புதிய மஹிந்திரா டியூவி300 ப்ளஸ் எஸ்யூவியின் முக்கிய சிறப்பம்சங்கள்!

புதிய மஹிந்திரா டியூவி300 ப்ளஸ் எஸ்யூவியின் முக்கிய தொழில்நுட்ப அம்சங்கள் குறித்த விபரங்கள் வெளியாகி உள்ளன. அதன் விபரங்களையும், படங்களையும் இந்த செய்தியில் காணலாம்.

By Saravana Rajan

புதிய மஹிந்திரா டியூவி300 ப்ளஸ் எஸ்யூவி குறித்த பல முக்கியத் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

9 சீட்டர் மாடலாக வருகிறது புதிய மஹிந்திரா டியூவி300 ப்ளஸ் எஸ்யூவி!

மஹிந்திரா டியூவி300 எஸ்யூவியின் அதிக நீளம் கொண்ட புதிய மாடலை மஹிந்திரா விரைவில் விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது. இந்த புதிய மாடல் மஹிந்திரா டியூவி300 ப்ளஸ் என்ற பெயரில் வர இருக்கிறது.

இந்த புதிய காரின் முக்கிய தகவல்கள் குறித்து அராய் அமைப்பின் சான்றை இந்தியன் ஆட்டோஸ் பிளாக் தளம் வெளியிட்டு இருக்கிறது. அதன் விபரங்களை தொடர்ந்து காணலாம்.

9 சீட்டர் மாடலாக வருகிறது புதிய மஹிந்திரா டியூவி300 ப்ளஸ் எஸ்யூவி!

புதிய மஹிந்திரா டியூவி300 ப்ளஸ் எஸ்யூவி மூன்று வரிசை இருக்கை அமைப்பு கொண்ட மாடலாக வருவது தெரிந்ததே. இது 7 சீட்டர் மாடலாக இருக்கும் என்ற கணிக்கப்பட்ட நிலையில், இது 9 சீட்டர் மாடலாக வர இருப்பது தெரிய வந்துள்ளது. ஓட்டுனரை சேர்த்து 9 பேர் வரை பயணிக்கும் இடவசதி இருக்கும்.

9 சீட்டர் மாடலாக வருகிறது புதிய மஹிந்திரா டியூவி300 ப்ளஸ் எஸ்யூவி!

புதிய மஹிந்திரா டியூவி300 ப்ளஸ் எஸ்யூவி 4,398மிமீ நீளமும், 1,815மிமீ அகலமும், 1,837மிமீ உயரமும் கொண்டது. டியூவி300 எஸ்யூவியைவிட இந்த புதிய டியூவி300 ப்ளஸ் எஸ்யூவி 403மிமீ கூடுதல் நீளம் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Recommended Video

Khan Design Jeep Wrangler Black Hawk Edition - DriveSpark
9 சீட்டர் மாடலாக வருகிறது புதிய மஹிந்திரா டியூவி300 ப்ளஸ் எஸ்யூவி!

அதேநேரத்தில், டியூவி300 மற்றும் டியூவி300 ப்ளஸ் ஆகிய இரண்டு மாடல்களும் வீல்பேஸ் 2,680மிமீ என்ற ஒரே அளவு என்பது குறிப்பிடத்தக்கது. டியூவி300 எஸ்யூவியை புதிய டியூவி300 ப்ளஸ் எஸ்யூவி 20மிமீ அகலம் குறுகலாகவும், 2 மிமீ உயரம் குறைவு என்பதும் ஆச்சரியத்தக்க தகவல்.

9 சீட்டர் மாடலாக வருகிறது புதிய மஹிந்திரா டியூவி300 ப்ளஸ் எஸ்யூவி!

மஹிந்திரா டியூவி300 எஸ்யூவியில் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் பயன்படுத்தப்பட்ட நிலையில், புதிய மஹிந்திரா டியூவி300 ப்ளஸ் எஸ்யூவியில் 2.2 லி்டர் எம்ஹாக் டீசல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 118.35 பிஎச்பி பவரையும், 280 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.

Trending On DriveSpark Tamil:

9 சீட்டர் மாடலாக வருகிறது புதிய மஹிந்திரா டியூவி300 ப்ளஸ் எஸ்யூவி!

இந்த புதிய எஸ்யூவியானது 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் வருகிறது. தவிரவும், ஏஎம்டி அல்லது ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனும் எதிர்பார்க்கப்படுகிறது.

9 சீட்டர் மாடலாக வருகிறது புதிய மஹிந்திரா டியூவி300 ப்ளஸ் எஸ்யூவி!

விரைவில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படும் இந்த எஸ்யூவி ஏற்கனவே தமிழகத்தை சேர்ந்த வாடிக்கையாளர் உள்பட, குறிப்பிட்ட வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி கொடுக்கப்பட்டு இருக்கிறது. மஹிந்திரா டியூவி300 ப்ளஸ் எஸ்யூவியின் பி4 வேரியண்ட்தான் டெலிவிரி கொடுக்கப்பட்டு இருக்கிறது.

9 சீட்டர் மாடலாக வருகிறது புதிய மஹிந்திரா டியூவி300 ப்ளஸ் எஸ்யூவி!

இந்த வேரியண்ட் ரூ.9.46 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் கொடுக்கப்பட்டு இருப்பதுடன், இது 9 சீட்டர் மாடல் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த எஸ்யூவி சிறப்பான இடவசதியை வழங்கும் என்று எதிர்பார்க்கலாம்.

Picture Credit: Facebook

Trending On DriveSpark Tamil:

Most Read Articles
மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Ahead of its launch, IAB has got hold of the ARAI (Automotive Research Association of India) certificate of the Mahindra TUV300 Plus which reveal the technical details of the utility vehicle.
Story first published: Thursday, December 28, 2017, 13:26 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X