மஹிந்திரா நிறுவனம் புதிய ’டியூவி 300 பிளஸ்’ காரின் டெஸ்ட் டிரைவ் படங்கள் கசிந்தன..!!
மஹிந்திரா நிறுவனம் புதிய ’டியூவி 300 பிளஸ்’ காரின் டெஸ்ட் டிரைவ் படங்கள் கசிந்தன..!!
மஹிந்திரா அடுத்தடுத்து களமிறக்கும் புதிய ரக வாகனங்களுக்கான சோதனையை தீவிரமாக நடத்தி வருகிறது.
அந்த வகையில் இன்னோவா கிறிஸ்டாவிற்கு போட்டியாக எம்.வி.பி காரை விரைவில் அந்நிறுவனம் களமிறக்குகிறது.

இதற்கு பிறகு டியூவி மாடலில் புதிய காருக்கான அடிப்படை சோதனை பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் இந்த காரின் பெயரில் சிறிய மாற்றத்தை மஹிந்திரா நிறுவனம் மேற்கொண்டுள்ளது.

டியூவி 300 மாடலுக்கு பிறகு அதே செக்மெண்டில் வரக்கூடிய கார் என்பதால், டியூவி 500 என்று இந்த புதிய காருக்கு பெயர் இருக்கலாம் என கருத்தப்பட்டது.

ஆனால் தற்போது இந்த புதிய மாடல் காருக்கு மஹிந்திரா டியூவி 300 பிளஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது. இதே டிரேட்மார்க்கின் கீழ் தான் இந்த கார் இந்தியாவிற்கு வெளிவருகிறது.
Recommended Video


டியூவி 300 மாடலை விட கூடுதலாக இடவசதிக்கொண்டு தயாராகி உள்ள இந்த டியூவி 300 பிளஸ் காரின் சோதனையை மஹிந்திரா இந்தியாவில் தீவிரமாக தொடங்கியுள்ளது.

அதனுடைய ஸ்பை படங்கள் இணையத்தில் கசிந்ததை தொடர்ந்து தற்போது இந்தியாவில் மஹிந்திரா நிறுவனம் டியூவி 300 பிளஸ் காரை விரைவில் வெளியிடும் என தெரிகிறது.

சோதனையின் போது வெளியான புகைப்படங்களை வைத்து பார்க்கும்போது டியூவி 300-ன் வடிவமைப்பின் கீழ் தான் புதிய டியூவி 300 பிளஸ் கார் தயாராகி இருப்பது தெரிகிறது.

பெட்டி வடிவிலான வெளிப்புற கட்டமைப்பு, சதுவர வடிவிலான சக்கரங்களின் ஆர்க்குகள், போன்றவை அனைத்தும் டியூவி 300 காரின் வெளிப்புறத்தேயே நினைவூட்டுகின்றன.

ஆனால் டியூவி 300 பிளஸ் காருக்கு உள்கட்டமைப்பில் தான் பெரியளவில் வடிவமைப்புகள் இருக்கின்றன. டூயல்-டோன் நிறத்திலான பாகங்கள், நேவிகேஷன் மற்றும் கூடுதல் தொழில்நுட்பங்களுடன் கூடிய இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் போன்ற வசதிகள் உள்ளன.

இதற்கான கட்டமைப்புகள் பெரும்பாலும் எக்ஸ்யூவி500 கார் மாடலை பின்பற்றி இருக்கும் வகையில் உள்ளது. அதேபோன்று இது ப்ரீமியம் தரம் வாய்ந்த காராக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

எஞ்சினுக்கான தேவைகளின் டியூவி 300 பிளஸ் கார் இரண்டு எஞ்சின் தேர்வுகளில் எதாவது ஒன்றில் வெளிவரலாம்

டியூவி 300 காரிலுள்ள 1.5 லிட்டர் எஞ்சின் அல்லது ஸ்கார்பியோ காரின் 2.2 லிட்டர் டீசல் எஞ்சின் என இரண்டு தேர்வுகளில் எதாவது எஞ்சின் தேவையை இந்த கார் கொண்டு இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டியூவி 300 பிளஸ் கார் இந்த வருடத்தின் ஏதாவது விழாக்காலத்தில் பிரம்மாண்டமாக வெளியிடப்படும் என்று மஹிந்திரா நிறுவனத்தில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேபோல மஹிந்திரா நிறுவனத்தின் மற்றொரு பிரபலமான மாடலான ஸ்கார்பியோவின் புதிய ஃபேஸ்லிஃப்ட் மாடல் விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2002ல் ஸ்கார்பியோ இந்திய சந்தைக்கு வெளியான பின்னர் இந்தியாவில் எஸ்.யூ.வி செக்மெண்டில் மஹிந்திரா நிறுவனம் தான் கில்லி.

எஸ்.யூ.வி-க்கு பிறகு காரின் தேவைகள் காலங்களுக்கு ஏற்றவாறு அதிகரிக்க அதற்கு அடுத்து தொடர்ந்து உருவான மாடல்களிலும் மஹிந்திரா நிறுவனம் ஆதிக்கம் செலுத்தியது.

தற்போது மஹிந்திரா நிறுவனத்திற்கு அதிக விற்பனை திறனை தரும் மாடலாகவும் டியூவி 300 மாடல் கார் உள்ளது.
இந்தியாவில் டியூவி செக்மெண்டில் 300 பிளஸ் கார் வெளியானால் மேலும் மஹிந்திராவின் விற்பனை திறனுக்கு அது வலு சேர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








