மகிந்திரா ஸ்கார்ப்பியோ, எக்ஸ்யூவி500 பெட்ரோல் கார்கள் விரைவில் அறிமுகம்

Written By:

புதிதாக கார் வாங்குபவர்களின் கவனம் டீசல் வேரியண்டிலிருந்து மெல்ல பெட்ரோல் வேரியண்டுகளின் மீது திரும்பியுள்ளதால், தனது நிலையை தக்கவைத்துக் கொள்ள மகிந்திரா நிறுவனம் அதன் எக்ஸ்யுவி500 மற்றும் ஸ்கார்பியோ மாடல்களின் பெட்ரோல் வேரியண்ட் மற்றும் மேலும் இரண்டு புதிய கார்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

மஹிந்திரா எக்யூவி500 பெட்ரோல் கார் விரைவில் அறிமுகம்!

மகிந்திரா நிறுவனத்தின் பிரபல மாடல்களான எக்ஸ்யுவி500 மற்றும் ஸ்கார்பியோ பெட்ரோல் வேரியண்ட் கார்களை அடுத்த ஆண்டின்(2018) முதல் பாதியில் அறிமுகப்படுத்த அந்நிறுவனம் உத்தேசித்துள்ளது.

மஹிந்திரா எக்யூவி500 பெட்ரோல் கார் விரைவில் அறிமுகம்!

சாங்யாங் ‘டிவோலி' காரை அடிப்படையாகக் கொண்ட எஸ்யுவியான ‘எஸ்-201'என்ற குறியீட்டுச் சொல்லுடன் அழைக்கப்படும் மாடல், 2019ஆம் ஆண்டின் இரண்டாவது பாதியில் அறிமுகப்படுத்தப்படும் என மஹிந்திரா தெரிவித்துள்ளது.

மஹிந்திரா எக்யூவி500 பெட்ரோல் கார் விரைவில் அறிமுகம்!

தற்போது, எக்ஸ்யுவி500 கார் 2.2 லிட்டர் மற்றும் 1.99 லிட்டர் என இரண்டு டீசல் எஞ்சின் ஆப்சன்களுடன் கிடைக்கிறது. இவை முறையே ரூ.12.47 லட்சம் மற்றும் ரூ.17.57 லட்சம் (டெல்லி எக்ஸ் ஷோரூம்) என்ற விலையில் கிடைக்கின்றது.

மஹிந்திரா எக்யூவி500 பெட்ரோல் கார் விரைவில் அறிமுகம்!

எக்ஸ்யுவி500 பெட்ரோல் மாடலுக்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து, ஸ்கார்பியோ எஸ்யூவியின் பெட்ரோல் மாடலையும் அறிமுகப்படுத்த திட்டமிட்டிருப்பதாக மஹிந்திரா நிறுவனம் தெரிவித்தது.

மஹிந்திரா எக்யூவி500 பெட்ரோல் கார் விரைவில் அறிமுகம்!

பொதுவாகவே 2.0 லிட்டர்களுக்கு மேல் திறன் கொண்ட எஞ்சின்கள், புகை மாசை அதிகளவில் ஏற்படுத்துவதால் பொதுமக்கள் மத்தியில் அதற்கு ஆதரவு குறைந்து வருகிறது. இதன் காரணமாகவே எஸ்யுவி மாடல்களின் எஞ்சின்கள் 2.0 லிட்டருக்கு குறைவிலான மதிப்பு கொண்டவையாக தயாரிக்கப்படுகின்றன.

மஹிந்திரா எக்யூவி500 பெட்ரோல் கார் விரைவில் அறிமுகம்!

டெல்லியில் புகை மாசு காரணமாக டீசல் எஞ்சின்களுக்கும் தடை விதிக்கப்பட்டதன் காரணமாகக்கூட மஹிந்திரா நிறுவனம் இந்த முடிவுக்கு வந்திருக்கலாம் என்ற கூற்றும் முன்வைக்கப்படுகிறது.

பெட்ரோல் எஞ்சின் கொண்ட மஹிந்திராவின் முதல் எஸ்யுவியான கேயுவி100 மாடல் காரின் படங்கள் :

English summary
Mahindra has confirmed the launch of the XUV500 petrol and the Scorpio, during the next fiscal year

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark