ஃபேஸ்லிப்ஃட் வேரியண்டுகள் விலை
எஸ்3 2 டபுள்யூ.டி ரூ. 9.97 லட்சம்
எஸ்5 2 டபுள்யூ.டி ரூ.11.62 லட்சம்
எஸ்7 120 பிஎச்பி பவர் 2 டபுள்யூ.டி ரூ. 12.69 லட்சம்
எஸ்7 140 பிஎச்பி பவர் 2 டபுள்யூ.டி ரூ.12.99 லட்சம்
எஸ்11 2 டபுள்யூ.டி ரூ.14.79 லட்சம்
எஸ்11 4 டபுள்யூ.டி ரூ. 16.01 லட்சம்
புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ கார் விற்பனைக்கு வந்தது..!!

புதிய ஸ்கார்பியோ காரில் 2.2 லிட்டர் எம்-ஹாக் டீசல் எஞ்சின் உள்ளது. இது தற்போது கிடைக்கும் 120 பிஎச்பி பவர் மற்றும் மேம்படுத்தப்பட்ட 138 பிஎச்பி பவரை தரவல்லது.

புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ கார் விற்பனைக்கு வந்தது..!!

இதனுடைய டார்க் திறன் வேரியண்டுகளின் வடிவமைப்பிற்கு ஏற்றவாறு 280 என்.எம் முதல் சக்திவாய்ந்த மாடலில் 320 என்.எம் டார்க் திறன் வரை தரும்.

Trending On Drivespark:

மிரட்டும் புதிய எஸ்யூவி காரில் சென்று ரசிகர்களை சந்தித்த 'லேடி சூப்பர் ஸ்டார்' நயன்தாரா..!!

இந்த விலையில் இவ்வளவு வசதிகளா.... திக்குமுக்காட வைக்கும் ரெனோ கேப்டூர்!

டிரக் ஓட்டுநரின் அசரடிக்கும் டிரைவிங் திறனால் நூலிழையில் உயிர் தப்பிய சிறுவன்..!! (வீடியோ)

புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ கார் விற்பனைக்கு வந்தது..!!

கியர்பாக்ஸ் தேவைகளில் 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் ஆப்ஷன்கள் டிரான்ஸ்மிஷன் அம்சங்களை வழங்குகின்றன.

Recommended Video - Watch Now!
[Tamil] Skoda kodiaq Launched In India - DriveSpark
புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ கார் விற்பனைக்கு வந்தது..!!

புதிய ஸ்கார்பியோ கார், தற்போது பயன்பாட்டில் இருக்கு காரின் வடிவத்தில் இருந்து பெரியளவில் மாறுபாட்டை பெற்றிருக்கவில்லை.

புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ கார் விற்பனைக்கு வந்தது..!!

இருந்தாலும் காரின் ரேடியேட்டர் க்ரில் மஹிந்திரா இம்பீரியோ க்ரில் போன்று 8 ஸ்லாட்டுகளை பெற்றுள்ளது. ரியர் பகுதிகளிலும் சில மாற்றங்கள் நடந்துள்ளன.

புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ கார் விற்பனைக்கு வந்தது..!!

மேம்படுத்தப்பட்ட பம்ப்பர், பெரிய பனிக்கால விளக்குகளுடன் ஹெட்லேம்புகள் வழக்கமான கிளஸ்டர் வடிவமைப்பை கொண்டுள்ளன.

புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ கார் விற்பனைக்கு வந்தது..!!

காரின் பக்கவாட்டு பகுதிகளில் புதிய அலாய் சக்கரங்கள், ஓ.ஆர்.வி.எம் ஆகியவை இடம்பெற்றுள்ளன. காரின் பின்புறத்தில் கவனித்தகுந்த புதிய வடிவமைப்புகள் உள்ளன.

புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ கார் விற்பனைக்கு வந்தது..!!

தற்போது பயன்பாட்டில் இருக்கும் ஸ்கார்பியோ கார்களில் பின்புற விளக்கு நிறமின்றி இருக்கும்.

ஆனால் இந்த புதிய ஸ்கார்பியோ ஃபேஸ்லிஃப்ட் மாடலில் ரியர் லைட்டுகள் சிவப்பு நிற டெயில் லேம்புகளை பெற்றுள்ளன.

மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Read in Tamil: 2017 Mahindra Scorpio Facelift Launched In India; Prices Start At Rs 9.97 Lakh. Click for Details...

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark