மஹிந்திரா எக்ஸ்யூவி500 ஸ்போர்ட்ஸ் எடிசன் அறிமுகம்!

Written By:

டாடா ஹெக்ஸா வருகையால் ஏற்பட்டிருக்கும் நெருக்கடியை தணித்துக் கொள்ளும் விதத்தில், கூடுதல் சிறப்பம்சங்களுடன் மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியின் ஸ்போர்ட்ஸ் எடிசன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. வாடிக்கையாளர்களை கவர்வதற்காக சேர்க்கப்பட்டு இருக்கும் கூடுதல் அம்சங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

மஹிந்திரா எக்ஸ்யூவி500 ஸ்போர்ட்ஸ் எடிசன் அறிமுகம்!

மஹிந்திரா எக்ஸ்யூவி500 ஸ்போர்ட்ஸ் என்ற பெயரில் இந்த புதிய மாடல் வந்துள்ளது. இது குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டும் லிமிடேட் எடிசனாக விற்பனை செய்யப்படும். எனவே, இந்த மாடலின் மீது ஈர்ப்பட்டவர்கள் உடனடியாக முன்பதிவு செய்துவிடுவது நல்லது.

மஹிந்திரா எக்ஸ்யூவி500 ஸ்போர்ட்ஸ் எடிசன் அறிமுகம்!

மஹிந்திரா எக்ஸ்யூவி500 ஸ்போர்ட்ஸ் எடிசன் மாடலில் கவர்ச்சிகரமான பாடி டீகெல் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ளன. வலிமையான தோற்றத்தை தரும் புதிய அலாய் வீல்கள், ஆரஞ்ச் வண்ண ரூஃப் ரெயில்கள், கதவு கைப்பிடிகள் கொடுக்கப்பட்டுள்ளன. வெளிப்புறத்திலும், உட்புறத்திலும் ஸ்போர்ட்ஸ் பேட்ஜுகள் கொடுக்கப்பட்டுள்ளன.

மஹிந்திரா எக்ஸ்யூவி500 ஸ்போர்ட்ஸ் எடிசன் அறிமுகம்!

இந்த புதிய லிமிடேட் எடிசன் மாடலில் 7 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சாதனம் உள்ளது. வழிகாட்டும் வசதி, பொழுதுபோக்கு வசதிகளை தருவதுடன், ரிவர்ஸ் கேமராவை இந்த இன்ஃபோடெயின்மென்ட் சாதனம் சப்போர்ட் செய்யும்.

மஹிந்திரா எக்ஸ்யூவி500 ஸ்போர்ட்ஸ் எடிசன் அறிமுகம்!

இந்த காரின் டபிள்யூ10 என்ற டாப் வேரியண்ட்டில் நெடுஞ்சாலைகளில் ஆக்சிலரேட்டர் கொடுக்காமல் குறிப்பிட்ட வேகத்தில் காரை செலுத்த உதவும் க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம், வெப்பநிலையை தக்க வைக்கும் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், மழையின்போது தானாக இயங்கும் ரெயின் சென்சிங் வைப்பர்கள், ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்டுகள் போன்ற வசதிகள் அளிக்கப்பட்டுள்ளன.

மஹிந்திரா எக்ஸ்யூவி500 ஸ்போர்ட்ஸ் எடிசன் அறிமுகம்!

இந்த காரில் 140 பிஎச்பி பவரையும், 330 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்ல 2.2 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த கார் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கும். ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மாடலில் எஞ்சின் பவர் அனைத்து சக்கரங்களுக்கும் செலுத்தும் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் உள்ளது.

மஹிந்திரா எக்ஸ்யூவி500 ஸ்போர்ட்ஸ் எடிசன் அறிமுகம்!

புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி500 ஸ்போர்ட்ஸ் எடிசன் மாடல் காரின் மேனுவல் கியர்பாக்ஸ் மாடல் ரூ.16.5 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும், ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மாடல் ரூ.17.56 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும் வந்துள்ளது. இவை மும்பை எக்ஸ்ஷோரூம் விலையை அடிப்படையாகக் கொண்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

புதிய யமஹா எஃப்இசட்250 பைக்கின் படங்கள்!

புதிய யமஹா எஃப்இசட்250 பைக்கின் படங்களின் தொகுப்பை கீழே உள்ள கேலரியில் காணலாம்.

English summary
Mahindra XUV500 Sportz launched in India for Rs 16.5 lakh, based on the W10 trim of the SUV.
Story first published: Monday, February 6, 2017, 15:19 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark