சென்னையில் மஹிந்திரா எம்பிவி கார் சோதனை ஓட்டம்: ஸ்பை படங்கள்!

Written By:

டொயோட்டா இன்னோவா காருக்கு போட்டியாக எதிர்பார்க்கப்படும் மஹிந்திரா எம்பிவி கார் இன்று காலை சென்னையில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. அப்போது எமது கேமரா கண்களில் சிக்கிய ஸ்பை படங்களை பார்க்கலாம்.

சென்னையில் மஹிந்திரா எம்பிவி கார் சோதனை ஓட்டம்: ஸ்பை படங்கள்!

புத்தம் புதிய எம்பிவி கார் மாடலை மஹிந்திரா விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. U321 என்ற குறியீட்டுப் பெயரில் அழைக்கப்படும் இந்த எம்பிவி கார் தற்போது தீவிர சாலை சோதனை ஓட்டங்களில் நடத்தி ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

சென்னையில் மஹிந்திரா எம்பிவி கார் சோதனை ஓட்டம்: ஸ்பை படங்கள்!

இன்று காலை சென்னையில் இந்த புதிய எம்பிவி கார் சோதனை செய்யப்பட்டுக் கொண்டிருந்தது. விமான நிலையத்திற்கும் கிண்டி பகுதிக்கும் இடையில் ஜிஎஸ்டி ரோட்டில் இந்த புதிய மஹிந்திரா எம்பிவி காரின் ஸ்பை படங்களை இங்கே பார்வைக்கு வழங்குகிறோம்.

சென்னையில் மஹிந்திரா எம்பிவி கார் சோதனை ஓட்டம்: ஸ்பை படங்கள்!

மஹிந்திரா எம்பிவி காரின் முன்புற க்ரில் அமைப்பு எக்ஸ்யூவி500 எஸ்யூவியின் சாயலை பெற்றிருக்கிறது. புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. பம்பருக்கு சற்று மேலாக பனி விளக்குகளும், பூமராங் வடிவிலான எல்இடி பகல்நேர விளக்குகளும் இருக்கின்றன.

சென்னையில் மஹிந்திரா எம்பிவி கார் சோதனை ஓட்டம்: ஸ்பை படங்கள்!

பக்கவாட்டில் இன்னோவா போன்ற தோற்ற அமைப்பை பெற்றிருக்கிறது. சோதனை செய்யப்படும் காரில் 5 ஸ்போக்குகள் கொண்ட அலாய் வீல்கள் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. செங்குத்தான வடிவமைப்பில் டெயில் லைட்டுகள் தெரிகின்றன.

Recommended Video - Watch Now!
[Tamil] Jeep Compass Launched In India - DriveSpark
சென்னையில் மஹிந்திரா எம்பிவி கார் சோதனை ஓட்டம்: ஸ்பை படங்கள்!

மஹிந்திரா ஸைலோவுக்கு மாற்றாக இந்த புதிய எம்பிவி கார் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த கார் வட அமெரிக்காவை சேர்ந்த மஹிந்திரா ஆராய்ச்சி மைய வடிவமைப்பு நிபுணர்களால் டிசைன் செய்யப்பட்டு இருக்கிறது.

சென்னையில் மஹிந்திரா எம்பிவி கார் சோதனை ஓட்டம்: ஸ்பை படங்கள்!

புதிய மஹிந்திரா யு321 எம்பிவி கார் புத்தம் புதிய பிளாட்ஃபார்மில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. மோனோகாக் சேஸீயில் கட்டமைக்கப்பில் வருகிறது. இந்த கார் 7 சீட்டர் மற்றும் 8 சீட்டர் இருக்கை வசதி மாடல்களில் எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னையில் மஹிந்திரா எம்பிவி கார் சோதனை ஓட்டம்: ஸ்பை படங்கள்!

புதிய மஹிந்திரா எம்பிவி காரில் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் மற்றும் 1.6 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷன்களில் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய 1.6 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் சாங்யாங் நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

சென்னையில் மஹிந்திரா எம்பிவி கார் சோதனை ஓட்டம்: ஸ்பை படங்கள்!

வரும் பிப்ரவரி மாதம் நடைபெற இருக்கும் டெல்லி சர்வதேச ஆட்டோ எக்ஸ்போவில் இந்த புதிய எம்பிவி காரை மஹிந்திரா நிறுவனம் அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிகிறது. ரூ.10 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரையிலான விலையில் அறிமுகம் செய்யப்படும்.

மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Mahindra has been testing the U321 MPV for quite some time in India. Now, we have spotted the MPV yet again testing in Guindy, Chennai. This time the pictures reveal a lot of details of the vehicle.
Story first published: Wednesday, December 6, 2017, 11:14 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark