குட் நியூஸ்... உற்பத்தி நிலைக்கு செல்கிறது மஹிந்திரா எக்ஸ்யூவி ஏரோ கார்!

Written By:

மஹிந்திரா எக்ஸ்யூவி ஏரோ கான்செப்ட் கார் உற்பத்தி நிலைக்கு கொண்டு செல்லப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து கூடுதல் தகவல்களை தொடர்ந்து பார்க்கலாம்.

உற்பத்தி நிலைக்கு செல்கிறது மஹிந்திரா எக்ஸ்யூவி ஏரோ கார்!

மஹிந்திரா நிறுவனத்தின் மிகவும் வெற்றிகரமான மாடல் எக்ஸ்யூவி 500. கம்பீரமான தோற்றம் இந்த காருக்குபெரிய அளவிலான வாடிக்கையாளர்களை பெற்றுத் தந்துள்ளது. இந்த நிலையில், மஹிந்திரா எக்ஸ்யூவி 500 அடிப்படையில் உருவாக்கப்பட்ட புதிய கான்செப்ட் மாடல் ஒன்று கடந்த ஆண்டு நொய்டாவில் நடந்த சர்வதேச வாகன கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தது.

உற்பத்தி நிலைக்கு செல்கிறது மஹிந்திரா எக்ஸ்யூவி ஏரோ கார்!

மஹிந்திரா எக்ஸ்யூவி 500 எஸ்யூவியின் கூபே வடிவில் உருமாற்றம் செய்யப்பட்ட மாடலாக பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த இந்த கார் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. மஹிந்திரா எக்ஸ்யூவி ஏரோ என்ற பெயரில் இந்த கான்செப்ட் எஸ்யூவி குறிப்பிடப்பட்டது.

உற்பத்தி நிலைக்கு செல்கிறது மஹிந்திரா எக்ஸ்யூவி ஏரோ கார்!

இந்த கூபே மற்றும் எஸ்யூவியின் வடிவமைப்பு தாத்பரியங்களுடன் க்ராஸ்ஓவர் ரகத்திலான இந்த புதுமையான எஸ்யூவியின் டிசைனை பார்த்து பலருக்கும் இது தயாரிப்பு நிலைக்கு கொண்டு செல்லப்படுமா என்ற ஆவல் கேள்வியும், ஆவலும் எழுந்தது.

உற்பத்தி நிலைக்கு செல்கிறது மஹிந்திரா எக்ஸ்யூவி ஏரோ கார்!

இந்த சந்தேகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் புதிய செய்தி கிடைத்துள்ளது. ஆம். மஹிந்திரா எக்ஸ்யூவி ஏரோ கான்செப்ட் கார் தயாரிப்பு நிலைக்கு கொண்டு செல்லப்பட இருப்பதாக ஸிக்வீல்ஸ் தளம் செய்தி வெளியிட்டு இருக்கிறது.

உற்பத்தி நிலைக்கு செல்கிறது மஹிந்திரா எக்ஸ்யூவி ஏரோ கார்!

அடுத்த ஆண்டு நொய்டாவில் நடைபெற இருக்கும் சர்வதேச வாகன கண்காட்சியில் மஹிந்திரா எக்ஸ்யூவி ஏரோ காரின் தயாரிப்பு நிலை மாடல் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. அதேநேரத்தில், அடுத்த ஆண்டு இறுதியில் அல்லது 2019ம் ஆண்டு துவக்கத்தில் இதன் முழு அளவிலான உற்பத்தி துவங்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

உற்பத்தி நிலைக்கு செல்கிறது மஹிந்திரா எக்ஸ்யூவி ஏரோ கார்!

முகப்பு டிசைன் மஹிந்திரா எக்ஸ்யூவி 500 எஸ்யூவியை ஒத்திருக்கிறது. ஆனால், பக்கவாட்டிலும், பின்புறத்திலும் இதன் வடிவமைப்பு முற்றிலும் மாறுபடுகிறது. பின்னோக்கி சரியும் தாழ்வான கூரை அமைப்பை கொண்டுள்ளது.

உற்பத்தி நிலைக்கு செல்கிறது மஹிந்திரா எக்ஸ்யூவி ஏரோ கார்!

இந்த கார் மிகச் சிறப்பான ஏரோடைனமிக்ஸ் தத்துவத்தில் வடிவமைக்கப்பட்டிருப்பதாக மஹிந்திரா தெரிவிக்கிறது. எனவேதான், ஏரோ என்ற பெயரில் இதனை குறிப்பிடுகிறது. அதேநேரத்தில், தயாரிப்பு நிலைக்கு செல்லும் ஏரோ காரில் பல மாற்றங்களை எதிர்பார்க்கலாம்.

உற்பத்தி நிலைக்கு செல்கிறது மஹிந்திரா எக்ஸ்யூவி ஏரோ கார்!

மஹிந்திரா எக்ஸ்யூவி 500 எஸ்யூவியில் பயன்படுத்தப்படும் அதே, 2.2 லிட்டர் எம்ஹாக் டீசல் எஞ்சின்தான் இந்த காரிலும் பயன்படுத்தப்படும். மேலும், சிறப்பான எரிபொருள் சிக்கனம் கொண்ட மாடலாகவும் இருக்கும்.

மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Indian automaker Mahindra and Mahindra debuted the XUV Aero at the 2016 Auto Expo. Now, the coupe-styled SUV gets green signal for production.
Story first published: Saturday, July 1, 2017, 10:16 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark