மஹிந்திரா ஸ்கார்ப்பியோ, எக்ஸ்யூவி 500 எலக்ட்ரிக் மாடல்கள் !!

Written By:

பேட்டரியில் இயங்கும் மஹிந்திரா ஸ்கார்ப்பியோ மற்றும் எக்ஸ்யூவி 500 எஸ்யூவி மாடல்களை உருவாக்கும் பணிகள் மிக தீவிரமாக நடந்து வருகின்றன. இதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

To Follow DriveSpark On Facebook, Click The Like Button
மஹிந்திரா ஸ்கார்ப்பியோ, எக்ஸ்யூவி 500 எலக்ட்ரிக் மாடல்கள் !!

பெட்ரோல், டீசல் வாகனங்களின் பயன்பாட்டை ஒழிக்கும் வகையில், பல புதிய விதிகளை நடைமுறைக்கு கொண்டு வருவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. எனவே, பேட்டரியில் இயங்கும் மின்சார வாகனங்களை தயாரிக்கும் பணிகளில் வாகன நிறுவனங்கள் தீவிரம் காட்டி வருகின்றன. எதிர்காலத்தில் மின்சார வாகன மாடல்கள்தான் வர்த்தக்கை நிர்ணயிக்கும்.

மஹிந்திரா ஸ்கார்ப்பியோ, எக்ஸ்யூவி 500 எலக்ட்ரிக் மாடல்கள் !!

அந்த வகையில், மஹிந்திரா நிறுவனம் மின்சார கார் தயாரிப்பு துறையில் நாட்டின் முன்னோடியாக இருப்பதுடன், பல புதிய மாடல்களை அறிமுகம் செய்யும் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. அதில், அந்த நிறுவனத்தின் மிகவும் பிரலபமான எஸ்யூவி மாடல்களின் மின்சார மாடல்களின் தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருவதாக மணிகன்ட்ரோல் இணையதளம் செய்தி வெளியிட்டு இருக்கிறது.

மஹிந்திரா ஸ்கார்ப்பியோ, எக்ஸ்யூவி 500 எலக்ட்ரிக் மாடல்கள் !!

தற்போது மஹிந்திரா ஸ்கார்ப்பியோ மற்ரும் எக்ஸ்யூவி500 எஸ்யூவி மாடல்கள் 2.2 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில், பேட்டரியில் இயங்கும் ஸ்கார்ப்பியோ மற்றும் எக்ஸ்யூவி 500 மாடல்கள் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன.

மஹிந்திரா ஸ்கார்ப்பியோ, எக்ஸ்யூவி 500 எலக்ட்ரிக் மாடல்கள் !!

இந்த இரு மாடல்களும் டீசல் மாடல்களைவிட சற்று கூடுதல் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, ரூ.12 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரையிலான விலையில் இந்த இரு கார்களும் விற்பனைக்கு வரும் என்று தெரிகிறது.

மஹிந்திரா ஸ்கார்ப்பியோ, எக்ஸ்யூவி 500 எலக்ட்ரிக் மாடல்கள் !!

எனினும், இந்த இரண்டு பிரம்மாண்ட எஸ்யூவி மாடல்கள் பேட்டரி சார்ஜில் எவ்வளவு தூரம் பயணிக்கும் என்பது குறித்து பல்வேறு சந்தேகங்கள் இருக்கின்றன. அதிக தூரம் பயணிக்கும் சிறப்புடன், சரியான விலையில் அறிமுகம் செய்யப்பட்டால் நிச்சயம் நல்ல வரவேற்பை பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

மஹிந்திரா ஸ்கார்ப்பியோ, எக்ஸ்யூவி 500 எலக்ட்ரிக் மாடல்கள் !!

இதனிடையே, மஹிந்திரா ஸ்கார்ப்பியோ மற்றும் எக்ஸ்யூவி500 எஸ்யூவிகளின் மேம்படுத்தப்பட்ட மாடல்கள் 2018ம் ஆண்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
பேட்டரியில் இயங்கும் புதிய மஹிந்திரா ஸ்கார்ப்பியோ மற்றும் எக்ஸ்யூவி 500 எஸ்யூவிகளை உருவாக்கும் பணிகள் மிக தீவிரமாக நடந்து வருகின்றன.
Story first published: Friday, September 15, 2017, 12:06 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos