ரூ.15.45 லட்சம் விலையில் புதிய எக்ஸ்.யூ.வி500 டபுள்யூ9 காரை வெளியிட்ட மஹிந்திரா..!!

Written By:

மஹிந்திரா நிறுவனம் தயாரித்துள்ள புதிய எக்ஸ்.யூ.வி 500 டபுள்யூ 9 மாடல் கார் இந்தியாவில் ரூ. 15.45 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) விலையில் விற்பனைக்கு வந்துள்ளது.

மஹிந்திரா எக்ஸ்.யூ.வி500 டபுள்யூ9 கார் விற்பனைக்கு அறிமுகம்..!!

தற்போதைய மாடலின் செயல்திறனை பெற்றுள்ள இந்த புதிய காரில் 2.2 லிட்டர் டர்போ டீசல் எஞ்சின் உள்ளது.

இதன்மூலம் 138 பிஎச்பி பவர் மற்றும் 330 என்.எம் டார்க் திறன் கிடைக்கும். 2 கியர்பாக்ஸ் தேவை இந்த காரில் உள்ளது.

மஹிந்திரா எக்ஸ்.யூ.வி500 டபுள்யூ9 கார் விற்பனைக்கு அறிமுகம்..!!

முன்பக்க சக்கரங்களை இயங்கும் திறன் பெற்ற 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் என இருவேறு கியர்பாக்ஸ் தேவைகளுடன் புதிய எக்ஸ்.யூ.வி 500 டபுள்யூ 9 கார் அறிமுகமாகி உள்ளது.

மஹிந்திரா எக்ஸ்.யூ.வி500 டபுள்யூ9 கார் விற்பனைக்கு அறிமுகம்..!!

மேலும் இந்த இரண்டு மாடல்களோடு ஆல்-வீல் டிரைவிங் முறையில் இயங்கும் வேறொரு தேர்வும் எக்ஸ்.யூ.வி 500 டபுள்யூ 9 காரில் மஹிந்திரா அறிமுகப்படுத்தியுள்ளது.

Recommended Video - Watch Now!
Jeep Compass Launched In India | In Tamil - DriveSpark தமிழ்
மஹிந்திரா எக்ஸ்.யூ.வி500 டபுள்யூ9 கார் விற்பனைக்கு அறிமுகம்..!!

ஆண்டார்யாடு ஆட்டோ, புஷ் பட்டன் ஸ்டார்ட், கீலெஸ் எண்ட்ரி மற்றும் ஈகோ சென்ஸ் என பல்வேறு தொழில்நுட்பங்களை பெற்ற 7.0 இஞ்ச் இன்ஃபோடெய்ன்மண்ட் சிஸ்டம் இந்த காரின் கூடுதல் சிறப்பு.

மஹிந்திரா எக்ஸ்.யூ.வி500 டபுள்யூ9 கார் விற்பனைக்கு அறிமுகம்..!!

ஆனால் பல்வேறு மொபைல் செயலிகளை இன்ஃபோடெய்ன்மண்ட் சிஸ்டத்தோடு இணைக்க முடியாமல் இருப்பது எக்ஸ்.யூ.வி 500 டபுள்யூ 9 காரின் மைனஸ்.

மஹிந்திரா எக்ஸ்.யூ.வி500 டபுள்யூ9 கார் விற்பனைக்கு அறிமுகம்..!!

ஆண்டி பிஞ்ச் உடன் கூடிய மின்சாரத்தால் இயங்கும் சன்ரூஃப், டைனமிக் அசிஸ்ட் கொண்ட ரிவர்ஸ் கேமரா, வளையும் ஹெட்லேம்புகள் போன்ற அம்சங்கள் எக்ஸ்.யூ.வி 500 டபுள்யூ 9 காரில் கவர்கின்றன.

மஹிந்திரா எக்ஸ்.யூ.வி500 டபுள்யூ9 கார் விற்பனைக்கு அறிமுகம்..!!

டூயல் ஃபிரெண்டு ஏர்பேகுகள், இபிடி உடன் கூடிய ஏபிஎஸ், ரோல் ஓவர் மிட்டிகேஷன் மற்றும் டயர்கள் அழுத்தத்தை கண்காணிக்கும் அமைப்பு என இதிலுள்ள பாதுகாப்பு கட்டமைப்புகளும் கவனமீர்க்கின்றன.

மஹிந்திரா எக்ஸ்.யூ.வி500 டபுள்யூ9 கார் விற்பனைக்கு அறிமுகம்..!!

எக்ஸ்.யூ.வி 500 டபுள்யூ 9 காரின் அறிமுக விழாவில் பேசிய மஹிந்திரா நிறுவனத்தின் மூத்த விற்பனை அதிகாரி வீஜய் ராம் நக்ரா,

"2011ல் எக்ஸ்.யூ.வி 500 கார் அறிமுகமான போது, அது தனித்துவம் பெற்ற வாகனமாக அடையாளம் பதித்தது. அதேபோன்ற வரவேற்பு இந்த காருக்கும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது" என்று கூறினார்.

மஹிந்திரா எக்ஸ்.யூ.வி500 டபுள்யூ9 கார் விற்பனைக்கு அறிமுகம்..!!

மஹிந்திராவின் புதிய எக்ஸ்யூவி 500 டபுள்யூ 9 கார் இந்தியாவில் ஜீப் காம்பஸ், டாடா ஹெக்ஸா மற்றும் ஹூண்டாய் கிரெட்டா கார்களுக்கு போட்டியாக களமிறங்கியுள்ளது.

மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Read in Tamil: Mahindra XUV 500 W9 Launched in India. Click for Launch, Price, Specification, Images and More
Story first published: Thursday, October 5, 2017, 12:30 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark